பல்ஸ் ஆக்ஸிமீட்டர்.. கொரோனா பாதித்தவர்களுக்கு எவ்வளவு முக்கியம்.. எப்படி அதை பயன்படுத்துவது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பாதித்தவர்கள் மற்றும் கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு 'ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர்'(Finger Pulse Oximeter) எனப்படும் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் மிக முக்கியம் ஆகும். அதை எப்படி பயன்படுத்துவது என்பதை இப்போது பார்ப்போம்.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. சிலர் காய்ச்சல் மற்றும் சளி பாதிப்புடன் எளிதாக குணமாகி விடுகிறார்கள். சிலர் சளி காய்ச்சலுடன் கடுமையான சுவாச பிரச்சனையை சந்திக்கிறார்கள்.

சிலர் எந்த அறிகுறியும் இல்லாமல்இருக்கிறார்கள், திடீரென உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைந்து உயிரிழந்து விடுகிறார்கள்,

எப்படி கண்டுபிடிப்பது

எப்படி கண்டுபிடிப்பது

கொரோனா பாதித்தவர்கள் மரணம் ஏற்படுவதை தடுக்க அவர்களின் உடலில் ஆக்ஸிஜன் அளவை முறையாக கண்காணித்து சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி ஆக்ஸிஜன் அளவை கண்காணிக்க இருக்கும் முக்கியமான மருத்துவ உபகரணம் தான் 'ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர்'(Finger Pulse Oximeter) எனப்படும் பல்ஸ் ஆக்ஸிமீட்டர். உடலில் உள்ள ஆக்ஸிஜனின் அளவு மற்றும் நாடித்துடிப்பின் அளவைக் கணக்கிட உதவுகிறது.

 யாருக்கு அவசியம்

யாருக்கு அவசியம்

இது யாருக்கு அவசியம் இந்த பல்ஸ் ஆக்ஸிமீட்டர் ,நுரையீரல் மற்றும் இதயம் சார்ந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு இதுநாள் வரை பயன்பட்டு வந்தது. இப்போது கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள், கொரோனா பாதிப்புடன் வீட்டில் தனிமையில் இருப்பவர்களுக்கும், கொரோனா நெகட்டிவ் வந்தாலும் வீட்டில் 14 நாட்கள் தனிமையில் உள்ளவர்களுக்கும் முக்கியமான ஒன்றாக உள்ளது. ஏனெனில் உங்கள் உடலில் 96 முதல் 100 சதவீதம் ஆக்ஸிஜன் அளவு இயல்பாக இருக்கும். இது 95 சதவீதத்திற்கு மேல் குறைந்தால் உடனே மருத்துவர்களை நாட வேண்டும். அதை கண்டுபிடிக்கவே பல்ஸ் ஆக்ஸிமீட்டர் அவசியம் ஆகும்.

யாருக்கு அவசியம்

யாருக்கு அவசியம்

இது யாருக்கு அவசியம் இநத் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் ,நுரையீரல் மற்றும் இதயம் சார்ந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு இதுநாள் வரை பயன்பட்டு வந்தது. இப்போது கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள், கொரோனா பாதிப்புடன் வீட்டில் தனிமையில் இருப்பவர்களுக்கும், கொரோனா நெகட்டிவ் வந்தாலும் வீட்டில் 14 நாட்கள் தனிமையில் உள்ளவர்களுக்கும் முக்கியமான ஒன்றாக உள்ளது. ஏனெனில் உங்கள் உடலில் 96 முதல் 100 சதவீதம் ஆக்ஸிஜன் அளவு இயல்பாக இருக்கும். இது 95 சதவீதத்திற்கு மேல் குறைந்தால் உடனே மருத்துவர்களை நாட வேண்டும். அதை கண்டுபிடிக்கவே பல்ஸ் ஆக்ஸிமீட்டர் அவசியம் ஆகும்.

பல்ஸ் ஆக்ஸிமீட்டர் பயன்படுத்தும் முறை

பல்ஸ் ஆக்ஸிமீட்டர் பயன்படுத்தும் முறை

இதை எப்படி பயன்படுத்துவது: பல்ஸ் ஆக்ஸிமீட்டரை விரலில் பொருத்த வேண்டும். அதன் பிறகு, அதில் உள்ள ஸ்விட்சை ஆன் செய்ய வேண்டும். ஒரு நிமிடத்திற்குள்ளாகவே நாடித்துடிப்பின் எண்ணிக்கையும், ஆக்ஸிஜனின் அளவும் டிஸ்பிளேயில் தெரியும். உடலில் உள்ள மொத்த ஆக்ஸிஜனின் அளவு 95 -100 என்ற சதவிகிதத்தில் இருந்தால் நார்மலாக உள்ளீர்கள் என்று அர்த்தம். மாறாக இந்த அளவு 80, 70 சதவிகிதமாக இருக்கும்பட்சத்தில் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

அறிகுறிகள் வராது

அறிகுறிகள் வராது

கொரோனா வைரஸ் உங்கள் உடலுக்கு சென்றால் அது பல்கி பெருகி அறிகுறிகள் தெரிய 14 நாட்கள் ஆகும். இதை நோய்க் கிருமியின் 'இன்குபேஷன் காலம்' (Incubation period) என்று அழைப்பார்கள். இதன்பிறகுதான் அறிகுறிகள் தெரியும். இந்நிலையில் நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் வெளிப்படாத 'ஏசிம்ப்டமடிக்' (Asymptomatic) நிலையில் இருப்பவர்களுக்கு நோய்த்தொற்று இருந்தாலும் அறிகுறிகளே வராது. உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி இருந்தால் ஏசிம்ப்டமடிக் உள்ளவர்கள் எளிதாக சரியாகிவிடுவார்கள்.

Recommended Video

    Corona vaccine : Oxford இன்று முக்கிய அறிவிப்பு?
    முக்கியமானது

    முக்கியமானது

    ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் பலவீனமான நிலையில் உள்ள ஏசிம்ப்டமடிக் தொற்றாளர்களின் உடலில் ஆக்ஸிஜனின் அளவு மிகவும் குறைந்து மூச்சுத்திணறல் ஏற்படும். மரணம் ஏற்படும். இப்படி பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்று மிகவும் கடினம். எனவேதான் ஆக்ஸிஜன் அளவை தெரிந்து கொள்ள பல்ஸ் ஆக்ஸிமீட்டர் மிகவும் அவசியம் ஆகும். பல்ஸ் ஆக்ஸிமீட்டரை எல்லா மருந்து வாங்கும் கடைகளிலும் வாங்க முடியும். தரமான பல்ஸ் ஆக்ஸிமீட்டர்கள் ரூ.1,500 முதல் கிடைக்கின்றது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+