மதுராந்தகம், தாராபுரத்தில் கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்! தவெக வெற்றியின் பின்னணி என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் தவெகவுக்கும் அதிமுகவுக்கும்தான் போட்டி என கணிக்கப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் ஓட்டுக்கள் மாறி, தவெக வென்றதற்கான பின்னணி என்ன என்பதை பார்க்கலாம்.

இதுகுறித்து மார்ஷல் மீடியா எனும் யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் கூறியிருப்பதாவது: இடைத்தேர்தல் முடிவுகள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக அமைந்துள்ளன. இதில் ஆச்சரியம் என்னவென்றால் தவெகவுக்கும் அதிமுகவுக்கும்தான் போட்டி இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் இரு தொகுதிகளிலும் திமுக 2ஆவது இடத்தை தக்க வைத்திருக்கிறது.

by election results 2026 maduranthagam dharapuram

விஜய் சொன்னது நிரூபணமாகிவிட்டது என பார்க்கிறார்கள். இந்த தேர்தலில் தவெக எதிர்பார்த்தது என்ன, அடைந்தது என்ன என்பதைத்தான் பார்க்க வேண்டும். முதல்வர் விஜய், அமைச்சர்கள் ஆதவ், செங்கோட்டையன் உள்ளிட்டோர் இடைத்தேர்தலில் பெரிய வெற்றி கிடைக்கும் என கூறினர். செங்கோட்டையன் 75 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வெல்லும் என்றார். அது போல் ஆதவ் அர்ஜுனா ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றார். ஆனால் தற்போது கிடைத்த வெற்றியை பார்த்தால் அப்படி ஒன்றும் இல்லை.

திராவிட இயக்கங்கள்

வாக்குகளை திராவிட இயக்கங்கள் பிரித்திருக்கின்றன. தவெக மூன்றாவது சக்தியாக வந்துவிட்டது. இதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும் வெற்றி வெற்றிதான். தவெக முன்வைக்கும் வாதங்கள்தான் கேள்விக்குரியவை.

இரு தொகுதிகளிலும் விஜய் தேர்தல் பிரச்சாரம், ரோடு ஷோ, அமைச்சர்களின் தேர்தல் பணிகள், ஆளும் கட்சியின் அதிகார பலம் ஆகியவற்றை கடந்த அதிமுக கடுமையான போட்டியை கொடுத்தள்ளது.

தீர்ந்து போன சக்தி

அதிமுகவை தீர்ந்து போன சக்தி என ஒதுக்கிவிட முடியாது. தவெக அப்படி கருதினால் ஏமாந்துவிடும். திமுகவும் அதிமுகவும் கூட்டு என குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. ஆனால் தேர்தல் முடிவுகளைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை. இரு கட்சிகளும் கூட்டாக செயல்பட்டிருந்தால் தவெக தோல்வி அடைந்திருக்கும்.

அதிமுக

இந்த தேர்தலில் அதிமுக தனது கட்சிக்குள் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. இரு இடைத்தேர்தல்களிலும் சில முக்கிய அதிமுக நிர்வாகிகள் சரிவர பணியாற்றவில்லை என தெரிகிறது. அவர்கள் வேலை செய்திருந்தால் அதிமுக இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கும்.

அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்திற்கும் எம்ஜிஆருக்கும் இருக்கும் செல்வாக்கை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. விஜய் தன்னை எம்ஜிஆருடன் ஒப்பிட்டுக் கொண்டாலும் எம்ஜிஆரின் தீவிர ஆதரவாளர்கள் அதிமுகவை மறக்க மாட்டார்கள் என்பதே நிதர்சனம்.

விஜய்யின் வசீகரம்

விஜய்யின் வசீகரத்தையும் குறைத்து மதிப்பிட முடியாது. விஜய்க்கு ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அவருக்கு இளம் வாக்காளர்களின் ஆதரவு இருக்கிறது. அதே நேரத்தில் தேர்தல் வெற்றிக்கு ரசிகர் ஆதரவு மட்டும் போதாது. உள்ளூர் அளவில் வலுவான கட்சி அமைப்பு தேவை. மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் திமுக, அதிமுகவுக்கு உள்ளூர் கட்டமைப்பு இருப்பது இந்த தேர்தல் முடிவுகள் எதிரொலிக்கின்றன.

திமுக இந்தத் தேர்தலில் சிறப்பானச் செயல்பட்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. மதுராந்தகத்தில் முன்பு 3ஆவது இடத்தில் இருந்த திமுக இப்போது 2ஆவது இடம் பிடித்துள்ளது. எதிர்கால தேர்தல்களில் தவெக தனது உள்ளூர் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டியிருக்கும்.

விடுபட்ட வாக்காளர்கள்

எஸ்ஐஆர் நடவடிக்கையால் விடுபட்ட வாக்காளர்கள் அனைவரும் தவெகவுக்கு ஆதரவானவர்கள் என எடுத்துக் கொள்ள முடியாது. யார் எந்தக் கட்சிக்கு ஆதரவாக இருந்தார்கள் என்பதை தேர்தலுக்கு பிறகு மட்டும் முடிவு செய்து விட முடியாது. கூட்டணி அரசியலை பொருத்தமட்டில் திமுகவும், அதிமுகவும் எதிர்காலத்தில் ஒரே அணியில் இணைந்தாலும் அதில் என்ன தவறு இருக்கிறது?

தவெக தனது அரசியல் கணக்குகளை மறுபரிசீலனை செய்து உள்ளூர் அளவில் கட்சியை பலப்படுத்த வேண்டும். இவ்வாறு தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+