வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் மேற்கொள்வது எப்படி? ஈஸியாக ஆன்லைனிலேயே செய்யலாம்!
சென்னை: வாக்காளர் அடையாள அட்டையில் முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்வது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இதன் மூலம் முகவரி மாற்றம் உள்ளிட்டவைகளை ஆன்லைனிலேயே திருத்தம் மேற்கொள்ளலாம்.
இதுகுறித்து ஜேகேவி எனும் எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: வாக்காளர் அடையாள அட்டை திருத்தம் செய்வது எப்படி?
Voter ID: ஆன்லைனில் வாக்காளர் அடையாள அட்டை முகவரியை மாற்றுவது எப்படி..? எளிய வழிமுறைகள் என்னென்ன?

இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள முகவரியை மாற்றிக்கொள்ளும் வசதியை ஆன்லைன் வழியாக வழங்கி வருகிறது. இதன் மூலம், வீடு வாங்குதல், வாடகை வீட்டை மாற்றி செல்லுதல் போன்ற காரணங்களால் முகவரி மாற்றம் ஏற்படும்போது, வாக்காளர்கள் எளிதாக தங்களது விவரங்களைப் புதுப்பிக்கலாம்.
மத்திய அரசும் மாநில அரசுகளும் மக்களுக்கான சேவைகளை ஆன்லைன் வாயிலாக அளிப்பதில் பெரும் தொகையை முதலீடு செய்து வருகிறது. இதன் வாயிலாகத் தான் முதல் பட்டா, சிட்டா வாங்குவது முதல் அனைத்தையும் ஆன்லைன் மூலம் மக்கள் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் வாக்காளர் அடையாள அட்டை முகவரி மாற்றத்தை ஆன்லைன் மூலம் செய்யும் வழிமுறையை இப்போது பார்ப்போம்.
தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திற்குச் செல்லவும்: உங்கள் மாநிலம் (https://voters.eci.gov.in) தேர்தல் தொடர்பான இணையதளத்திற்குச் சென்று, "Online Voter Registration" என்ற பகுதியைத் தேர்ந்தெடுக்கவும். இதற்கான நேரடி படிவம் 8-ஐ தேர்ந்தெடுக்கவும்: இந்த பக்கத்தில் காட்டப்படும் பல்வேறு விருப்பங்களில் இருந்து, "Form 8" என்ற விருப்பை தேர்ந்தெடுக்கவும். இந்த படிவம், வாக்காளர் விவரங்களை திருத்துவதற்குப் பயன்படுத்தப்படும்.
பதிவு செய்யவும்: புதிய பக்கத்தில், உங்கள் மொபைல் எண் மற்றும் பாஸ்வேர்ட் மூலம் பதிவு செய்யவும். இதற்குப் பிறகு, உங்கள் மொபைலுக்கு ஒரு OTP (One Time Password) அனுப்பப்படும். இந்த OTP-ஐ உள்ளீட்டு பெட்டியில் பதிவு செய்யவும்.
விவரங்களை நிரப்பவும்: உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளீட்டு பெட்டியில் பதிவு செய்யவும். பின்னர், திறக்கும் படிவம் 8-இல் உங்கள் பெயர், பழைய முகவரி, புதிய முகவரி, மாநிலம், தொகுதி போன்ற விவரங்களை கேட்கப்படும் இடங்களில் துல்லியமாக நிரப்பவும்.
ஆதார் அட்டை விவரங்கள்: உங்கள் ஆதார் அட்டை எண்ணையும் பதிவு செய்ய வேண்டும்.
ஆவணத்தை பதிவேற்றவும்: உங்கள் புதிய முகவரியை உறுதிப்படுத்தும் வகையில், மின்சார பில், வங்கி பாஸ்புத்தகம், ஆதார் அட்டை போன்ற ஏதேனும் ஒரு அதிகாரப்பூர்வ ஆவணத்தின் நகலை பதிவேற்றவும்
படிவத்தை சமர்ப்பிக்கவும்: அனைத்து விவரங்களையும் பதிவு செய்து, ஆவணத்தை பதிவேற்றிய பிறகு, படிவத்தை சமர்ப்பிக்கவும்.
குறிப்பு எண்: உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு, உங்களுக்கு ஒரு குறிப்பு எண் வழங்கப்படும். இந்த எண்ணைப் பயன்படுத்தி, நீங்கள் உங்கள் விண்ணப்பத்தின் நிலையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்.
சரிபார்ப்பு மற்றும் புதிய அட்டை: உங்கள் விண்ணப்பம் தேர்தல் அதிகாரிகளால் சரிபார்க்கப்படும். சரிபார்ப்பு வெற்றிகரமாக முடிந்தால், உங்கள் புதிய முகவரியுடன் கூடிய புதிய வாக்காளர் அடையாள அட்டை உங்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தமிழ்நாடு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்.. யார் இவர்? வெங்கடராமனை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
தமிழகத்தின் 44 தனித்தொகுதிகளில் 90% வேட்பாளர்கள் தகுதி நீக்கம்? அர்ஜுன் சம்பத் பொதுநல வழக்கு -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
ஏழை மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. தனியார் பள்ளிகளில் LKG முதல் இலவசம்.. ஹென்றி சொன்ன தேதியை பாருங்க -
Spot the difference: இந்த இரு படங்களுக்கிடையே 3 வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள்! சவாலுக்கு ரெடியா? -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
இடி, மின்னலுடன் கனமழை.. ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்! மக்களே உஷார் -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்!












Click it and Unblock the Notifications