எச்.ராஜாவிற்கு தேவையா இது.. பிடிஆரை பற்றி போட்ட ஒற்றை ட்வீட்.. குபுகுபுவென திரண்ட திமுகவினர்
பிடிஆர் பட்ஜெட் பற்றி எச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்
சென்னை: எச்.ராஜா ஒரே ஒரு ட்வீட்தான் போட்டார்.. அதுக்குள்ள மொத்த பேரும் திரண்டு வந்து, ட்விட்டரையே அதகளப்படுத்திவிட்டனர்.. பட்ஜெட் தாக்கல் செய்த பிடிஆர்தான் விஷயமே..!
தமிழக நிதி அமைச்சர் பிடிஆரை பொறுத்தவரை அளவுக்கு அதிகமான புத்திசாலி.. வெளிநாட்டில் படித்தவர்..
நிதி இலாகா விவரங்களை தன் விரல் நுனியில் வைத்திருப்பவர்.. சோஷியல் மீடியாவில் எப்பவுமே ஆக்டிவ்வாக இருப்பார்.

பிடிஆர்
யாராவது அரசியல் தலைவர்கள், அல்லது ட்விட்டர்வாசிகள் தேவையில்லாமல் விமர்சித்தாலோ, சீண்டினாலோ, அவர்களுக்கு ஆதாரங்களுடன் பதிலடி தந்து வாயடைத்து போக வைப்பார். அதேபோல, துறை ரீதியாக இவரை யாருமே எளிதாக விமர்சனம் செய்ய முடியாது.. தமிழகத்துக்கு சேர வேண்டிய நிலுவைகளை தராத பட்சத்தில் மத்திய அரசை துணிவுடன் கேள்வி எழுப்பி வருபவர்..

துணிச்சல்
விடாமல் விமர்சனம் செய்து வருபவரும்கூட.. இதனால் பிடிஆர் என்றாலே டெல்லி கலங்கிப் போய் எரிச்சலை வெளிப்படுத்துவது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.. இந்நிலையில்தான் நேற்றைய தினம், 2022-23ஆம் நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட் அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்... இதில் தொழில்கள் சார்ந்த மற்றும் பல்வேறு துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டிருந்தார்..

ட்வீட்
இதுகுறித்து தமிழக அரசியல் கட்சிகள் கருத்துக்களை கூறி வருகின்றன.. எதிர்க்கட்சிகள் அனைத்தும் எதிராகவும், கூட்டணி கட்சி தலைவர்கள் ஆதரித்தும் பட்ஜெட் தொடர்பான தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவும் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. ஆனால், அது பட்ஜெட் பற்றிய ட்வீட் இல்லை.. எல்லா கட்சி தலைவர்களும் பட்ஜெட்டை விமர்சித்தால், எச்.ராஜா மட்டும், பிடிஆரை விமர்சித்துள்ளார்..
|
வீடியோ
அதுவும் பிடிஆர் தமிழை விமர்சித்துள்ளார்.. இது தொடர்பாக பிடிஆர் பட்ஜெட் உரை சம்பந்தப்பட்ட வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.. அதில், பிடிஆர் திக்கி திணறி தமிழ் வரிகளை படிப்பது பதிவாகி உள்ளது.. இந்த வீடியோவை ஜனகராஜ் காமெடியுடன் ஒப்பிட்டுள்ளார் எச்.ராஜா.

அண்ணாமலை
அதாவது பிடிஆர் பேச்சை வைத்து, ஒரு மீம்ஸையே கிரியேட் செய்துவிட்டார்.. அண்ணாமலை படத்தில் வரும், NASAMA NEE PONIYA, நாசமா நீ போனியா என்ற சீனை உள்ளே நுழைத்து, பிடிஆர் தமிழுடன் ஒப்பிட்டுள்ளார்.. அவ்வளவுதான்.. இதற்கு பிறகு திமுகவினர் திரண்டு குபுகுபுவென எச்.ராஜா ட்விட்டருக்குள் நுழைந்துவிட்டனர்.. அதில் ஒருசிலர் கமெண்ட்கள்தான் இவை:

மோடி
"உங்க ஜி தான் MA Entire Political Science படிச்சவராச்சே... டெலெப்ரோம்டர் இல்லாம வந்து பேச சொல்லுங்க, அவர் படித்தது எல்லாம் ஆங்கில வழி கல்வி, தமிழில் தடுமாற்றம் வருவது ஒரு பெரிய விசயமே இல்லை.. எதையும் விற்காமல் பட்ஜெட் போட்டு, 7000 கோடி கடனை குறைத்து இருக்கார்.. அது தான் சாதனை... நீங்க தமிழ் வளர்த்த அழகை விட, திமுக தமிழ் வளர்த்த அழகு பரவாயில்லையே.....
Recommended Video

ஹைகோர்ட்
நேத்தே சொன்னாங்க.... பட்ஜெட்டில் குறை காண முடியாதவர்கள், கடைசியில் பிடிஆர் அவர்களின் தமிழை குறை சொல்லுவார்கள் என்று.... சொல்லி ஒரு நாள் ஆகல.... இதோ ஆரம்பிச்சிட்டாங்க.. அவருடன் திராணி இருந்தால் ஆங்கிலத்தில் சரளமாக பேச முடியுமா?.. கோழி குருடா இருக்கா இல்ல நொண்டியா என்று பார்க்கக்கூடாது கொழம்பு ருசியா இருக்கா என்று தான் பார்க்கவேண்டும்.. ஹைகோர்ட்டாவது டேஷாவது என்று தமிழ் வளர்த்ததைவிட இது பரவாயில்லை.. சார். இன்னும் இருக்கீங்களா? இப்போலாம் online வர்றதே இல்ல போல" இப்படி கமெண்ட்கள் விழுந்து கொண்டிருக்கிறது.. இதனால் எச்.ராஜா ட்விட்டரே படுபிஸியாக காணப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications