இதை மட்டும் டிரை பண்ணுங்க.. உங்க வீட்டு மின் கட்டணம் சர்ருன்னு குறைவு! மின்சாரத்தை சேமிக்கும் டிப்ஸ்
சென்னை: பல வீடுகளில் மின்கட்டணம் வழக்கத்தைவிட அதிகமாக வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்து வரும் நிலையில், மின்சாரத்தை சேமித்து கட்டணத்தை குறைக்கும் எளிமையான சில வழிமுறைகளை பார்ப்போம்.
ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களிலும் கோடை காலத்திற்கு இணையாக வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில் ப்ல வீடுகள் ஏசியை பயன்பாடு அதிகரித்து உள்ளது. அதேபோல் வீட்டிலிருந்து பணிபுரிபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து இருப்பதால் மின் பயன்பாடு பெருகி இருக்கிறது. இத்தகைய சூழலில் மின்கட்டணம் ரூ.5000, ரூ.6000 என கடந்த செல்வதாக மக்கள் புலம்புகிறார்கள். இதனை கட்டுப்படுத்துவதற்கு நாம் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

- வீட்டில் அதிக மின்சாரத்தை இழுப்பது ஏசி, வாட்டர் ஹீட்டர், பிரிட்ஜ் மற்றும் அயர்ன் பாக்ஸ். இந்த மூன்றையும் கவனமாக பயன்படுத்தினால் மின்சாரம் சிக்கனமாகும்.
- ஏசி பயன்படுத்தும் நேரம் தவிர மற்ற நேரங்களில் ஸ்டெப்லைசர் சுவிட்சை அணைத்து வைக்க வேண்டும். இல்லாவிட்டால் அது இயங்கிக்கொண்டே இருக்கும். மின்சாரத்தையும் அதிக அளவில் இழுக்கும்.
- ஏசி பயன்படுத்தும் அறையின் ஜன்னல், கதவு இடுக்குகளை அடைத்தால் உடனே குளிர்ச்சியடைந்து மின்சாரம் சிக்கனமாகும்
- சோலார் வாட்டர் ஹீட்டை பயன்படுத்துவதன் மூலமாக மழை மற்றும் குளிர் காலங்களில் ஈபி பில்லை கட்டுப்படுத்த முடியும்.
- அயர்ன் பாக்ஸில் உங்கள் துணிகளை மொத்தமாக இஸ்திரி செய்யுங்கள். தினமும் எடுத்து இஸ்திரி போட்டால் சூடு ஏறுவதற்கு அதிக மின்சாரத்தை இழுக்கும்.
- அடிக்கடி ப்ரிட்ஜ் கதவை திறப்பதை தவிர்க்க வேண்டும். அப்படி திறந்தாலும் உடனே அதை மூடி விட வேண்டும்.
- பிரிட்ஜினை சுற்றி அதிக இடைவெளியை விட வேண்டும். அதன் மூலம் பிரிட்ஜின் செயல்பாடு சீராகி மின்சாரத்தை சேமிக்க உதவும்.
- வாஷிங் மெஷினை அதிக துணிகளுடன் இயக்குங்கள். குறைவான துணிகளுடன் இயக்கினால் அதிக துணிகளுடன் இயக்கியதற்கான மின்சாரமே செலவாகும்.
- அதேபோல், வாஷிங் மெஷினை குறைந்த வெப்ப நிலையில் துவைக்க வேண்டும். துவைத்த ஆடைகளை டிரையரில் உலர்த்தாமல் வெயிலில் உலர்த்தி மின்சாரத்தை சிக்கனப்படுத்தலாம்.
- வீட்டில் உள்ள குண்டு பல்புகளுக்கு பதிலாக, சி.எஃப்.எல் அல்லது எல்.ஈ.டி பல்புகளை பயன்படுத்த வேண்டும்.
- நட்சத்திர குறியீட்டினை பார்த்து மின் உபகரணங்கள் வாங்க வேண்டும். அதிக நட்சத்திர குறியீட்டு இருந்தால் குறைவான மின்சாரமே செலவாகும்.
- ஐ.எஸ்.ஐ முத்திரை பதிக்கப்பட்ட தரமான மின் உபகரணங்கள் மின்சாரத்தை சேமிக்கும்.
- டியூப் லைட் பயன்படுத்தினால் எலக்ட்ரானிக்ஸ் சோக் பயன்படுத்தலாம்.
- இண்டக்சன் அடுப்புகளை தவிர்த்து கேஸ் அடுப்புகளில் சமையல் செய்யுங்கள்.
- வேறு வழியின்றி மின் அடுப்பை பயன்படுத்தினால் தட்டையான பாத்திரங்களை உபயோகியுங்கள். அப்படி செய்தால் உடனடியாக சூடாகி மின் செலவு குறையும்.
- டிவி, மிக்சி, கிரைண்டர் போன்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பயன்படுத்தி முடித்த பின் அதில் உள்ள பவர் மட்டனை மட்டும் அணைக்காமல் மெயிண்ட் ஸ்விட்சையும் அணைத்து விடவிடவும்.












Click it and Unblock the Notifications