ஐரோப்பாவில் செட்டிலாக ஆசையா.. வங்கிக்கடன் கூட தேவையில்லை! இந்த வழிமுறைகளை ட்ரை பண்ணுங்க
சென்னை: வங்கிக் கடனே இல்லாமல் ஐரோப்பாவில் பொறியியல் உயர்கல்வியை பயின்று நல்ல வேலைக்கு செல்வது எப்படி என விளக்கியுள்ளார் சுவீடனில் பணிபுரிந்து வரும் எழுத்தாளர் செந்தழல் ரவி.
இதுகுறித்து ட்விட்டரில் அவர் பதிவிட்டு உள்ளதாவது, "2020 - 2023 பி.இ - பி.டெக் படித்தவர்கள், இன்னும் சரியான வேலை கிடைக்கவில்லை என்றாலும் அல்லது இப்போது சிறிய வேலையில் இணைந்து இருந்தாலும் ஐரோப்பாவில் MS படிப்புக்கு கல்வி உதவி தொகையுடன் வாய்ப்பு கிடைக்கிறதா என்று பார்க்கலாம்.

கல்வி வாய்ப்பும் கிடைத்து, கல்வி உதவி தொகையும் கிடைத்தால், எந்த வங்கி கடனும் இல்லாமல் ஐரோப்பாவில் வந்து படித்து, நல்ல பணிக்கு செல்லலாம் - சொந்த தொழில்களை அரசுகள் உதவியுடன் தொடங்கலாம்.
உலகெங்கும் உள்ள கல்வி உதவித்தொகைகள் பற்றி அறிய உதவும் தளம் Scholarshipportal. அதன் https://scholarshipportal.com என்ற இணையதளத்திற்கு சென்று கூடுதல் விபரங்களை அறியலாம். EURAXESS என்ற தளத்திலும் மிக சிறந்த வாய்ப்புகள் - பி.எச்.டிக்கான ஸ்காலர்ஷிப் - https://euraxess.ec.europa.eu/choose-your-country கிடைக்கும்.
இது இல்லாமல் ஒவ்வொரு பல்கலைக்கழக இணைய தளத்திலும் அனைத்துலக மாணவ மாணவியருக்கான உதவி தொகைகள் பற்றிய முழு விவரம் இருக்கிறது. உதாரணமாக சுவீடன் KTH இணைய தளம் சென்றால் இந்திய மாணவ மாணவியர் மட்டும் பயன் பெரும் வகையில் இருக்கும் KTH இந்தியா கல்வி உதவி தொகை பற்றி அறியலாம்.
இந்த கட்டுரையில் ஒரு ஐம்பது பல்கலைகழகங்கள் பட்டியல் (TOP 50) அதன் இணைய முகவரியோடு தருகிறேன். ஒவ்வொரு இணைய தளத்திலும் கல்வி உதவி தொகைகள் பற்றிய தகவல்கள் ஆங்கிலத்தில் இருக்கிறது.
- ETH Zurich - https://ethz.ch
- LMU Munich - https://uni-muenchen.de
- University of Zurich - https://uzh.ch
- EPFL - https://epfl.ch
- University of Amsterdam - https://uva.nl
- University of Copenhagen - https://ku.dk
- University of Helsinki - https://helsinki.fi
- University of Barcelona - https://ub.edu
- University of Stockholm - https://su.se
- University of Warwick - https://warwick.ac.uk
- University of Oslo - https://uio.no
- Durham University - https://dur.ac.uk
- University of Geneva - https://unige.ch
- University of Glasgow - https://gla.ac.uk
- KU Leuven - https://kuleuven.be
- Sorbonne University - https://sorbonne-universite.fr
- University of Bologna - https://unibo.it
- University of Milan - https://unimi.it
- University of Vienna - https://univie.ac.at
- Heidelberg University - https://uni-heidelberg.de
- University of Bonn - https://uni-bonn.de
- Leiden University - https://universiteitleiden.nl
- Groningen University - https://rug.nl
- University of Southampton - https://southampton.ac.uk
- University of Freiburg - https://uni-freiburg.de
- Uppsala University - https://uu.se
- University of Leeds - https://leeds.ac.uk
- University of Nottingham - https://nottingham.ac.uk
- Lund University - https://lunduniversity.lu.se
- Trinity College Dublin - https://tcd.ie
- University of Sheffield - https://sheffield.ac.uk
- University of Exeter - https://exeter.ac.uk
- University of York - https://york.ac.uk
நான் சொன்னது போல நீங்கள் ஏற்கனவே சின்ன வேலையில் இணைந்து இருந்தாலும் கண்டிப்பாக இந்த வகையிலும் முயற்சி செய்யலாம். விரைவாக உங்கள் பொருளாதார, வாழ்வியல் முன்னேற்றம் அடைந்து, நம் தமிழ் சமூகம் பயன்பெறும் வகையில் உலகம் எங்கும் இருந்து தமிழ் நாட்டுக்கு தொழில் நுட்பத்தையும், கல்வியையும், சிறப்பான வேலை திட்டங்களையும் கொண்டு வரலாம்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications