புதிய வருமான வரி ஸ்லாப் மூலம்.. இனி நீங்கள் ரூ. 2.50 லட்சம் வரை சேமிக்கலாம்.. எப்படி தெரியுமா?
சென்னை: நேற்று வருமான வரி புதிய முறையில் சலுகைகள் அறிவிக்கப்பட்டது. ரூ. 12 லட்சம் வரை வருட வருமானம் வாங்குபவர்களுக்கு வரி இல்லை என்று அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே நிலையான கழிவு 75 ஆயிரம் வரும். இதன் மூலம் 12.75 லட்சம் வரை வரி கிடையாது. உங்களுக்கு பெரிய அளவில் முதலீடுகள் இல்லை. அதேபோல் வருமானமும் வருடம் 12 லட்சம் என்றால் புதிய முறையே பெஸ்ட்.
இந்த சலுகை முதலில் எல்லோருக்கும் கிடையாது. புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கே அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த சலுகை முறையில் முதல் 12.75 லட்சத்திற்கு வரி இல்லை. அதற்கு மேல் செல்லும் போது.. உங்களின் வருமானத்திற்கு பின் உள்ள வரி விதிப்பு பொருந்தும்.
0-4 லட்சம் ரூபாய் வரி இல்லை
4-8 இலட்சம் ரூபா 5 சதவீதம்
8-12 லட்சம் ரூபாய் 10 சதவீதம்
12-16 இலட்சம் ரூபா 15 சதம்
16-20 லட்சம் ரூபாய் 20 சதவீதம்
20-24 இலட்சம் ரூபா 25 சதம்
24 லட்சம் ரூபாய்க்கு மேல் 30 சதவீதம்
சேமிக்க முடியும்:
இப்போது மேற்கண்ட புதிய ஸ்லாப் காரணமாக உங்களின் வருமானத்தை பொறுத்து நீங்கள் 2.5 லட்சம் வரை சேமிக்க முடியும்.
ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வருமானம் பெறுபவர்கள் ரூ.80,000 வரை இனி சேமிக்க முடியும்.
ஆண்டுக்கு ரூ.18 லட்சம் வருமானம் பெறுபவர்கள் இன்னும் கூடுதலாக ரூ.70,000 வரை இனி சேமிக்க முடியும்.
ஆண்டுக்கு ரூ.24 லட்சம் வருமானம் பெறுபவர்கள் இன்னும் கூடுதலாக ரூ.1, 10,000 வரை இனி சேமிக்க முடியும்.
அதனால் ஆண்டுக்கு ரூ.24 லட்சம் வருமானம் பெறுபவர்கள் இனி கிட்டத்தட்ட மொத்தமாக 2.5 லட்சம் ரூபாய் வரை வரி செலுத்தாமல் சேமிக்க முடியும்.
எடுத்துக்காட்டு:
புதிய முறையில் இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் விலக்கு பெற முடியாது. நீங்கள் இந்த முறையை தேர்வு செய்துள்ளீர்கள். இப்போது உங்கள் மாத வருமானம் ரூ. 1 லட்சம் என்றால்.. வருட வருமானம் 12 லட்சம்.
புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கு தனிநபர் வருமான வரி - டாக்ஸ் ரிபேட் (Tax rebate) ரூ.12 லட்சம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது தற்போது மாற்றப்பட்ட புதிய வரி விதிப்பு முறையில் 12 லட்சம் ரூபாய் வருமானம் இருந்தால் வரி கட்ட வேண்டியது இல்லை. 12க்கு கீழ் எவ்வளவு வாங்கினாலும் வரி கிடையாது.
அதுவே நீங்கள் 12 லட்சத்திற்கு மேல் உங்கள் சம்பளம் போகும் போது பின்வரும் ஸ்லாப் நடைமுறை ஆகும்.
0-4 லட்சம் ரூபாய்க்கு வரி இல்லை
4-8 இலட்சம் ரூபாய்க்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும்
8-12 லட்சம் ரூபாய் 10 சதவீதம் வரி விதிக்கப்படும்
12-16 இலட்சம் ரூபா 15 சதவீதம் வரி விதிக்கப்படும்
16-20 லட்சம் ரூபாய் 20 சதவீதம் வரி விதிக்கப்படும்
20-24 இலட்சம் ரூபா 25 சதவீதம் வரி விதிக்கப்படும்
24 லட்சம் ரூபாய்க்கு மேல் 30 சதவீதம் வரி விதிக்கப்படும்
புதிய முறையில் இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் விலக்கு பெற முடியாது. இதனால் இதை அப்படியே கட்ட வேண்டி இருக்கும்.












Click it and Unblock the Notifications