என் ஜாதகம் ஸ்ட்ராங்க்.. கட்சியை உடைக்க போகிறாயா?.. மாஜியிடம் எகிறிய எடப்பாடி.. அதிமுகவில் அபாயம்
சென்னை: அதிமுகவில் உட்கட்சி மோதல் தொடங்கி உள்ளதாக உறுதிப்படுத்தப்படாத சில செய்திகள் வருகின்றன. இந்த செய்திகளின் நம்பகத்தன்மையை குழப்பம் உள்ள நிலையில்.. புதிதாக வேறு ஒரு அதிர்ச்சி தரும் செய்தியும் வந்துள்ளது.
அதிமுக - பாஜக கூட்டணி சமீபத்தில் முறிந்தது. இந்த கூட்டணி முறிவு பற்றி எடப்பாடி பழனிச்சாமி தொடக்கத்தில் எதுவும் பேசவில்லை. ஆனால் அதன்பின் மௌனம் கலைத்த எடப்பாடி பழனிசாமி.. கூட்டணியை அதிமுக உடைத்தது. அதிமுக தொண்டர்கள் உடைத்தனர். இந்த கூட்டணி உடைக்கும் முடிவு தொண்டர்களுடையது.

அவர்கள்தான் கூட்டணியை உடைக்க உத்தரவிட்டனர். தொண்டர்களின் பேச்சுக்கு மதிப்பளித்து இந்த முடிவை எடுத்தோம். அதோடு 2024 லோக்சபா தேர்தலில் இனியும் பாஜகவுடன் கூட்டணி இல்லை. இனி கூட்டணி இல்லாமலே தொடருவோம், என்று கூறினார்.
இரண்டு நிலைப்பாடு: எடப்பாடி பழனிசாமியின் இந்த முடிவு காரணமாக அதிமுகவில் இரண்டு விதமான நிலைப்பாடு ஏற்பட்டு உள்ளதாம். ஒன்று மகிழ்ச்சி. அதாவது கூட்டணி முறிந்துவிட்டது. இனி கொண்டாட்டம்தான். அதிமுக இனி வெற்றி பாதைக்கு திரும்பும். அதிமுகவிற்கு இனிதான் நல்ல காலம். பாஜகவுடன் இருந்ததால் இத்தனை காலம் வெற்றிபெற முடியவில்லை. இனி எப்போதும் வெற்றிதான். முக்கியமாக சிறுபான்மையினர் வாக்குகள் தங்களுக்கு வரும் என்ற உற்சாகத்தில் அதிமுகவினர் சிலர் இருக்கிறார்களாம்.
இன்னொரு பக்கம்.. கூட்டணி உடைந்தால் நமக்குத்தான்.. ஏகப்பட்ட வழக்குகள் நம்மிடம் உள்ளன. அதை எல்லாம் புரட்டி பார்த்தால் முடிந்தது. அதை எல்லாம் தூசி தட்டினார்கள் என்றால் நமக்கு சிக்கல். அதோடு கொங்கு மண்டலத்தில் வெல்ல பாஜக அவசியம். அவர்கள் இல்லாமல் பார்த்தீர்களா? நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட தோல்வி அடைந்தோம்.
அவர்கள் நமக்கு வேண்டும். அதோடு ஆளுநர் நமக்கு எதிரான விசாரணைக்கு இதுவரை அனுமதி கொடுக்கவில்லை. இப்போது கூட்டணியை உடைத்தால் ஆளுநர் இதற்கு அனுமதி கொடுக்கும் வாய்ப்புகள் உள்ளன. அப்படி நடந்தால் நமக்குத்தான் சிக்கல் என்று கூறி வருகிறார்களாம். அதோடு அதிமுகவில் இருக்கும் விஐபி மாஜி ஒருவர். எடப்பாடி கூட்டணியை உடைத்ததால் கடுப்பில் இருக்கிறாராம்.
எடப்பாடி பாய்ச்சல்: இப்படி கூட்டணி முறிவால் அதிமுக - பாஜக விழி பிதுங்க அதிமுக உள்ளேயே உட்கட்சி மொத்தம் ஏற்பட்டு உள்ளதாம். அந்த விஐபி மாஜி ஒருவேளை பாஜக உத்தரவிட்டால் அதிமுகவை உடைத்து அதிமுகவில் தனி பிரிவு ஒன்றை உருவாக்கி பாஜகவுடன் கூட்டணி வைக்கவும் ரெடியாக இருக்கிறாராம். அதாவது அதிமுகவை உடைக்க ரெடியாகி வருகிறான். இப்படிப்பட்ட நிலையில்தான் அந்த அதிமுக புள்ளி, சக மாஜி மூத்த தலைவர் ஒருவரிடம் சென்று.. பாஜக கூட்டணி உடைந்தால் பெரிய சிக்கல் ஆகும்.
பாஜக ஆதரவுடன் நாம் கூட்டணி அமைக்க வேண்டும். அதோடு நான்தான் அடுத்த முதல்வர். எனக்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும். கட்சியில் பிரச்சனை வந்தால் என்னை ஆதரிக்க வேண்டும் என்று கூறியுள்ளாராம். ஆனால் அந்த மாஜி இதை கேட்டுவிட்டு நேரடியாக சென்று அதை எடப்பாடி காதிலும் போட்டுவிட்டாராம்.
இதை கேட்டு எடப்பாடி பழனிசாமியும்.. அந்த மாஜிக்கு.. நீ என்ன கட்சியை உடைப்பது உடைத்து பார். என் ஜாதகம் மிக வலிமையானது. என்னை எதுவும் செய்ய முடியாது. உன் பைல்ஸ் என்னிடம்தான் இருக்கிறது என்று கடுமையாக கோபம் அடைந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதன் நம்பகத்தன்மை இன்னும் தெரியவில்லை.
அதிமுக கூட்டணி உடைய காரணமே அமித் ஷாதானாம்.. அண்ணாமலை இல்லையாமே.. வெளியான சீக்ரெட்?)












Click it and Unblock the Notifications