விஜய் மட்டும்.. சரியா பிளான் போட்டால்.. அதிமுகவின் அஸ்திவாரத்தையே ஆட்டலாம்.. தேடிவந்த வாய்ப்பு!
சென்னை: அதிமுகவின் தென்மண்டல வாக்குகள், திமுக எதிர்ப்பு வாக்குகளை மொத்தமாக கைப்பற்றும் வாய்ப்பு விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு வந்துள்ளது. அதிமுக உட்கட்சி மோதலை விஜய் தனக்கு சாதகமாக பயன்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன.

சிதறும் அதிமுக வாக்குகள்
1. செங்கோட்டையன், ஓ பன்னீர்செல்வம் எதிர்ப்பு காரணமாக அதிமுகவில் கடுமையான மோதல், உச்சகட்ட பிரிவினை ஏற்பட்டு உள்ளது. தொண்டர்கள் இடையே அதிருப்தி உள்ளது.
2. தென் மண்டலத்தில் அதிமுக மிக மோசமாக சரிந்து உள்ளது. டிடிவி தினகரன் கூட்டணியில் இருந்து விலகியது, ஓ பன்னீர்செல்வம் கூட்டணியில் இருந்து விலகியதால் தென்மண்டலத்தில் கடுமையான ஏமாற்றம் நிலவி வருகிறது.
3. கடந்த 2021 சட்டசபை தேர்தல், 2019, 2015 லோக்சபா தேர்தல்களில் அதிமுக தென் மண்டலத்தில் கடுமையான சரிவை சந்தித்தது. முக்குலத்தோர் ஆதரவு வாக்குகள் இல்லாத காரணத்தால் கடுமையான சரிவை எடப்பாடி சந்தித்தார். அதை மேலும் உறுதி செய்யும் வகையில் அடுத்தடுத்த சம்பவங்கள் தென் மண்டல அரசியலில் தற்போது நடந்துள்ளது.
4. அதிமுகவின் மிக முக்கியமான இஸ்லாமிய முகம்களில் ஒருவராக அறியப்படும் அன்வர் ராஜா திமுகவில் இணைந்துள்ளார். அதிமுக அமைப்புச் செயலாளராக உள்ள முன்னாள் எம்பி அன்வர் ராஜாவின் இந்த முடிவு அதிமுகவை கடுமையான அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தென்மாவட்டங்களில் அதிமுகவின் இஸ்லாமிய முகம்களில் முக்கியமானவராக இருந்தவர் அன்வர் ராஜா. அன்வர் ராஜா இஸ்லாமியர்கள் இடையே அரசியல் கடந்தும் கூட பெரிய மதிப்பையும் பெற்று இருந்தார். அதிமுக பாஜக உடன் கூட்டணி வைப்பதை நேரடியாகவும், மறைமுகமாகவும் இவர் கடுமையாக எதிர்த்து வந்தார். இவர் திமுகவில் ஐக்கியம் ஆகிவிட்டார்.
5. ஏற்கனவே பாஜக கூட்டணி காரணமாக அதிமுக மீது இஸ்லாமியர்கள் பலர் அப்செட்டில் இருக்கும் நிலையில்தான் திமுக பக்கம் ஐக்கியம் ஆகி உள்ளார் அன்வர் ராஜா. இதனால் இருக்கிற இஸ்லாமியர்கள் ஆதரவையும் எடப்பாடி இழக்கும் சூழல் உள்ளது. ஏற்கனவே டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம், சசிகலா உடன் எடப்பாடி பழனிசாமிக்கு உள்ள மோதல் காரணமாக முக்குலத்தோர் வாக்குகள் எடப்பாடிக்கு கிடைப்பது இல்லை. அதிமுக முக்குலத்தோர் வாக்குகளை இழந்து தென் மண்டலத்தில் கடுமையாக சிரமப்பட்டு வருகிறது. இப்போது இஸ்லாமியர்கள் வாக்குகளும் பறிபோகும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
6. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஓ.பன்னீர்செல்வம் அணி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். தலைமைக் கழக நிர்வாகிகளுடனான கூட்டத்திற்கு பிறகு ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார். தற்போது எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இவரின் வெளியேற்றமும் தென் மண்டலத்தில் அதிமுகவிற்கு பெரிய சவுக்கடியாக இருக்கும்.
விஜய்க்கு சாதகமான சூழல்
1. இப்படிப்பட்ட நிலவரம்தான் விஜய்க்கு சாதகமாக மாறி உள்ளது. இந்த அரசியல் சூழல் மொத்தமாக விஜய்க்கு சாதகமாக மாறி உள்ளது.
2. விஜய் தென் மண்டலத்தில் அதிமுகவை மூன்றாம் இடத்திற்கு தள்ள முடியும் .
3. திமுக எதிர்ப்பு வாக்குகள் அதிமுகவிற்கு செல்லாமல் தமிழக வெற்றிக் கழகத்திற்கு கொண்டு வர முடியும்.
4. முக்கியமாக திமுக பக்கம் செல்ல விரும்பாத முக்குலத்தோர் வாக்குகள், இஸ்லாமியர்கள் வாக்குகளை அதிமுக பக்கம் கொண்டு செல்லாமல் விஜய் தடுக்க முடியும்.
5. முறையாக திட்டமிட்டு கிரவுண்டு வேலைகளை செய்தால் கண்டிப்பாக பல தொகுதிகளில் அதிமுகவிற்கு விஜய் பெரிய சவாலாக மாறுவார்.












Click it and Unblock the Notifications