மனுசங்க மாதிரி இல்லை.. அச்சுறுத்தும் AI ஹேக்கர்கள்.. சிக்கினால் பணம் பறிபோகும்! எப்படி காப்பது? TIPS

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்பெல்லாம் மனிதர்கள் ஹேக் செய்வார்கள்.. அதை அரசு நிறுவனங்கள், அரசு அமைப்புகள் தடுக்கும். இதற்காக உலகம் முழுக்க அரசுகள் சைபர் கிரைம் தடுப்பு நிறுவனங்கள் வைத்துள்ளன. ஒருவர்.. எவ்வளவு புத்திசாலியான மனிதனாக இருந்தாலும்.. ஒரு குறிப்பிட்ட அளவிற்குத்தான் ஹேக்கிங் நுட்பங்கள் தெரியும். ஆனால் அதுவே எல்லாம் தெரிந்த ஏஐ ஏஜெண்டுகள்.. ஹேக் செய்தால் எப்படி இருக்கும்? அதுவும் அந்த ஏஐ உங்கள் வங்கி கணக்கை குறி வைத்தால் என்ன ஆகும்?

மனிதர்களின் உதவியே இல்லாமல் தானாகவே செயல்படும் ஏஜென்டிக் AI ஹேக்கர்கள் குறித்து அமெரிக்காவின் FBI மற்றும் கூகுள் நிறுவனங்கள் உலகம் முழுவதும் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்த ஏஜென்டிக் AI ஹேக்கர்கள் சுயமாக ஹேக் செய்யும் திறன் கொண்டவை. சாதாரண வங்கி கணக்கு தொடங்கி அமெரிக்கா போன்ற வல்லரசு நாட்டின் தேசிய பாதுகாப்பு மையத்தையே ஹேக் செய்யும் அபாயம் கொண்டவை இவை என்று எச்சரித்துள்ளன.

AI hackers

ஏஐ ஹேக்கர்கள்

உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. நமது அன்றாட வேலைகளை எளிதாக்க வந்த இந்த AI தொழில்நுட்பத்தை, இப்போது சைபர் குற்றவாளிகள் தங்களின் மிகப்பெரிய ஆயுதமாக மாற்றத் தொடங்கியுள்ளனர்.

முக்கியமாக.. இவை எளிதாக உங்கள் வங்கி கணக்கை ஹேக் செய்யும் திறன் கொண்டது. இந்த AI கருவிகள் ஏற்கனவே இணையத்தில் கசிந்த பழைய பாஸ்வேர்டுகள் மற்றும் அப்டேட் செய்யப்படாத போன்களின் வழியாகத்தான் எளிதில் கணக்களுக்குள் உள்ளே நுழைகின்றன.

இந்த நவீன AI ஹேக்கர்களிடம் இருந்து உங்கள் செல்போனையும், வங்கிப் பணத்தையும் பாதுகாக்கச் சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் கூறும் மிக முக்கியமான டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்.

பழைய பாஸ்வேர்டுகளை உடனே மாற்றுங்கள்

பலரும் ஜிமெயில், ஃபேஸ்புக், வங்கி ஆப் என எல்லாவற்றுக்கும் ஒரே பாஸ்வேர்டை வைத்துள்ளனர். AI ஹேக்கர்கள் ஒரு தளத்தில் கசிந்த பாஸ்வேர்டை வைத்து மற்ற அனைத்து கணக்குகளையும் நொடியில் திறந்துவிடுவார்கள். எனவே, வங்கி கணக்கு மற்றும் இ-மெயிலுக்கு எனத் தனித்தனியாக, குறைந்தது 10 எழுத்துக்கள் கொண்ட கடினமான பாஸ்வேர்டுகளை.. முக்கியமாக எண்கள் மற்றும் சிம்பிள்கள் கலந்து பாஸ்வேர்டுகளை பயன்படுத்துங்கள்.

Two-Factor Authentication (2FA) கட்டாயம் ஆன் செய்யுங்கள்

வெறும் பாஸ்வேர்டு மட்டும் இப்போது போதாது. உங்கள் வங்கி ஆப், வாட்ஸ்அப், ஜிமெயில் ஆகியவற்றில் இரண்டு அடுக்குப் பாதுகாப்பை (2FA / MFA) உடனே ஆன் செய்யுங்கள். குறிப்பாக, SMS மூலம் வரும் OTP-ஐ விட 'Google Authenticator' போன்ற ஆப்கள் அல்லது கைரேகை (Passkey) பாதுகாப்பைப் பயன்படுத்துவது AI ஹேக்கர்களிடம் இருந்து முழுப் பாதுகாப்பு தரும்.

போன் மற்றும் ஆப்களை உடனுக்குடன் அப்டேட் செய்யுங்கள்

AI ஹேக்கர்களின் முக்கிய வேலையே, சாஃப்ட்வேர் அப்டேட் செய்யப்படாத பழைய போன்களில் உள்ள பாதுகாப்பு ஓட்டைகளைக் கண்டுபிடித்துத் தாக்குவதுதான். எனவே, உங்கள் ஆண்ட்ராய்டு அல்லது ஐபோனில் செக்யூரிட்டி அப்டேட் வந்தால் தள்ளிப்போடாமல் உடனே அப்டேட் செய்யுங்கள். வங்கி ஆப்களை Play Store அல்லது App Store வழியாக மட்டுமே டவுன்லோட் செய்ய வேண்டும்.

வங்கி பரிவர்த்தனை அலர்ட் மற்றும் வரம்பு

உங்கள் வங்கி கணக்கில் ரூ.1 எடுத்தாலும் உடனே SMS மற்றும் இ-மெயில் அலர்ட் வருமாறு செட் செய்து வையுங்கள். ஹேக்கர்கள் முதலில் 1 ரூபாய் எடுத்துச் சோதனை செய்துவிட்டுதான் பெரிய தொகையைத் திருடுவார்கள். மேலும், UPI மற்றும் ஏடிஎம் கார்டுகளில் தினசரி பணப் பரிவர்த்தனை வரம்பை உங்களுக்குத் தேவையான குறைந்த அளவில் செட் செய்து வைப்பது நல்லது.

இலவச பொது வைஃபை ஆபத்து

ரயில் நிலையம், விமான நிலையம், ஹோட்டல்களில் கிடைக்கும் இலவச வைஃபை நெட்வொர்க்கில் இணைந்திருக்கும்போது எந்தக் காரணத்தைக் கொண்டும் வங்கி ஆப்களைப் பயன்படுத்தவோ, பணம் அனுப்பவோ கூடாது. பொது வைஃபை வழியாக ஹேக்கர்கள் உங்கள் போன் டேட்டாவை எளிதில் திருட முடியும்.

தெரியாத லிங்க் மற்றும் APK ஃபைல்களைத் தொடாதீர்கள்

"வங்கி கணக்கு முடக்கப்படும்", "கூரியர் வந்துள்ளது" என வரும் குறுஞ்செய்திகளில் உள்ள லிங்க்குகளைக் கிளிக் செய்யாதீர்கள். வாட்ஸ்அப்பில் வரும் தெரியாத APK ஃபைல்களை இன்ஸ்டால் செய்யக் கூடாது. அதேபோல வங்கி அதிகாரிகள் போல் பேசி 'Screen Sharing' ஆப்களை டவுன்லோட் செய்யச் சொன்னால் உடனே அழைப்பைத் துண்டித்துவிடுங்கள்.

AI குரல் மோசடியில் உஷார்

AI தொழில்நுட்பம் மூலம் உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களின் குரலிலேயே பேசி அவசரமாகப் பணம் கேட்கும் மோசடிகள் அதிகரித்துள்ளன. அப்படி யாராவது பணம் கேட்டால், உடனே அவர்களின் பழைய மொபைல் எண்ணுக்கு நீங்களே போன் செய்து உறுதிப்படுத்திய பிறகே பணம் அனுப்புங்கள்.

பணம் பறிபோனால் உடனே '1930' எண்ணை அழையுங்கள்

இவற்றையும் மீறி உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டால், பதற்றப்படாமல் முதல் ஒரு மணி நேரத்திற்குள் தேசிய சைபர் கிரைம் உதவி எண்ணான 1930-க்கு போன் செய்து புகார் அளியுங்கள். அல்லது cybercrime.gov.in இணையதளத்தில் புகார் பதிவு செய்து, வங்கிக்கும் உடனே தகவல் தெரிவித்தால் பணத்தை முடக்கி மீட்க அதிக வாய்ப்புள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+