பைசா செலவில்லாமல் ஆதாரை புதுப்பிப்பது எப்படி? ஆன்லைனில் எல்லாமே ஈஸிதான்.. ஹர்ரி அப்!
சென்னை: ஆதாரில் உங்கள் தகவல்களை எப்படி இலவசமாக அப்டேட் செய்வது என்பது குறித்து பொருளாதார நிபுணர் ராஜேஷ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் விளக்கியுள்ளார். ஆதாரில் தகவல்களை சேர்க்க ஜூன் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் அதற்கான வழிமுறைகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஆதாரில், உங்களது தகவல்களை இலவசமாக அப்டேட் செய்வதற்கான காலகட்டத்தை, @UIDAI நீட்டித்துள்ளது.

புதிய தேதி - ஜூன் 14, 2024. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, உங்களது தகவல்களை அப்டேட் செய்து கொள்ளுங்கள்.
ஆன்லைனில் எப்படி தகவல்களை புதுப்பிப்பது:
https://myaadhaar.uidai.gov.in/ என்ற இணையதளத்தில் போய் உங்கள் ஆதார் எண்ணுடன் உள்ளே செல்லவும், அப்போது நீங்கள் பதிவு செய்திருந்த செல்போன் எண்ணிற்கு ஒரு எஸ்எம்எஸ் வரும்.
அதை உள்ளீடு செய்து உள்ளே சென்றால் உங்கள் முகவரி உள்ளிட்ட சுய விவரங்கள் சரியாக உள்ளதா என ஒரு முறை சரி பாருங்கள்.
ஒரு வேளை அதில் உள்ள உங்கள் சுயவிவரங்களில் எந்த தவறும் இல்லாமல் சரியாக இருந்தால் "என்னுடைய விவரங்கள் சரியாக இருக்கின்றன " என்பதை கிளிக் செய்யவும்.
ஒரு வேளை தவறாக இருந்தால் செய்ய வேண்டிய மாற்றங்களை செய்ய வேண்டும்.
இதற்காக நீங்கள் ஏதேனும் ஒரு அடையாள அட்டையை ஆதாரமாக சமர்ப்பிக்க வேண்டும். அங்கு வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிம்ம, பாஸ்போர்ட் உள்ளிட்ட நிறைய ஆதாரங்கள் இருக்கும். அதில் நீங்கள் எதை சப்மிட் செய்கிறீர்களோ அதை கிளிக் செய்யுங்கள்.
உங்கள் அடையாள அட்டையை அப்லோடு செய்யுங்கள். அதன் அளவு 2 மெகா பைட்டை விட குறைவாக இருத்தல் வேண்டும்.
முகவரி மாற்றம் செய்ய வேண்டுமானால் அதை செலக்ட் செய்து அதற்கான ஆதாரத்தையோ ஆவணத்தையோ அப்லோடு செய்ய வேண்டும். அந்த ஃபைலும் 2 மெகா பைட்டைவிட குறைவாக இருத்தல் வேண்டும்.
அடையாள அட்டையும் முகவரி ஆவணமும் JPEG, PNG or PDF ஃபார்மட்டில் இருத்த வேண்டும்.
இதையடுத்து சப்மிட் செய்ய வேண்டும். இவ்வாறு ராஜேஷ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஆதார் அட்டை எடுத்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருந்தால் அதை முகவரி ஆவணத்தையும் அடையாள அட்டையையும் வைத்து, ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் செயல்முறை மூலம் எளிதாக புதுப்பிக்கலாம்.
ஆதாரவை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளதால் இனி ரூ 50 செலுத்தி புதுப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்திய குடிமக்கள், மக்கள் தொகை குறித்த தகவல், பிறந்த தேதி, பாலினம், மொபைல் எண், மின்னஞ்சல் ஆகியவற்றை இலவசமாகப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது.
ஆப்லைனில் ஆதாரை புதுப்பிப்பது எப்படி?
https://bhuvan.nrsc.gov.in/aadhaar/ என்ற இணையதளத்தில் சென்று உங்களுக்கு அருகில் உள்ள ஆதார் மையத்தை கண்டறியலாம். நீங்கள் எந்த பகுதியில் இருக்கிறீர்கள் என்பதை கொடுத்துவிட்டால் அருகில் உள்ள ஆதார் மையம் பற்றிய தகவலை பெறலாம்.
பின்கோடு மூலம் அருகில் உள்ள ஆதார் மையத்தையும் நீங்கள் அறிய முடியும். அங்கு மேற்சொன்னதை போல் முகவரி சான்றிதழ், அடையாள அட்டை ஆகியவற்றை நேரில் கொண்டு போய் புதுப்பித்துக் கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications