வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் வாக்களிப்பது எப்படி? முதல் முறை வாக்காளர்கள் அறிய வேண்டியவை
சென்னை: வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாமலேயே வாக்களிக்க முடியும்.. வாக்காளர் அடையாள அட்டை உங்களிடம் இல்லாவிட்டாலும், ஆதார் கார்டு, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் உள்பட மொத்தம் 12 ஆவணங்களில் ஏதாவது ஒரு ஆவணத்தை காட்டி நீங்கள் வாக்களிக்க முடியும்.
நமது நாட்டின் 17வது லோக்சபாவின் பதவிக் காலமானது, வரும் ஜூன் 16-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் 18-வது லோக்சபாவிற்கு எம்பிக்களை தேர்வு செய்யும் வகையில், தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 16ம் தேதி அறிவித்தது. மொத்தம் 7 கட்டங்களாக இந்தியா முழுவதும் தேர்தல் நடைபெற போகிறது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி, 2-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26-ந் தேதி, 3-ம் கட்ட தேர்தல் மே 7-ந் தேதி, 4-ம் கட்ட தேர்தல் மே 13-ந் தேதி, 5-ம் கட்ட தேர்தல் மே 20-ந் தேதி, 6-ம் கட்ட தேர்தல் மே 25-ந் தேதி, 7-ம் கட்ட தேர்தல் ஜூன் 1-ந் தேதிகளில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைப் பொறுத்தவரை முதல் கட்ட தேர்தலில் ஏப்ரல் 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற போகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 20-ந் தேதி (புதன்கிழமை) தொடங்கியது. வேட்புமனு தாக்கலுக்கு 27-ந் தேதி (புதன்கிழமை) கடைசி நாள் ஆகும். 28-ந் தேதி (வியாழக்கிழமை) வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கு 30-ந் தேதி ( வரும் சனிக்கிழமை) கடைசி நாள் ஆகும். அதன்பிறகு ஏப்ரல் 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலியாக உள்ள விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் ஏப்ரல் 19ம் தேதி தான் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
லோக்சபா தேர்தலை தவிர, ஆந்திர பிரதேசம், ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. அனைத்துக்கட்ட தேர்தல்களும் முடிக்கப்பட்டு ஜூன் மாதம் 4-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட உள்ளது. ஜூன் 6-ந் தேதி தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வருகின்றன.
இந்த தேர்தலில் 96.8 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 49.7 கோடி பேர் ஆண்கள், 47.1 கோடி பேர் பெண்கள், 1.8 கோடி பேர் முதல்முறை வாக்காளர்கள், 19.74 கோடி பேர் 20 முதல் 29 வயதுக்கு உட்பட்ட இளம் வாக்காளர்கள் 82 லட்சம் பேர் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், 2.18 லட்சம் பேர் 100 வயதுக்கும் மேற்பட்டவர்கள் ஆவார். இவர்கள் வாக்களிக்க 12 லட்சத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி மாதம் வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தில் 6 கோடியே 18 லட்சத்து 90,348 வாக்காளர்கள் உள்ளனர். கிட்டத்தட்ட அதன்பிறகும் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பார்கள் என்பதால் இந்த எண்ணிக்கை சில ஆயிரங்கள் அதிகரித்திருக்க வாய்ப்பு உள்ளது.
லோக்சபா தேர்தலில் முதல் முறை வாக்காளர்கள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை தொலைத்தவர்கள வாக்காளர் அடையாள அட்டை இல்லாமலேயே வாக்களிக்க முடியும்.. வாக்காளர் அடையாள அட்டை உங்களிடம் இல்லாவிட்டாலும் கீழ்கண்ட 12 ஆவணங்கள் இருந்தால் வாக்களிக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
12 ஆவணங்கள் என்னென்ன?
ஆதார் கார்டு
பான் கார்டு
ஓட்டுநர் உரிமம்
பாஸ்போர்ட்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணி அடையாள அட்டை
மருத்துவ காப்பீட்டு அட்டை
வங்கி/அஞ்சலக கணக்கு புத்தகங்கள்
தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை
புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்
மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொதுநிறுவனங்களில் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டை
நாடாளுமன்ற, சட்டமன்ற, சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை
சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை
மேற்கண்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்று இருந்தாலும், அதை அடையாள ஆவணமாக பயன்படுத்தி தங்களது ஓட்டுகளை வாக்காளர்கள் செலுத்ததலாம். ஆனால் நீங்கள் எந்த தொகுதியோ அங்குள்ள வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டியது அவசியம் ஆகும்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications