1 ரூபாய் தொடங்கி ஒரு கோடி வரை சேமிப்பது எப்படி? மாதம் எவ்வளவு முதலீடு செய்யணும்! அடடே இவ்வளவு ஈஸியா
சென்னை: நீங்கள் ஒரு கோடி ரூபாய் பணத்தைச் சேமிக்க வேண்டும் என்றால் எந்த முறையில் பணத்தைச் சேமிப்பது சிறந்த வழி என்பதைப் பொருளாதார வல்லுநர் ராஜேஷ் விளக்கியுள்ளார்.
அனைவருக்கும் பணத்தைச் சேமிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.. அதிலும் குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்குச் சீக்கிரம் பணத்தைச் சேமித்து கோடீஸ்வரன் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

சேமிப்பு: ஆனால், பலருக்கும் எப்படி ஒரு கோடி ரூபாயைச் சேமிக்க வேண்டும் என்பது தெரியாது. மேலும், இந்த காலத்தில் விலைவாசி படுவேகமாக அதிகரிக்கும் நிலையில், நீங்கள் சேமித்தால் மட்டும் பத்தாது. சரியாக முதலீடும் செய்ய வேண்டும்.. அப்போது தான் பணவீக்கத்தைத் தாண்டி சேமிக்க முடியும். இதற்கிடையே பணத்தை எப்படிச் சேமிக்க வேண்டும். ஒரு கோடி ரூபாயைச் சேமிக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பொருளாதார வல்லுநர் ரஜேஷ் விளக்கியுள்ளார்.
இது குறித்து பொருளாதார வல்லுநர் கே ராஜேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், "சிப் என்பது செல்வம் சேர்ப்பதற்கான ஒரு மிகச் சிறந்த கருவி. அதைப் பயன்படுத்துதல் மட்டுமே நீங்கள் செய்ய வேண்டியது. மற்றவற்றைச் சந்தை பார்த்துக் கொள்ளும். சிப் முறையைப் பின்பற்றும் போது உங்களுக்குத் தேவையானது பொறுமை, ஒழுக்கம் மற்றும் கன்சிஸ்டென்சி மட்டுமே" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
சிப்: அதாவது பணத்தைச் சேமிக்க சிப் தான் சிறந்த வழி.. SIP என்றால் Systematic Investment Plan என்று அர்த்தம். இது ஏதோ புரியாத பெரிய விஷயம் எல்லாம் இல்லை. மாதம் மாதம் அல்லது குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வதே சிப் முறையாகும். சிப் முறையில் நீங்கள் எதில் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். சிப் முறையில் நீங்கள் நீண்ட காலம் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்பதை பல்வேறு பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.
எவ்வளவு சம்பாதித்தாலும் சேமிக்க முடியலையா.. இதை பண்ணுங்க போதும்.. ஐடியா தரும் ஆனந்த் சீனிவாசன்
சேமிப்பது எப்படி: ராஜேஷும் அதே கருத்தையே பதிவிட்டுள்ளார். மேலும், இது தொடர்பாக அவர் சில போட்டோக்களையும் பதிவிட்டுள்ளார். அதில் ஒரு கோடி ரூபாயைச் சேமிக்க வேண்டும் என்பதை விளக்கும் படத்தையும் பகிர்ந்துள்ளார். அதாவது நீங்கள் 5 ஆண்டுகளில் ஒரு கோடி சேர்க்க வேண்டும்.. மாதம் 7% லாபம் கிடைக்கிறது என்றால் நீங்கள் மாதம் 1.39 லட்ச ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதேநேரம் 9% லாபம் என்றால் 1.32 லட்ச ரூபாயையும் 12% லாபம் என்றால் 1.23 லட்ச ரூபாயையும் 15% 1.14 லட்ச ரூபாயையும் மாதாமாதம் முதலீடு செய்ய வேண்டும்.
இது பெரிய தொகை போலத் தோன்றலாம். ஆனால், சிப் முறையில் சேமிப்பதில் கீ பாயிண்ட் எந்தளவுக்கு நாம் நீண்ட முதலீட்டைச் செய்கிறோம் என்பது தான். உங்களுக்கு 25 வயதாகிறது.. நீங்கள் 20 ஆண்டுகளில் ஒரு கோடியைச் சம்பாதிக்க வேண்டும் என்றால் அப்போது வெறும் 15 ஆயிரம் முதலீடு செய்தால் போதும்.. உங்களுக்கு 9% லாபம் கிடைத்தால் கூட எளிதாக ஒரு கோடி ரூபாயை 20 ஆண்டுகளில் சேர்க்க முடியும். அதேநேரம் 12% லாபம் என்றால் நீங்கள் 10880 ரூபாய் முதலீடு செய்தால் போதும்.
அதிக ஆண்டுகள் என்றால் குறைவான முதலீடு: அதேநேரம் நீங்கள் 30 ஆண்டுகளில் சேமிக்க வேண்டும் என்றால் 12% லாபம் கிடைத்தாலே மாதம் வெறும் 3,250 ரூபாய் முதலீடு செய்தால் போதும். அதாவது பணத்தைச் சேமிக்க சிப் முறை முக்கியம். அதிலும் நீண்ட காலம் முதலீடு செய்யப் பொறுமை, ஒழுக்கம் மற்றும் கன்சிஸ்டென்சி ஆகியவையும் முக்கியம்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications