டாஸ்மாக்கில் இன்று முதல் ஆன்லைனில் மதுவாங்குவது எப்படி? விளக்க வீடியோ வெளியிட்ட நிர்வாகம்
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்து டாஸ்மாக் கடையில் பிடித்த மதுபானங்களை வாங்கி கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. எப்படி ஆன்லைனில் மதுபானம் வாங்குவது? என்பது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் விளக்க வீடியோவை வெளியிட்டுள்ளது.
தமிழக டாஸ்மாக் கடைகளில் கூட்டம் கூடுவதை தடுக்கவும், பாட்டிலுக்கு கூடுதலாக கட்டணம் வசூலிப்பதை கட்டுப்படுத்தவும் ஆன்லைனில் மதுபானம் விற்பனை செய்யும் முறையை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இதற்காக டாஸ்மாக் நிர்வாகம் பிரத்யேகமாக செயலி ஒன்றை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி செயலிக்கு முன்பாக தற்போது பிரத்யேகமாக இணையதளம் ஒன்றை உருவாக்கி உள்ளது. அந்த இணையதளத்தின் பெயர் tasmac.tn.gov.in என்பதாகும். இந்த இணையதளம் வழியாக ஒவ்வொருவரும் ஆன்லைனில் முன்பதிவு செய்து மதுபானத்தை பெற முடியும்.
டாஸ்மாக்கில் இன்று முதல் ஆன்லைனில் ஆர்டர் செய்து மதுபானம் வாங்குவது எப்படி? என்பது தொடர்பாக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளதாவது:
மதுபானத்தை ஆன்லைனில் Order செய்வது எப்படி?.. செயல்முறையை விளக்கி வீடியோ வெளியிட்ட டாஸ்மாக்..#TASMAC #ViralWatch #OIReels #Oneindia #TamilOneindia pic.twitter.com/4QkCBxZuts
— Oneindia Tamil (@thatsTamil) August 5, 2026
* முதலில் tasmac.tn.gov.in இணையதளத்துக்கு செல்ல வேண்டும். வயது 21 என்பதை உறுதி செய்ய வேண்டும்.
* shop locator பக்கத்துக்கு செல்ல வேண்டும். உங்களின் ஏரியாவின் அருகே உள்ள டாஸ்மாக் கடையை தேர்வு செய்து அங்குள்ள மதுபானங்களின் விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும்.
* பிடித்த மதுபானங்களை Cart செய்ய வேண்டும்.
* செல்போன் எண்ணை பதிவிட்டு ஓடிபி மூலமாக சரிபார்க்க வேண்டும்.
* ஆர்டரை உறுதி செய்ய ஆன்லைனில் பணம் செலுத்த வேண்டும்.
* ரசீது உருவாகும். ரசீதில் உள்ள க்யூஆர் கோட்டை கவுண்ட்டரில் ஸ்கேன் செய்து பொருட்களை பெற்று கொள்ள வேண்டும்.
* ஆர்டர் செய்யும்போது அதேநாளில் மதுபானங்களை உரிய டாஸ்மாக் கடைக்கு சென்று பெற்று கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் ரூ.10 கட்டணமாக பிடித்தம் செய்யப்பட்டு மற்ற தொகை ரீபண்ட்டாக திரும்ப வழங்கப்படும்'' என்பன போன்ற விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு படிநிலைகளிலும் எப்படி செல்ல வேண்டும்? என்பது தொடர்பாக வீடியோவில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
