பான் கார்டில் செய்ய வேண்டிய மிக முக்கியமான மாற்றம்.. ரொம்ப ஈஸிங்க.. இதை பண்ணுனா போதும்!
சென்னை: பான் கார்டில் முக்கியமான விவரங்களை மாற்றுவது எப்படி என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். பின்வரும் படிநிலைகளை பின்பற்றினால் பான் கார்டில் எளிமையாக மாற்றங்களை செய்ய முடியும்.
நாம் வைத்து இருக்கும் அடிப்படை அட்டைகளில் ஒன்றாக பான் கார்டு அட்டையும் மாறிவிட்டது. பான் அட்டை பயன்படுத்துவதன் மூலம்தான் வங்கி தொடர்பான பல சேவைகளை நாம் பெற முடிகிறது.

நாடு முழுக்க பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. பான் கார்டு என்பது நம்முடைய நிரந்தர கணக்கு எண் ஆகும். நமது அனைத்து வங்கி எண்கள், வருமான வரி கணக்கு என்று அனைத்துடனும் இந்த எண் இணைக்கப்பட்டு இருக்கும்.
பான் அட்டை: லோன் எடுக்க, வருமான வரி தாக்கல் செய்வது, வங்கியில் அதிக அளவு பண பரிவர்த்தனை செய்வது போன்ற செயல்களுக்கு பான்கார்டு அவசியம். நம் வரவு செலவு அனைத்தும் இதன் மூலமே கண்காணிக்கப்படுகிறது.
இதற்காக கால அவகாசம் ஏற்கனவே பல முறை நீட்டிக்கப்பட்டுவிட்டது. பல முறை இந்த அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. தற்போது இதற்கான அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. மக்கள் பலரும் பான் கார்டை இணைக்காமல் இருந்த நிலையில் ஜூன் 30 வரை இணைக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதில் கட்டணம் இன்றி பான் அட்டையை இணைக்க ஜூன் 30ம் தேதியுடன் நேரம் முடிந்துவிட்டது. அதற்குள் உங்கள் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். இல்லையென்றால் உங்கள் பான் செயலற்றதாகி விடும்.
மாற்றங்கள்: இந்த ஆதார் இணைப்பிற்கு இடையில்தான் பான் கார்டில் பலரும் முக்கியமான மாற்றங்களை செய்ய விரும்புவார்கள். சிலர் முகவரி உள்ளிட்ட அடிப்படை விவரங்களை மாற்ற வேண்டும் என்று நினைப்பார்கள். ஆதார் கார்டில் மாற்றங்களை செய்ய தெரிந்த பலருக்கும் பான் கார்டில் எப்படி மாற்றங்களை செய்வது என்று தெரியாது.
பான் கார்டில் முக்கியமான விவரங்களை மாற்றுவது எப்படி என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். பின்வரும் படிநிலைகளை பின்பற்றினால் பான் கார்டில் எளிமையாக மாற்றங்களை செய்ய முடியும். உதாரணமாக பான் கார்டில் முகவரியை எப்படி மாற்றுவது என்று இங்கே பார்க்கலாம்.
பான் கார்டில் முகவரி மாற்றத்தாய் தொடங்க, UTI Infrastructure Technology and Service Ltd (UTIITSL) போர்ட்டலுக்கு செல்ல வேண்டும். மாற்றங்கள் மற்றும் திருத்தங்கள் உட்பட பல்வேறு பான் கார்டு தொடர்பான சேவைகளுக்கான பிரத்யேக தளமாக இந்த போர்டல் செயல்படுகிறது.
UTIITSL போர்ட்டலில், நீங்கள் "Change/Correction in PAN Card" விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும், அதைத் தொடர்ந்து Apply for Change/Correction in PAN Card Details" என்பதைத் தேர்ந்தெடுத்து "Next" என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
அடுத்த பக்கத்தில், நீங்கள் உங்களின் பான் எண்ணை கொடுத்து, "Aadhaar Base e-KYC Address Update" என்பதை தேர்வு செய்ய வேண்டும். இதன் மூலம் பான் கார்டின் முகவரியை ஆதார் கார்ட் முகவரி அடிப்படையில் ஒவ்வொருமுறையும் எளிமையாக அப்டேட் செய்ய முடியும்.
அடுத்து, "Submit" என்பதை அழுத்துவதற்கு முன், உங்களின் ஆதார் எண், மின்னஞ்சல் ஐடி, மொபைல் எண் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய தேவையான அனைத்து விவரங்களையும் நீங்கள் வழங்க வேண்டும்.
Submit முடிந்ததும், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) அனுப்பப்படும். இதை கொடுத்ததும் மாற்றங்கள் அப்டேட் ஆகிவிடும்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications