புதுசா செல்போன் இருக்கா.. இதை மட்டும் செய்யுங்க போதும்! உங்க மொபைலை ரொம்ப வருஷம் வச்சுக்கலாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதிதாக மொபைல் வாங்குவோர் அதை அதின் ஆயுளை நீட்டித்து அதை அதிக காலம் வைத்திருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நாம் இதில் பார்க்கலாம்.

மொபைல் போன் என்பது இன்றைய காலகட்டத்தில் தவிர்க்கவே முடியாத ஒன்றாகிவிட்டது. அதுவும் இந்த பண்டிகை காலத்தில் செல்போன் நிறுவனங்கள் எல்லாம் ஆபர்களை அள்ளி கொடுத்து வருகிறது.

How to take care of you mobile to increase its life Seven simple tips

இதனால் நம்மில் பலரும் பல ஆயிரம் செலவு செய்து மொபைலை ஆர்வமாக வாங்கிவிடும். அப்படி புதிதாக செல்போன் வாங்கும் போது நமக்கு அது அதிக காலம் நீட்டிக்க வேண்டும் என்பதே விருப்பமாக இருக்கும்.

செல்போன்: அதிலும் இப்போதெல்லாம் மொபைல் ரிப்பேர் செய்வது என்பதே இல்லாமல் போய்விட்டது. செல்போனில் எதாவது பழுதாகிவிட்டால் நாம் பெரும்பாலும் அதை அப்படியே மாற்ற வேண்டிய சூழலே நிலவுகிறது. இதனால் புதிதாக மொபைல் வாங்கும் போது அதைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

முதலில் மொபைல் வாங்கினால் அதற்குச் சரியான ஸ்க்ரீன் ப்ரொடக்டரை வாங்குங்கள். ஏனென்றால் உங்கள் செல்போன் டிஸ்பிளேவில் எதாவது பிரச்சினை ஏற்பட்டால் நீங்கள் அதற்கு மொபைல் மதிப்பில் 40- 45% வரை செலவழிக்க வேண்டி இருக்கும். செல்போன் டிஸ்பிளேக்கள் அந்தளவுக்கு முக்கியமானது.. எனவே, அதைப் பாதுகாத்துக் கொள்ள முதலில் ஒரு ஸ்க்ரீன் ப்ரொடக்டரை வாங்கிக் கொள்ளுங்கள்.

முக்கியம்: அடுத்து கேஸ் கவரும் முக்கியம்.. பொதுவாக மொபைல் உடனேயே கேஸ் கவரும் கிடைக்கும். ஆனால், இப்போதெல்லாம் அதை நிறுத்திவிட்டனர். எனவே, மறக்காமல் கேஸ் கவர் ஒன்றை வாங்குங்கள். அதிலும் டிசைன் டிசைனாக இருக்கும் கவருக்கு முக்கியத்துவம் தராமல் எது உங்கள் செல்போனை பாதுகாக்கும் என்பதை யோசித்து அதற்கேற்ப மொபைலை சேர்வு செய்யுங்கள்.

முன்பு வந்த மொபைல்களில் பேட்டரி மிகவும் குறைந்த பிறகே அதை சார்ஜ் போட வேண்டும் எனச் சொல்வார்கள். ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை. முன்பு நாம் nickel அடிப்படையிலான பேட்டரியை மொபைல்களில் பயன்படுத்தினோம். அப்போது நாம் செல்போனின் பேட்டரி முழுமையாக காலியாகும் வரை பயன்படுத்த வேண்டும்.

பேட்டரி: ஆனால், இப்போது lithium அடிப்படையிலான பேட்டரியை பயன்படுத்துவதால் இது தேவையில்லை. 30% வரும் போதே மொபைலை சார்ஜ் செய்யலாம். அதுபோல அதிக 100% வர வேண்டும் என்றில்லை. 90% தாண்டியவுடன் சார்ஜை நிறுத்துவது சரியாக இருக்கும்.

அடுத்து உங்கள் செல்போனில் தேவையில்லாத செயலிகளை டவுன்லோட் செய்ய வேண்டாம். அதான் இப்போது கூகுளில் செயலிகளில் இலவசமாகத் தானே இருக்கிறது. இதனால் நான் அதை டவுன்லோட் செய்வதில் என்ன பிரச்சினை என நீங்கள் கேட்கலாம். தேவையில்லாத செயலிகளை டவுன்லோட் செய்யும் போது, அது அதிக மெமரியை எடுத்துக் கொள்வதால் உங்கள் மொபைலை மெதுவானதாக மாற்றும். மேலும், பேட்டரியிலும் சிக்கல் வரலாம்.

சூடாகக் கூடாது: அடுத்து உங்கள் செல்போனை சூடாக ஆக்கக் கூடாது. அது சூடானாலே அது பேட்டரி தொடங்கி பல்வேறு விஷயங்களில் பிரச்சினை ஏற்படுத்தத் தொடங்கிவிடும். எனவே, முடிந்தவரை மொபைலை சூடாக மாற்ற வேண்டாம். சூரிய வெளிச்சத்தில் நீங்கள் செல்போனை பயன்படுத்த வேண்டும் என்றால் அதிக பிரைட்னஸ் வைக்க வேண்டும். அதுவும் மொபைலை சூடாக்கும். மேலும், இறுக்கமான ஜூன்ஸ் பேண்டில் செல்போனை அதிக நேரம் வைத்திருப்பதும் அதைச் சூடாக்கும். எனவே, இதையும் கருத்தில் கொள்ளுங்கள்.

உங்கள் மொபைலை எப்போதும் அப்டேட் செய்து கொள்ளுங்கள். இப்போது நிறுவனங்கள் சில ஆண்டுகள் வரை செக்யூரிட்டி அப்பேட்கள் தருகிறது. எனவே, அதை அப்டேட் இருந்தால் உடனடியாக அப்டேட் செய்யுங்கள். அதுதான் உங்கள் மொபைல் பெர்பாமன்ஸை அதிகப்படுத்தும். அதேபோல புது செல்போனாக இருந்தாலும் பழைய செல்போனாக இருந்தாலும், இணையத்தில் பாதுகாப்பில்லாத தளங்களுக்குச் செல்ல வேண்டாம். தேவையில்லாத லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம்.

செல்போன் என்பது இப்போது அத்தியாவசியமான ஒன்றாகிவிட்ட நிலையில், அதைக் கவனமாக வைத்திருக்க வேண்டியது நமது வேலையாகிறது. எனவே, இந்த விஷயங்களைச் செய்தால் போதும் உங்கள் மொபைலின் ஆயுளை ஓரளவுக்கு நீட்டிக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+