விஜய் பிளானால்.. ஆடிப்போன டெல்லி! முதல்ல சின்னத்தை தருவோம்.. தவெகவிற்கு விசில் கிடைத்தது எப்படி?
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) தேர்தல் ஆணையம் 'விசில்' சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இது ஒரு சாதாரண நிர்வாக நடைமுறை போலத் தெரிந்தாலும், இதன் பின்னணியில் டெல்லி வரை அதிர்வுகளை ஏற்படுத்திய ஒரு மிகப்பெரிய அரசியல் சதுரங்க வேட்டை ஒளிந்திருப்பதாகத் தெரிகிறது.
இந்தியத் தேர்தல் ஆணையம் தவெக-விற்கு 'விசில்' சின்னத்தை அதிகாரப்பூர்வமாக ஒதுக்கியது. இந்தச் செய்தியை கட்சியின் சமூக வலைதளப் பக்கங்கள் கொண்டாடினாலும், கட்சியின் தலைவர் விஜய் இன்னும் பொதுவெளியில் தோன்றி அந்தச் சின்னத்தை அறிமுகப்படுத்தவில்லை என்பது விவாதத்தைக் கிளப்பியுள்ளது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK), 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தை நாடி இருந்தது. தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு மற்றும் ஒதுக்கீடு) ஆணை, 1968 இன் விதிகளின் கீழ் தங்களுக்கு ஒரு தேர்தல் சின்னத்தை ஒதுக்கக் கோரி இக்கட்சி, இந்திய தேர்தல் ஆணையத்தில் (ECI) மனு அளித்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்புதான் முதல் தேர்தலை எதிர்நோக்கிக் காத்திருக்கும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK), தனது வேட்பாளர்களுக்கான பொதுத் தேர்தல் சின்னம் கேட்டு இந்திய தேர்தல் ஆணையத்தை (ECI) அணுகி இருந்தார். TVK இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், விசில், ஆட்டோ ரிக்ஷா, மைக்ரோபோன் உள்ளிட்ட 10 சின்னங்கள் அடங்கிய பட்டியலுடன், தேர்தல் சின்னங்கள் ஆணை, 1968-இன் கீழ், விண்ணப்பத்தை கடந்த சில வாரங்களுக்கு முன் சமர்ப்பித்தார். இந்த சின்னம் விவகாரத்தில் "டெல்லி" விஜய்க்கு எதிராக கேம் ஆடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஜய்க்கு இந்த சின்னம் கிடைத்துள்ளது. அது எப்படி?
சீமான் பாணி சிக்கல் வருமா?
ஆரம்பத்தில், தவெக தரப்பில் ஒருவித தயக்கம் நிலவியது. கடந்த தேர்தல்களில் நாம் தமிழர் கட்சியின் 'கரும்பு விவசாயி' சின்னம் பறிபோனது போல, தங்களுக்கும் கடைசி நேரத்தில் சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுமோ என்று விஜய் தரப்பு அஞ்சியது. சின்னம் மோசமாக இருந்தால், அது 2026 தேர்தலில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் விஜய் ஒரு துணிச்சலான 'பிளான் பி' (Plan B)-ஐ கையில் எடுத்ததாகக் கூறப்படுகிறது.
காங்கிரஸுடன் கைகோர்க்கும் திட்டம்?
தேர்தல் ஆணையம் ஒருவேளை விசில் சின்னத்தை மறுத்தால், தவெக தனது தனித்துவத்தை இழக்க விரும்பவில்லை. அந்தச் சூழலில், காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்கலாம்.. தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியின் 'கை' சின்னத்தில் தவெக வேட்பாளர்களைக் களம் இறக்கலாம் என்ற ஒரு வியூகம் அக்கட்சியின் உயர்மட்ட ஆலோசனையில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதாவது உங்கள் சின்னத்தில் போட்டியிடுகிறோம் என்று சொன்னால் காங்கிரஸ் வந்துவிடும் என்பதால் தவெக இப்படி ஒரு குதர்க்கமான திட்டத்தை கையில் எடுத்துள்ளதாம்.
