எல்ஐசி பாலிசியை சரண்டர் செய்வது எப்படி? அதைவிட சிறந்த ஆப்ஷன் என்ன?
சென்னை: கட்டாமல் விட்டு காலாவதியான எல்ஐசி பாலிசிக்கு ரீபண்ட் கிடைக்குமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். அவர்கள் எல்ஐசி பாலியில் உள்ள சில தகவல்களை பற்றி முழுமையாக கேட்டு அறிந்து கொள்வது நல்லது. எல்ஐசி பாலிசியை பொறுத்தவரை முதல் மூன்று வருடம் கட்டியிருந்தால் மட்டுமே சரண்டர் செய்ய முடியும். ஆனால் அதைவிட சிறந்த ஆப்சன் ஒன்று உள்ளது. இந்த பதிவில் எல்ஐசி பாலிசியை சரண்டர் செய்வது எப்படி மற்றும் அதற்கு மாற்றுவழி என்ன என்று பார்ப்போம்.

எல்.ஐ.சி பாலிசியை சரண்டர் செய்வது என்றால் என்ன?
எல்.ஐ.சி பாலிசியை சரண்டர் செய்வது என்பது பாலிசியை முதிர்ச்சியடைவதற்கு முன்பே தானாக முன்வந்து முடித்துக்கொள்வதைத்தான் சரண்டர் செய்வது என்று அழைக்கிறார்கள். இது எண்டோவ்மென்ட், முழு ஆயுள் காப்பீடு மற்றும் டேர்ம் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்குப் பொருந்தும். இன்றைய சூழலில் எல்ஐசிக்கு பணம் கட்ட முடியவில்லை.. நெருக்கடியாக உள்ளதாக கூறி கட்டாமல் விடுவது நடக்கிறது. சிலர் பாதியில் விட்டுவிட்டு திரும்ப பெற விரும்புகிறார்கள்.
ஆனால் இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் சில குறிப்பிட்ட நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படும் சந்தர்ப்பங்களில். பாலிசிதாரர்கள், எல்ஐசி பாலிசியை ஒப்படைக்க முடியும்.. அப்படி ஒப்படைத்தால் எல்.ஐ.சி உடனான ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வதாகிவிடும். இதனால் ஆயுள் காப்பீடு மற்றும் முதிர்வு கொடுப்பனவுகள் உட்பட அனைத்து எதிர்கால சலுகைகள் எதுவும் கிடைக்காது. ஆயுள் காப்பீடு உடனடியாக நிறுத்தப்படும், மேலும் பாலிசியை புதுப்பிக்க முடியாது. எல்.ஐ.சி பாலிசி எடுத்தபோது, அறிவிக்கப்பட்ட எந்த சலுகைகளும் கிடைக்காது.. கிட்டத்தட்ட கட்டிய பணத்தில் 30 சதவீதம் வரை திரும்ப கிடைக்காது..
அதையும் மீறி எடுக்க வேண்டும் என்றால் சில நிபந்தனைகள் உள்ளன. எல்.ஐ.சி பாலிசியை சரண்டர் செய்ய உள்ள நிபந்தனைகள் என்னென்ன?
வரையறுக்கப்பட்ட மற்றும் வழக்கமான பிரீமியம் திட்டங்களுக்கு:
10 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவான பாலிசிகளை 2 ஆண்டுகளுக்குப் பிறகு எல்ஐசி பாலிசியை திரும்ப ஒப்படைக்கலாம்.
10 ஆண்டுகளுக்கும் மேலான பாலிசிகளை 3 ஆண்டுகளுக்குப் பிறகே சரண்டர் செய்ய முடியும். ஆனால் எல்ஐசி பாலிசி எடுத்து ஓராண்டிலோ அல்லது இரண்டாம் ஆண்டிலோ சரண்டர் செய்தால் ஒரு ரூபாய் கூட திரும்ப கிடைக்காது.
எல்.ஐ.சி பாலிசியை சரண்டர் செய்வது எப்படி?
உங்கள் எல்ஐசி பாலிசியை சரண்டர் செய்வது நல்லதல்ல என்றாலும், ஒருவேளை மிகப்பெரிய பண நெருக்கடி காரணமாக அப்படி செய்ய விரும்பினால் உங்களுக்குத் தேவையான ஆவணங்களின் விவரங்கள்,
பாலிசி சரண்டர் செய்ய தேவையான ஆவணங்கள்
அசல் பாலிசி பத்திர ஆவணங்கள்
சரண்டர் மதிப்பு கட்டணத்திற்கான கோரிக்கை
எல்ஐசி சரண்டர் படிவம் - படிவம் 5074
எல்ஐசி நெஃப்ட் படிவம்
வங்கி கணக்கு விவரங்கள்
ஆதார் அட்டை, பான் அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம் போன்ற அசல் அடையாளச் சான்று
ரத்து செய்யப்பட்ட காசோலை
நிறுத்துவதற்கான காரணத்தைக் குறிப்பிட்டு எல்.ஐ.சி.க்கு உங்கள் கைப்பட எழுதப்பட்ட கடிதம்.
மேற்கண்ட ஆவணங்களை ஒப்படைத்தால் சரண்டர் செய்துவிடலாம்.
சரண்டர் செய்த பின்னர் 30 சதவீதம் அளவிற்கு உங்களுக்கு பணம் கிடைக்காது. அதாவது உத்தரவாதமான சரண்டர் மதிப்பின் கீழ், (GSV) பாலிசிதாரர் 3 ஆண்டுகள் முடிந்த பின்னர் சரண்டர் செய்தால், (பிரீமியம் குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்கு செலுத்தப்பட வேண்டும்). நீங்கள் 3 ஆண்டுகளுக்குப் பிறகு சரண்டர் செய்தால், சரண்டர் மதிப்பு செலுத்தப்பட்ட பிரீமியங்களில் சுமார் 30% ஆக இருக்கும். ஆகவே பாலிசி தாமதமாக சரண்டர் செய்தால் எல்ஐசியில் சரண்டர் மதிப்பு அதிகமாக கிடைக்கும்
எல்ஐசி சிறப்பு சரண்டர் மதிப்பு: பொதுவாகவே எல்ஐசியின் உத்தரவாத சரண்டர் மதிப்பை விட அதிகமாக இருக்கும். நீங்கள் 3 ஆண்டுகளுக்கு மேல் ஆனால் 4 ஆண்டுகளுக்கு குறைவாக பிரீமியங்களைச் செலுத்தி இருந்தால், முதிர்வுத் தொகையில் 80% வரை கிடைக்கும். நீங்கள் 4 ஆண்டுகளுக்கு மேல் ஆனால் 5 ஆண்டுகளுக்கு குறைவாக பிரீமியங்களைச் செலுத்தினால், முதிர்வுத் தொகையில் 90% வரை பெறலாம். நீங்கள் 5 ஆண்டுகளுக்கு மேல் பிரீமியங்களைச் செலுத்தினால், முதிர்வுத் தொகையில் 100% வரை பெறமுடியும்.
எல்ஐசி பாலிசியை சரண்டர் செய்வதைவிட மாற்றுவழி என்ன
எல்ஐசி பாலிசியை சரண்டர் செய்யாமல், அதற்கு பதில் பாலிசிஅளவை மாற்றிக் கொள்ளலாம்.இப்போது மாதம் 5000 என்கிற அளவில் பாசிலி போட்டிருக்கிறீர்கள் என்றால், 2500 என்கிற அளவிற்கு மாற்றிக் கொள்ள முடியும்.இப்போது இன்னும் கூட குறைவான தொகைக்கு பாலிசியை மாற்றிக்கொள்ள முடியும். ஒருவேளை பாலிசி கட்ட முடியாத அளவிற்கு உள்ளது என்றால், paid up என்கிற இன்னொரு ஆப்சன் உள்ளது.இதன்படி எந்த அளவிற்கு நீங்கள் எல்ஐசி பாலிசிக்கு பிரீமியம் கட்டியுள்ளீர்களோ, அந்த அளவிற்கு சம்மர்ஷூட் குறைந்து கிடைக்கும்.. எப்போது கிடைக்கும் என்றால், பாலிசி பீரியட் முடியும் போது கிடைக்கும்.
-
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர்












Click it and Unblock the Notifications