கோவை, பொள்ளாச்சி, நாமக்கல்லில் மலருது தாமரை.. நம்பர் 2 கன்பார்ம்.. அதிமுகவை அதிர வைத்த கணிப்பு
சென்னை: கோவை, நாமக்கல், ஈரோடு, திருப்பூர் போன்ற இடங்களில்.. பொள்ளாச்சியில் கூட அதிமுகவை விட பாஜக அதிக இடங்கள் வாங்கும்.குறிப்பிட்ட ஜாதி வாக்குகள் அங்கே பிரியும், என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் தொடர்பாக வரிசையாக சர்வேக்கள் வெளியாகி வருகின்றன. இந்த சர்வேக்கள் பல்வேறு அதிர்ச்சி தரும் சுவாரசியமான விஷயங்களை வெளியிட்டு வருகின்றன. டைம்ஸ் நவ் - மேட்ரைஸ் என்சி இது தொடர்பாக கருத்து கணிப்புகளை மேற்கொண்டு உள்ளன. தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் யார் வெற்றிபெறுவார்கள் என்றும் கணிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. . தமிழ்நாடு (மொத்த இடங்கள்- 39): லோக்சபா தொகுதி கணிப்புகள் இதோ:

- பாஜக: 1
- திமுகவின் இந்தியா கூட்டணி - 36
- அதிமுக: 2
- மற்றவை: 0
தமிழ்நாட்டில் தோல்வி: அதே சமயம் தமிழ்நாட்டில் பாஜக படுதோல்வி அடையும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு (மொத்த இடங்கள்- 39): லோக்சபா தொகுதி கணிப்புகள் படி பாஜக: 1 இடத்தில் மட்டுமே வெல்லும். திமுகவின் இந்தியா கூட்டணி - 36 இடங்களில் வெல்லும். 39 இடங்களில் இருந்து 3 இடங்களை திமுக இழக்கும் என்றாலும், பெரும்பான்மை இடங்களில் திமுகவே வெல்லும். அதிமுக: 2 இடங்களில் வெல்லும். கடந்த முறை ஒரு தொகுதியில் வென்ற அதிமுக இந்த முறை 2 இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
பாஜக முந்தும்: திமுக கூட்டணி லோக்சபா தேர்தலில் 59.7 சதவிகிதம் வாக்குகளை பெறும் என்று கணிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதேபோல் பாஜக 20.6 சதவிகிதம் வாக்குகளை பெறும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அதிமுக 16 சதவிகித கருத்து கணிப்புகளை பெறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
அதாவது இந்த முறை பாஜக அதிமுகவை விட அதிக வாக்குகள் பெறும். முதல்முறையாக பாஜகவின் வாக்கு வங்கி அதிமுகவை முந்தும். தமிழ்நாட்டில் பாஜக இரண்டாம் இடத்தை பெறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இப்படி பல்வேறு கணிப்புகள் பாஜக அதிமுகவை விட அதிக வாக்குகள் பெறும் என்று கணித்து உள்ளன.
பேட்டி: இது தொடர்பாக மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியன் ஒன்இந்தியாவிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், லோக்சபா தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அதிமுக வாக்குகள் சரியும். அதிமுகவை அடித்து பாஜக இரண்டாம் இடம் வர முடியாது என்கிறார்கள். ஆனால் சில இடங்களில் பாஜக அதிமுகவை முந்தும். கண்டிப்பாக அதிக வாக்குகள் வாங்கும்.
கோவை, நாமக்கல், ஈரோடு, திருப்பூர் போன்ற இடங்களில்.. பொள்ளாச்சியில் கூட அதிமுகவை விட பாஜக அதிக இடங்கள் வாங்கும்.குறிப்பிட்ட ஜாதி வாக்குகள் அங்கே பிரியும். இதனால் அதிமுக அடி வாங்கும். இப்படி இருக்க பாஜக சில இடங்களில் அதிக இடங்களை வாங்கும்.
வாய்ப்பு இருக்கு; அங்கே திமுகதான் வாக்குகள் பிரிவதால் வெற்றிபெறும். ஆனால் அதிமுக வாக்குகள் சரிந்து பாஜகவிற்கு சாதகமாக சூழ்நிலை மாறும். அதோடு செந்தில் பாலாஜி இல்லாமலே இது திமுக வெற்றிபெற சாதகமாக மாறும். செந்தில் பாலாஜி இல்லாமலே வென்றுவிட்டோம் என்று திமுக காட்ட முடியும்.
இது பாஜகவிற்கு பெரிய பின்னடைவாக மாறும். அதிமுகவிற்கு பின்னடைவாக மாறும். அங்கே வாக்குகள் அப்படி. அதிமுக, பாஜக தனித்து நின்றால், சிலர் அதிமுகவிற்கு வாக்களிப்பதையே விரும்புவார்கள். அப்படிப்பட்ட சமயத்தில் அதிமுக சில இடங்களில் 3ம் இடத்திற்கு செல்லும் வாய்ப்புகள் உள்ளன என்று கூறியுள்ளார்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான்












Click it and Unblock the Notifications