கரண்ட் பில் வந்துருச்சா.. உங்களை மொபைல் நம்பரை லிங்க் பண்ணீட்டீங்களா.. இதை மட்டும் உடனே செய்யுங்க!
சென்னை: உங்களது மொபைல் எண்ணை எப்படி மின் கட்டண எண்ணுடன் இணைத்தால் உங்களுக்கு மின் கட்டணம், மின் நிறுத்தம் குறித்து தகவல் எஸ்எம்எஸ்லேயே வரும். பொதுவாக மின் கட்டண எண்ணை நீங்கள் இரண்டு வழிமுறைகளில் இணைக்கலாம். அது எப்படி என்பதை பார்ப்போம்.
தமிழ்நாடு மின்சார வாரியம் ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணத்தை உங்கள் வீடுகளுக்கே வந்து கணக்கிடுகிறது. அப்படி கணக்கிடும் நாட்கள் கொஞ்சம் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்க வாய்ப்பு உள்ளது. மின் கட்டணம் எவ்வளவு என்பதை அட்டையில் எழுதி வைத்து செல்வார். ஆனால் பெரும்பாலான வீடுகளில் அட்டைகளை பார்க்க முடிவது இல்லை. அட்டைக்கு பதிலாக ஆன்லைனிலேயே மின் கட்டணத்தை பார்க்க விரும்புகிறார்கள். ஆனால் மொபைலில் மின் கட்டணம் நமக்கு வராத காரணத்தால் நம்முடைய மின் கட்டணம் எவ்வளவு என்பதை மறந்துவிடுகிறோம்.

இதனால் குறிப்பிட்ட கடைசி நாளில் அடித்து பிடித்து மின் கட்டணம் செலுத்த வேண்டி நிலை வருகிறது. அல்லது மின்கட்டணத்திற்கு தேவை இல்லாமல் அபராதம் செலுத்தும் நிலை வருகிறது.
இந்த பிரச்சனையை தவிரிக்க நீங்கள் உங்கள் மொபைல் எண்ணை மின் கட்டண எண்ணுடன் இணைத்துவிடுங்கள். அப்படி இணைத்தால் உங்கள் மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக மின் கட்டணம் எவ்வளவு என்பது வந்துவிடும். இதன் மூலம் நீங்கள் உங்களின் மின் கட்டணத்தைக் கடைசித் தேதிக்கு முன்பாகச் செலுத்திவிடலாம். அபராதம் உள்ளிட்ட தேவையற்ற சிக்கலை தவிர்க்க முடியும்.
மின் கட்டணம் என்று மட்டுமில்ல. மாதாந்திர பராமரிப்பு காரணமாக மாதந்தோறும் ஒரு நாள் மின்வாரியத்தால் மின்சாரம் துண்டிக்கப்படுவது குறித்தும் உங்கள் மொபைலிலேயே அறிய முடியும். உங்கள் மொபைல் எண்ணை மின் கட்டணத்துடன் இணைத்துவிட்டால் மின் வாரியத்தால் நமது மொபைல் எண்ணுக்கு முன்னதாகவே மின் நிறுத்தம் குறித்த எஸ்எம்எஸ் அனுப்பி வைக்கப்படும்.எனவே இந்த இரண்டு விஷயங்களும் பேருதவியாக இருக்கும்.
உங்களது மொபைல் எண்ணை எப்படி மின் கட்டண எண்ணுடன் இணைப்பது என்பதை இப்போது பார்ப்போம். பொதுவாக மின் கட்டண எண்ணை நீங்கள் இரண்டு வழிமுறைகளில் இணைக்கலாம். நேரடியாக நீங்களே உங்களின் பகுதி மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று மின் இணைப்பு எண்ணை கூறி மொபைல் எண்ணை குறிப்பிட்டு விண்ணப்பம் அளித்தால் கணினியில் பதிவு செய்து விடுவார்கள். அதன்பிறகு உங்கள் மொபைலுக்கு இபி பில் மற்றும் மின்சாரம் நிறுத்தம் குறித்து முறையாக எஸ்எம்எஸ் பெற முடியும்.

இரண்டாவது வழியில் நீங்கள் இணையதளம் மூலமாகவும் உங்கள் மொபைல் எண்ணை இணைக்க முடியும். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் https://www.tnebnet.org/awp/login என்ற வெப்சைட்டிற்கு செல்லுங்க. அதில் உள்ள service no காலத்தில் Existing Service Connection Number என நீங்கள் தேர்வு செய்யுங்கள்.
பின்னர் Region என்பதில் select செய்து 9 பிராந்தைகளில் உங்களுடைய பிராந்திய நம்பரை தேர்ந்தெடுக்க வேண்டும்.இதனைத்தொடர்ந்து உங்களுடைய மொபைல் போன் எண் உள்ளிட்ட விபரங்களை உள்ளீடு செய்து பதிவு செய்யுங்கள். இப்படி செய்தால் உங்கள் மொபைல் எண் நமது மின் கட்டண எண்ணுடன் இணைக்கப்பட்டுவிட்டது என்ற என்று உங்கள் திரையில் தோன்றும். அதன்பிறகு உங்களுடைய மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்திகள் வந்துவிடும்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications