பிஃஎப் கணக்கு இருக்கா.. மாத சம்பளம் வாங்குவோர் இதை மட்டும் சரியாக செய்தால் எவ்வளவு நன்மை தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: உங்கள் பழைய நிறுவனத்தில் உள்ள பிஎப் கணக்கை, புதிய நிறுவனத்திற்கு கையோடு மாற்றிவிடுங்கள்.. எப்படி எளிதாக மாற்றலாம் என்பது குறித்தும், அதனால் என்ன நன்மை என்பது குறித்தும் இந்த பதிவில் பார்ப்போம்.

பிஃஎப் பணம் என்பது பலருக்கும் மிகவும் முக்கியமான வாழ்வாதாரம் ஆகும். அவசர காலங்களில் நமக்கு கடவுள் போல் காப்பாற்றுவது பிஃஎப் கணக்கில் சேமிக்கும் பணம் தான். அதனை மிக அவசர அத்தியாவசிய தேவைக்கு மட்டும் சில நேரங்களில் எடுப்போம். அப்படி பணம் எடுக்கும் போது பலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகிறது. அப்படி நிராகரிக்கப்பட முக்கியமான காரணம், பழைய நிறுவனத்தில் உள்ள பிஎப் கணக்கை, புதிய நிறுவனத்திற்கு மாற்றாதது முக்கியமான காரணம் ஆகும்.

EPFO pf money

நீங்கள் வேலையும் செய்யும் நிறுவனத்தை விட்டு விலகிய பின்னர், இரண்டாவது நிறுவனத்தில் சேருவீர்கள்.. இரண்டாவது நிறுவனத்தில் சேர்ந்த உடன், முதல் நிறுவனத்தில் உள்ள பிஎப் கணக்கு பணத்தை கையோடு இரண்டாது அதாவது வேலை செய்யும் நிறுவனத்தின் கணக்கிற்கு மாற்றிவிடுவது மிகவும் நல்லது..

பிஃஎப் கணக்கு விதி: அப்படி பழைய நிறுவனத்தில் உள்ள பிஃஎப் கணக்கை, புதிய நிறுவனத்திற்கு மாற்ற வேண்டும் என்றால், கண்டிப்பாக ஏற்கனவே வேலை செய்த நிறுவனம் பிஃஎப் கணக்கில் நீங்கள் வேலையைவிட்டு நின்ற தேதியை குறிப்பிட வேண்டும். ஒரு வேளை உங்கள் பழைய நிறுவனம் பிஃஎப் கணக்கில் நீங்கள் வேலையை விட்டு நின்ற தேதியை குறிப்பிடாவிட்டால் உங்களால் பிஃஎப் கணக்கில் பணம் எடுக்க முடியாது. உங்கள் பழைய பிஃஎப் கணக்கில் உள்ள பணத்தை புதிய நிறுவனத்திற்கு மாற்றவும் முடியாது.

பிஎப் கணக்கை மாற்றுவது எப்படி: இபிஎப்ஒ எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் மாதச்சம்பளம் வாங்கும் ஒவ்வொருவருக்கும் கணக்கு இருக்கும். உங்களுக்கு என்று ஆதார் எண் போல் யுஏஎண் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த யுஏஎண் கீழ் எத்தனை பிஎப் கணக்குகள் வேண்டுமானாலும் இருக்கலாம். உஙகள் பிஎப் கணக்கு ஒரு நிறுவனத்தற்கு ஒன்று தான் இருக்கும். அடுத்த நிறுவனம் மாறும் போது, அதற்கு ஒரு கணக்கு ஆரம்பிக்கப்படும். எனவே பிஎப் பணம் ஒரே கணக்கில் இருந்தால் மட்டுமே பணம் எடுக்க வேண்டும். அப்படி பணம் எடுக்க பழைய பிஎப் கணக்கில் உள்ள பணத்தை அப்படியே புதிய கணக்கிற்கு மாற்றிவிடுங்கள்.

பிஃஎப் கணக்கை மாற்றும் வழிமுறைகள்: பிஃஎப் கணக்கை மாற்ற வேண்டும் என்றால், EPFO தளத்திற்கு உங்கள் யுஏஎண் மற்றும் பாஸ்வேர்டு கொடுத்து உள்ளே செல்ல வேண்டும். அப்படி உள்ளே செல்ல உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண் வேண்டும். ஒடிபி மூலமாகவே உள்ள செல்ல முடியும். உள்ளே சென்ற பின்னர் 'Online Services' என்ற ஆப்சனை தேர்வு செய்ய வேண்டும். அதில் 'One Member - One EPF Account (Transfer Request) என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் உங்கள் தகவலை அப்பேட் செய்யவேண்டும்.

பிஃஎப் பாஸ்புக்: அதில் பழைய நிறுவனத்தின் பிஎப் கணக்கை தேர்வு செய்து, புதிய நிறுவனத்திற்கு மாற்ற கோரிக்கை வைக்க வேண்டும். இந்த நடைமுறை செய்த பின்னர், நீங்கள் பழைய நிறுவனத்தின் ஹெச்ஆர் அல்லது புதிய நிறுவனத்தின் ஹெச்ஆரை தொடர்பு கொண்டு ஒப்புதல் தருமாறு கோருங்கள். அப்படி செய்தால் உடனே அவர்கள் ஒப்புதல் அளிக்க வாய்ப்பு உள்ளது.. அடுத்தாக சில வாரங்கள் கழித்து புதிய நிறுவனத்தின் பிஎப் கணக்கில், பழைய நிறுனத்தின் பிஎப் பணம் மாறி இருக்கும். பிஎப் பாஸ்புக்கில் முழு தகவலை அறியலாம்,

பிஃஎப் கணக்கில் வேலையை விட்டு நின்ற தேதி: ஒருவேளை பிஎப் கணக்கில் நீங்கள் வேலையைவிட்டு சென்ற தேதி இல்லை என்றால், உங்களால் இதற்கு விண்ணப்பிக்கவே முடியாது. எனவே நீங்கள் பிஎப் கணக்கில் முன்பணம் எடுக்க விரும்பினால் உங்கள் பழைய நிறுவனத்தின் ஹெச்ஆர்களை தொடர்பு கொண்டு பிஎப் கணக்கில் நீங்கள் வேலையை விட்டு நின்ற தேதியை குறிப்பிட சொல்லுங்கள். அப்படி குறிப்பிட வேண்டும் என்றால், நீங்கள் முறைப்படி நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும். அவர்கள் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டால். எந்த பிரச்சனையும் இன்றி பிஎப் கணக்கில் நீங்கள் விலகிய தேதியை அந்த நிறுவனமும் பதிவிட்டு விடும்.

பிஃஎப் அட்வான்ஸ்: அதன் பிறகு நீங்கள் பழைய பிஃஎப் கணக்கில் இருந்து உங்கள் புதிய நிறுவனத்தின் கணக்கிற்கு பணத்தை மாற்றிக்கொள்ளலாம். அப்படி மாற்றிய பின்னர் நீங்கள் பிஃஎப் அட்வான்ஸ் தொகை பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தின் இறுதியில் பிஃஎப்பில் உள்ள வங்கி கணக்கின் செக் லீப்பை பென்சிலால் அடித்து அதை இணைக்க வேண்டும். அப்படி இணைத்தால் உங்கள் விண்ணப்பம் 20 நாளில் பரிசீலனை செய்யப்பட்டு 20 முதல் 25 நாளில் உங்கள் வங்கி கணக்கில் பிஎப் அட்வான்ஸ் தொகை சேரும். அதேநேரம் உங்கள் பங்குத்தொகையில் 50 சதவீதத்தைதான் எடுக்க முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+