உதயநிதி "தம்பி".. ஸ்டாலின் "ஹேட்ஸ் ஆப்".. விஜய்க்கு ரகசிய செக் வைத்த ரஜினி.. அப்செட்டான தவெக!
சென்னை: நடிகர் விஜய் சமீபத்தில் தனது தமிழக வெற்றிக் கழக கொடியை அறிமுகம் செய்தார். நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கொடி சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.
மேலே, கீழ் சிவப்பு, நடுவில் மஞ்சள் நிறத்தில் கொடி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கொடியில் இரண்டு பக்கம் யானை வைக்கப்பட்டு உள்ளது. இவை போர் யானைகள் ஆகும். நடுவில் வாகை மலர் வைக்கப்பட்டு உள்ளது. அதை சுற்றி ஸ்டார்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த கொடி முழுக்க முழுக்க தமிழ், தமிழ் தேசியம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகின்றது.

நடிகர் விஜய் தனது கட்சி கொடியை அறிமுகப்படுத்திய சில நாட்களிலே, ஒரு காலத்தில் அரசியலுக்கு வருவதாக சொல்லி, பின்னர் பின்வாங்கிய நடிகர் ரஜினியை அழைத்து அவர் வாயால் முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பாராட்டி திமுக சார்பாக கூட்டம் நடத்தி இருக்கிறார்கள். இதில் ரஜினிகாந்த் பேசிய சில விஷயங்கள் விஜய் தரப்பை பெரிய அளவில் அப்செட்டாக்கி உள்ளது.
நேற்று அமைச்சர் எ.வ.வேலு எழுதிய 'கலைஞர் எனும் தாய்' புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார். அதில் மொத்த திமுகவையும், உதயநிதி ஸ்டாலினையும் ரஜினிகாந்த் மிக தீவிரமாக பாராட்டி பேசினார்.
உதயநிதி பாராட்டு: முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி பேசுகையில், அரசியலுக்கு வந்து கடினமாக உழைத்து தனக்கென பாணியை உருவாக்கி உள்ளார் உதயநிதி ஸ்டாலின். தனக்கொரு நல்ல அரசியல் எதிர்காலம் இருக்கு என்று நிரூபிக்கும் வகையில் உதயநிதி செயல்படுகிறார். பேச்சு, செயலில் தனக்கான பாணியை உருவாக்கியவர் அமைச்சர் உதயநிதி.
என்னுடைய பாசத்துக்குரிய, இப்போது தான் கொஞ்சம் நாள் அரசியலுக்கு வந்து கடினமாக உழைத்து பேச்சில் தனக்கென பாணியை உருவாக்கி கொண்டு மக்கள் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும் பெயர், புகழ் பெற்று தனக்கொரு ஸ்டாலினை வைத்து.. அன்பு தம்பி உதயநிதி ஸ்டாலின் செயல்படுகிறார், என்று பேசினார்.
திமுக பக்கம் சாய்ந்து பேச்சு: அதோடு நிற்காமல், எந்த மாதிரியான விமர்சனங்களையும் ஆக்கப்பூர்வமாக எடுத்துக்கொண்டு கையாண்டவர் கலைஞர். தற்போது சிலர் விமர்சனம் செய்கின்றனர். ஆனால், பிறர் மனதை நோகடிக்கும் வகையில் விமர்சனங்கள் உள்ளன. பிறர் மனதை நோகடிக்கும் வகையில் விமர்சனங்கள் கூடாது.
உலகில் எந்தவொரு தலைவருக்கும் இந்த மாதிரி ஒரு நூற்றாண்டை யாரும் கொண்டாடி இருக்க மாட்டார்கள். கொண்டாடவும் முடியாது திமுகவினர் ஆலமரம் போன்றவர்கள்; அவர்கள் எந்தப் புயல் அடித்தாலும் தாங்கி நிற்பார்கள். முதல்வர் ஸ்டாலின் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் மிகப்பெரிய வெற்றி"
ஒரு கட்சியை கட்டி காப்பது என்பது மிக கடினம், அதை சிறப்பாக செய்கிறார் முதலமைச்சர். முதலமைச்சர் கையில் புத்தகத்தை பெற்றதில் பெருமை என்று கூறினார் .
ஸ்டாலினுக்கு பாராட்டு: எப்போதுமே பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய மாணவர்கள் ஒரு பிரச்சனையாக இருக்க மாட்டார்கள். அவர்களை ஈஸியாக சமாளித்து விடுவார்கள். ஆனால் பழைய மாணவர்களை சமாளிப்பது சாதாரண விஷயம் அல்ல.. இங்கு ஏகப்பட்ட பழைய ஸ்டூடன்ஸ் உள்ளனர். அவர்கள் சாதாரண பழைய ஸ்டூடன்ஸ் இல்லை. அசாத்தியமானவங்க.. எல்லோரும் ரேங்க் வாங்கிவிட்டு வகுப்பறையை விட்டு போகமாட்டேன் என உட்கார்ந்து கொண்டுள்ளனர். அவர்களை சமாளிப்பது எல்லாம் சாதாரணமாங்க, என்றும் பாராட்டி கூறினார்.
விஜய் ரசிகர்கள் அப்செட்: ரஜினியின் இந்த பேச்சு விஜய் ரசிகர்களை அப்செட்டாக்கி உள்ளது. சரியாக விஜய் அரசியலுக்கு வரும் நேரத்தில்.. திமுகவை பாராட்டியது மட்டுமின்றி.. விஜய்க்கு பொடியாக்கி பார்க்கப்படும், உதயநிதியை பாராட்டி பேசி உள்ளார். அரசியல் என்பது சாதாரணம் அல்ல.. முக்கியமாக திமுக போன்ற பலமான கட்சியை எதிர்ப்பது சாதாரணம் அல்ல என்று ரஜினி சொல்லாமல் சொல்லி உள்ளார்.
அதோடு ஸ்டாலினின் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்றும் சர்டிபிகேட் கொடுத்து.. விஜய் ரசிகர்களை அப்செட்டாகி உள்ளார். ஏற்கனவே விஜய் - ரஜினி மோதல் உள்ள நிலையில்.. ரஜினி ரசிகர்கள் இதனால் விஜய்க்கு எதிராக திமுகவிற்கு ஆதரவாக திரும்பும் சூழல் ஏற்படலாம். மீண்டும் ஒருமுறை விஜய் தந்துள்ள இந்திய வாய்ஸ்.. விஜய்க்கு எதிராக திரும்புமா என்று போக போகத்தான் பார்க்க வேண்டும்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications