பச்சை சட்டை போட்டு, பட்டர்ஃபிளை கார்டு.. 90ஸ் காதலர் தினம் கலாட்டாக்கள் செமதான்ல!
சென்னை: 1990ஸ் கிட்ஸ்க்கு.. வெயிட்.. 90s Kids என்றால் 1982 அல்லது அதற்கு பிறகு பிறந்து 1990களில் பதின்ம வயதை அனுபவித்தவர்கள் என்பதை முதலிலேயே தெளிவாக சொல்லிடுறோம் நண்பா, நண்பீஸ். ஓகே, மேட்டருக்கு வருவோம். 90ஸ்ல, வாலண்டைன்ஸ் டேன்னா சும்மாவா? இன்னைக்கு மொபைல்ல டக்கு டக்குன்னு லவ் யூ சொல்ற மாதிரி அப்போ இல்லீங்க! காதல் சொல்லவும், காதலியை இம்ப்ரஸ் பண்ணவும் நம்ம பசங்க பண்ணின லூட்டி இருக்கே... அட அட அட! வாங்கோ, தொண்ணூறுகளின் அந்த ஜாலி வாலண்டைன்ஸ் டேவை கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்!

பச்சைன்னா காதல், கருப்புன்னா கப்சிப்!
தொண்ணூறுகளின் வாலண்டைன்ஸ் டேக்குன்னு சில ரூல்ஸ் உண்டுங்க! அதுல கலர் ரூல்ஸ்தான் டாப்! பிப்ரவரி 14 வந்துட்டா போதும், ஊரே பச்சைக் கடலாகும்! பச்சை சட்டை போட்டா நீங்க காதல் மன்னன், சிங்கிள் இல்லன்னு அர்த்தம்! ஒருவேளை காதல் கத்தரிக்கா வேணாம்னா, கருப்பு சட்டை போட்டு ஒதுங்கிடுவாங்க நம்ம பசங்க! இது ஒரு அன்-அஃபீஷியல் டிரஸ் கோடு மாதிரி காலேஜ்ல இருந்து ஆபீஸ் வரைக்கும் பயங்கர ஃபேமஸ்!
கிரீட்டிங் கார்டு ராஜ்ஜியம்!
இப்போ இன்ஸ்டாகிராம் ஸ்டோரி, வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்ன்னு ஈஸியா விஷ் பண்ணிடலாம். ஆனா தொண்ணூறுகள்ல கிரீட்டிங் கார்டுதான் கிங்! விதவிதமான டிசைன்ல, கலர் கலர்ல கார்டுங்க குவிஞ்சு கிடக்கும்! காதல் மெசேஜ், கவிதைகள், பட்டர்ஃபிளை டிசைன்னு கார்டை பார்த்தாலே காதல் பொங்கி வரும்! சில பசங்க ரெடிமேட் கார்டு வாங்கி ஃபார்மாலிட்டியா ப்ரபோஸ் பண்ணுவாங்க, ஆனா நம்ம கவிஞர்கள் இருக்காங்களே... அவங்க கையால கவித எழுதி கார்டு குடுத்து காதலியை கவிழ்த்துடுவாங்க பாருங்க! அந்த கார்டுக்கு இருந்த மவுசு வேற லெவல்!
பார்க் பெஞ்ச் டூ பீச் வரைக்கும்!
காதலர் தினம் வந்தா பார்க் பெஞ்சுகளுக்கு கொண்டாட்டம்தான்! சென்னை மெரினா பீச், கோவை வஉசி பூங்கா மற்றும் பொட்டானிக்கல் கார்டன், மதுரை ராஜாஜி பார்க்ன்னு எல்லா இடமும் லவ்வர்ஸ் பாரடைஸ் ஆகிடும்! காதல் ஜோடிகள் அங்கதான் சந்திச்சு கண்ணால பேசி, கைய கோர்த்து ரொமான்ஸ் பண்ணுவாங்க! காலேஜ் முடிஞ்சதும் பசங்க கேங்கா ஹோட்டலுக்கு போய் ட்ரீட் குடுக்குறதும் ஃபேமஸ்! அட, அந்த பார்க் பெஞ்சுகளும், பீச் மணலும் தொண்ணூறுகளின் காதல் சாட்சிகள்!
லேண்ட்லைன் சினிமா சாங்ஸ்!
செல்போன் வச்சிகிட்டு, எங்க வேணும்னாலும் இருந்து பேசுவதோ, மெசேஜ் அனுப்புவதோ மாதிரி வசதி அப்போ கிடையாதுங்க! லேண்ட்லைன் போன்லதான் லவ் டாக்! வீட்டுல ஆள் இல்லாத டைம் பார்த்து, மெதுவா, முணுமுணுன்னு பேசுவாங்க! 2 ரிங், 3 ரிங் அடிச்சி கட் பண்ணுனா அது நான்தான், ரெடியா இருன்னு கோட்வேர்ட்கள் கொடிகட்டி பறந்த காலம் அது. சினிமா பாட்டுன்னா அன்னிக்கெல்லாம் காதல் பாட்டுதான்! டேப் ரெக்கார்டரில், இயக்குநர் கதிர் மாதிரி காதலுக்கென்றே வாழ்க்கையை அர்ப்பணித்த இயக்குநர்களின் படப் பாடல்களை தேயத் தேய கேட்டு, வெறியேற்றிவிட்டுதான் தைரியத்தை வரவழைத்து காதலியை சந்தித்தார்கள் காதலர்கள். வாலண்டைன்ஸ் டேக்கு முன்னாடி ரிலீஸ் ஆகுற காதல் படங்கள் எல்லாம் பயங்கர ஹிட்! பாட்டு கேட்டும், சினிமா பார்த்தும் காதல் பண்ணின காலம் அது!
சிம்பிள், ஸ்வீட் வாலண்டைன்ஸ் டே!
தொண்ணூறுகளின் வாலண்டைன்ஸ் டே ரொம்ப சிம்பிள்ங்க, ஆனா ரொம்ப ஸ்வீட்! இன்னைக்கு டிஜிட்டல் மெசேஜ்ல காதல் மின்னல் வேகத்துல பரிமாறினாலும், அப்போ லெட்டர்லயும், கார்டுலயும், நேர்ல பார்த்து பேசுறதுலயும் இருந்த ஃபீலிங்கே வேற! பச்சை சட்டை, கிரீட்டிங் கார்டுன்னு பல புது கலாச்சாரத்தோட தொண்ணூறுகளின் வாலண்டைன்ஸ் டே செம்ம ஜாலி! அந்த நாள்கள், கடந்த காலம் மட்டுமில்லை, ஒரு பொற்காலம்!












Click it and Unblock the Notifications