சென்னை மக்கள் எப்படி வாக்களித்துள்ளனர்? குடிசை பகுதிகளில் திமுக.. அபார்ட்மெண்ட்களில் பாஜக தான்!
சென்னை: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் திமுக 40க்கு 40 என அனைத்து தொகுதிகளில் வென்றாலும் கூட பாஜகவும் தனது வாக்கு வங்கியைக் கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாகச் சென்னையில் 3இல் 2 தொகுதிகளில் அதிமுகவை விட அதிக வாக்குகள் பெற்றன. திமுகவுக்கும் பாஜகவுக்கும் சென்னையில் ஆதரவு எப்படி இருக்கிறது.. எங்கெல்லாம் பாஜக கை ஓங்கி இருக்கிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
லோக்சபா தேர்தலில் சென்னையில் உள்ள 3 தொகுதிகளிலும் திமுகவே வெற்றி பெற்றது. அதேநேரம் 3இல் 2 தொகுதிகளில் அதிமுகவை விட பாஜக அதிக வாக்குகள் பெற்றன.

இதற்கிடையே லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகளைப் பகுப்பாய்வு செய்யும் போது சில சுவாரசியமான விஷயங்கள் நமக்குத் தெரிய வருகிறது.
திமுக, பாஜக: அதாவது 2024 லோக்சபா தேர்தலில் சென்னையைப் பொறுத்தவரை எங்கெல்லாம் குடிசை பகுதிகள் அல்லது தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் குடியிருப்புகள் இருக்கிறதோ, அங்குள்ள வாக்குச்சாவடிகளில் எல்லாம் திமுக அதிக வாக்குகளைப் பெற்றுள்ளன. அதேநேரம் அபார்ட்மெண்ட், பிளாட்கள் இருக்கும் வாக்குச் சாவடிகளில் பாஜக கை ஓங்கி இருக்கிறது.
சென்னை வடக்கு, மத்திய சென்னை, சென்னை தெற்கு ஆகிய லோக்சபா தொகுதிகளில் பதிவான வாக்குகளைப் பகுப்பாய்வு செய்யும் போது நமக்கு இந்த முடிவு தெரிய வருகிறது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எந்தக் கட்சிக்கு எத்தனை வாக்குகள் விழுந்தன என்பதைக் காட்டும் ஃபார்ம் 20இல் இருந்து இந்த டேட்டாக்கள் எடுக்கப்பட்டுள்ளன.
குடிசை பகுதிகளில் திமுகவுக்கு ஆதரவு: குடிசை பகுதிகளிலும் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினர் அதிகம் இருக்கும் பகுதிகளில் திமுகவுக்கே அதிகபட்ச வாக்குகள் கிடைத்துள்ளன. அங்குள்ள வாக்குச்சாவடிகளில் திமுகவுக்குக் குறைந்தபட்சம் 47.5% வாக்குகள் முதல் அதிகபட்சமாக 79% வாக்குகள் கிடைத்துள்ளன.
மறுபுறம் இந்த குடிசை பகுதிகள் இருக்கும் வாக்குச்சாவடிகளில் பாஜகவுக்குக் குறைந்த வாக்குகளே கிடைத்துள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் பாஜகவுக்குக் கிடைத்த அதிகபட்ச வாக்குகளே 24 சதவிகிதம் தான். அதுவும் நுங்கம்பாக்கம் பகுதிகளில் மட்டுமே. மற்றபடி பெரும்பாலான பகுதிகளில் 10% குறைவான வாக்குகளே கிடைத்துள்ளன. அண்ணாசாலையில் சில வாக்குச்சாவடிகளில் வெறும் 2.2% வாக்குகள் மட்டுமே பாஜகவுக்குச் சென்றுள்ளன.
அபார்ட்மெண்ட்கள்: அதேநேரம் மறுபுறம் "அபார்ட்மெண்ட்கள்" அல்லது "பிளாட்கள்" இருக்கும் வாக்குச்சாவடிகளில் பாஜகவுக்குக் கணிசமான ஆதரவு இருக்கிறது. இந்த வாக்குச்சாவடிகளில் பல இடங்களில் பாஜகவின் வாக்கு வங்கி 50% தாண்டியுள்ளது. குறிப்பாக வேப்பேரி பகுதியில் சில வாக்குச்சாவடிகளில் 90% வரை பாஜகவுக்குச் சென்றுள்ளது. சில தொகுதிகளைத் தவிர பெரும்பாலான தொகுதிகளில் வாக்கு வங்கி 50% மேல் தான் இருக்கிறது.
பாஜக: அதேநேரம் இந்த வாக்குச்சாவடிகளில் ஒப்பீட்டளவில் திமுகவுக்கான ஆதரவு குறைவாகவே இருக்கிறது. பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் திமுகவுக்கு 50% கீழ் தான் கிடைத்துள்ளது. சில வாக்குச்சாவடிகளில் மட்டுமே 50-60% வாக்குகள் கிடைத்துள்ளன. 60% மேல் கிடைத்த தொகுதிகளின் எண்ணிக்கை அதை விடக் குறைவு.
இந்த அப்பாட்மெண்டுகள் இருக்கும் பகுதிகளில் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் திமுகவுக்கு விழும் வாக்குகள் 50% கீழ் தான் இருக்கிறது. பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் 30-50% வாக்குகளை மட்டுமே திமுகவால் பெற முடிகிறது. குறைந்தபட்சமாக சில வாக்குச்சாவடிகளில் 10% கீழ் கூட சென்றுள்ளது.
இதன் மூலம் சென்னையில் குடிசை பகுதி அல்லது ஏழைகள் அதிகம் இருக்கும் வாக்குச்சாவடிகளில் திமுகவுக்கு ஆதரவு அதிகமாகவும் "அபார்ட்மெண்ட்கள்" அல்லது "பிளாட்கள்" இருக்கும் வாக்குச்சாவடிகளில் பாஜகவுக்கு ஆதரவு அதிகமாக இருப்பதும் தெரிய வருகிறது.
-
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்!












Click it and Unblock the Notifications