இது காங்கிரசுக்கு பெரிய ஆஃபராக இருக்கும் என்பதால் தவெக அதற்காக காய் நகர்த்தி வந்துள்ளது.
டெல்லிக்கு பறந்த தகவல்
இந்தத் தகவல் டெல்லியில் உள்ள பாஜக மேலிடத்தை எட்டியபோது, அங்கு ஒருவித பதற்றம் நிலவியதாகக் கூறப்படுகிறது. விஜய்யின் ரசிகர் பட்டாளமும் காங்கிரஸின் தேசிய அடையாளமும் இணைந்தால், அது தமிழகத்தில் பின்வரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டது:
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு புதிய ரத்தத்தைப் பாய்ச்சும்
பாஜகவின் "காங்கிரஸ் இல்லாத பாரதம்" என்ற முயற்சிக்குத் தென் மாநிலங்களில் முட்டுக்கட்டை ஏற்படும். வாக்குகளை ஒருங்கிணைத்து, தற்போதைய அரசியல் சமன்பாடுகளைத் தலைகீழாக மாற்றும்.
சின்னம் கிடைத்த வேகம்
இந்த 'காங்கிரஸ்-விஜய்' கூட்டணி அமைந்தால் அது தங்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்த டெல்லி மேலிடப் புள்ளிகள், சில நகர்வுகளை மேற்கொண்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதன் விளைவாகவோ என்னவோ, அடுத்த சில நாட்களிலேயே எந்தத் தடையுமின்றி தவெக-விற்கு 'விசில்' சின்னம் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்டது.
விஜய் தனிச் சின்னத்தில் போட்டியிடுவதன் மூலம், காங்கிரஸ்-விஜய் மெகா கூட்டணி உருவாவது இப்போதைக்குத் தவிர்க்கப்பட்டுள்ளது. பாஜகவிற்கு இது ஒரு சாதகம்.
விசில் சத்தம் ஆரம்பம்!
சின்னம் கிடைத்துவிட்டாலும், 2026-ல் விஜய்யின் வருகை யாருடைய வாக்குகளைப் பிரிக்கும் என்பது தான் தற்போதைய விவாதம். விசில் சத்தம் தமிழக அரசியல் களத்தில் யாருக்கு வெற்றியைத் தரும், யாருக்கு வேட்டு வைக்கும் என்பது இன்னும் சில மாதங்களில் தெரிந்துவிடும்.
-
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
ரசிகர்களை ஏமாற்றிய முதல்வர் விஜய்.. இப்படி செய்வார்னு எதிர்பார்க்கலை.. கர்நாடகா கோவிலுக்கு சென்றபோது சம்பவம் -
தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை.. 202 போதைப்பொருள் குற்றவாளிகள் உட்பட 1,328 பேர் கைது! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
அரசியல் சதுரங்கத்தில் சறுக்கிய விஜயதாரணி! ‘அமைச்சர்’ வாய்ப்பை கோட்டை விட்டாரா விளவங்கோடு சிங்கப்பெண் -
பேய் பிசாசு நலத்துறை அமைச்சர் ராகவா லாரன்ஸ்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. தெறிக்கும் மீம்ஸ்! -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
234 மாவட்ட செயலாளர்.. விஜய் எடுக்கும் புதிய வியூகம்.. நிர்வாகிகளுக்கு போன மெசேஜ்.. பின்னணி என்ன? -
கம்ப்ளைன்ட் கொடுக்க போன என் மீதே கேஸ் போட்டுட்டாங்க.. பிளான் பண்ணி பண்ணுறாங்க! ஜூலி ஆதங்கம் -
“கரண்ட்டே இல்ல.. விவசாயிகளை ஏமாற்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜய்” - எடப்பாடி கடும் தாக்கு! -
எம்ஜிஆர் பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு வெள்ளி வாள் வழங்கி தரிசனம்












Click it and Unblock the Notifications