கரன்ட் பில்லை கேட்டாலே ஷாக் அடிக்குதா? மின்சார கட்டணத்தை குறைப்பது எப்படி? டிப்ஸ் இதோ!
சென்னை: வீடுகளில் மின் கட்டணத்தை எப்படி குறைக்க வேண்டும் என்பதற்கான டிப்ஸ்களை பார்க்கலாம். அண்மைக்காலமாக பெரும்பாலானோருக்கு மின் கட்டணம் அதிகமாக வரும் நிலையில் இந்த டிப்ஸ் அவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
வீட்டில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி இருந்தாலே இரு மாதங்களுக்குச் சேர்த்து மின் கட்டணம் ரூ 6000 முதல் 8000 வரை வருகிறது. இதை சமாளிக்க முடியாமல் நடுத்தர மக்கள் அவதிப்படுகிறார்கள்.

மின் கட்டணத்தை குறைக்க தேவையில்லாத லைட், ஃபேன்களை அணைத்து வைங்க என ஒரு அறிவுறுத்தல் இருக்கிறது. அது போல் குண்டு பல்புகளுக்கு பதில் எல்இடி பல்புகளை பயன்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இரவு நேரங்களில் ஜீரோ வாட்ஸ் பல்ப்களும் பலனை தரும்.
சாதாரண பல்ப்புகளை விட எல்இடி பல்புகள் 60 முதல் 80 சதவீதம் குறைவான மின்சாரத்தை பயன்படுத்துகின்றன. மேலும் அவை அதிக வெளிச்சம் தருகின்றன. அதோடு நீண்ட நாட்கள் பயன்படுத்தப்படுகின்றன. எல்இடி பல்புகள் மற்றும் எல்இடி டியூப் லைட்டுகள் வழக்கமான விளக்குகளை விட மிகக் குறைவான வெப்பத்தையே உருவாக்குகின்றன.
இது வீட்டை குளிர்ச்சியாகவும் வைத்திருக்கும். இவை ஏர் கண்டிஷனரின் அழுத்தத்தையும் குறைக்கும். இந்தச பல்புகளும் டியூப் லைட்டுகளும் ஒரே தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டாலும் மின்னோட்ட்தைப் பயன்படுத்தி ஒளியைக் கொடுக்கும் திறன் இரண்டுக்கும் வித்தியாசமானது. எல்இடி பல்புகள், எல்இடி டியூப் லைட்டுகளில் எது சிறந்தது?
வீட்டுத் தேவைக்கு ஏற்ப அதை தேர்வு செய்ய வேண்டும். எல்இடி டியூப் லைட்டுகளை விட எல்இடி பல்புகள் அதிக மின்சாரத்தை பயன்படுத்துகின்றன. ஆனால் எல்இடி பல்புகள் குறைந்த வெளிச்சத்தையே கொடுக்கின்றன. 9 வாட் எல்இடி டியூப் லைட்டுகளை விட ஒரு அறையில் குறைந்த வெளிச்சம் வேண்டுமென்றால் எல்இடி பல்புகளை பயன்படுத்தலாம்.
இந்த எல்இடி விளக்குகளை பயன்படுத்தினால் உங்கள் மின் கட்டணம் நிச்சயம் குறையும். அது போல் அடிக்கடி பிரிட்ஜை திறந்து திறந்து மூடாமல், ஒரே நேரத்தில் தேவையானதை எடுத்துக் கொள்ளுங்கள். வாஷிங் மெஷினில் துணிகளை அலசுவதற்கும் டிரை செய்வதற்கும் பயன்படுத்த வேண்டாம் (பிறகு எதற்கு ஃபுல்லி ஆட்டோமேட்டிக் என்கிறீர்களா- அதுவும் வாஸ்தவம்தான். ஆனால் கரண்ட் பில் வருதே).
ஏசி பயன்படுத்தினால் அதை முழு நாளும் பயன்படுத்த கூடாது. கட்டாயம் ஸ்டெபிலைசர் உபயோகிக்க வேண்டும். தேவையில்லாத நேரங்களில் ஏசியை ஆஃப் செய்து விடலாம். ஏசி அறையில் ஃபேன் போடக் கூடாது. அது போல் வாட்டர் ஹீட்டர் பயன்படுத்தினால் தேவையான அளவுக்கு சூடுபடுத்துங்கள். எப்போதும் ஆனில் வைத்து சூடாக்கி தண்ணீரை வீணடிக்க வேண்டாம். இப்படியெல்லாம் சின்ன சின்ன டிப்ஸ்களை பாலோ செய்தால் நிச்சயம் கரண்ட் பில் குறையும்.












Click it and Unblock the Notifications