Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அண்ணா சாலையில் வரும் பிரம்மாண்ட பாலம்.. எப்படி இருக்கும் தெரியுமா? இந்த போட்டோஸை பாருங்க!'

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரை வர உள்ள பிரம்மாண்ட சாலை குறித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

சென்னையில் அண்ணா சாலையில் இன்னொரு பாலம் அமைக்க வேண்டும் என்பது மக்களின் பல ஆண்டு கோரிக்கையாக இருந்து வந்தது. முக்கியமாக சைதாப்பேட்டையை தாண்டி இருக்கும் பகுதிகளில் பாலம் அமைக்க வேண்டும். சைதாப்பேட்டை - ஜெமினி பாலம் இடையே வேறு பாலமே இல்லை என்ற விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன.

 How will the new Teynampet to Saidapet road flyover for 3.5 km of distance look in Chennai?

அந்த கோரிக்கைகளை பூர்த்தி செய்யும் விதமாக சென்னையில் அண்ணா சாலையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரை புதிய பாலம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இந்த பகுதியில் முக்கியமாக நந்தனம் சிக்னல் உள்ள பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இந்த போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக இங்கே நீண்ட பாலம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. ₹621 கோடி மதிப்பில் 3.5 கி.மீ தொலைவு புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

 How will the new Teynampet to Saidapet road flyover for 3.5 km of distance look in Chennai?

இந்த பாலத்தால் பொதுமக்களுக்கு பல்வேறு பயன்கள் உள்ளன. அவை என்னென்ன என்று வரிசையாக பார்க்கலாம். சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரை பாலம் இருப்பதால் இடையில் நந்தனத்தில் நீண்ட நேரம் நிற்க வேண்டியது இல்லை. நந்தனம் சிக்னல் தொல்லை இனி இல்லை.

சென்னையில் எலக்ட்ரானிக் சிட்டி பெங்களூர் பாலம், கொல்கத்தா மா பாலம் போன்ற பாலங்கள் இல்லை என்ற குறையை இந்த நீண்ட பாலம் போக்கும். இந்த பாலத்தின் இரண்டு பக்கமும் ஹை ரைஸ் கட்டிடங்கள் வர அதிக வாய்ப்புகள் உள்ளன.

 How will the new Teynampet to Saidapet road flyover for 3.5 km of distance look in Chennai?

அடியே சாலை போக்குவரத்து இன்னும் எளிதாகும். மழை காலங்களில் மக்கள் பயணம் செய்ய வசதியாக இருக்கும். கத்திப்பாரா - இந்த புது பாலம் - ஜெமினி இடையிலான சாலையை இனி எளிதாக கடக்க முடியும்.

அண்ணாசாலை செல்ல இந்த சாலையை பயன்படுத்துபவர்கள் இனி அந்த பாலத்தில் சென்றால் 5 சிக்னல்களில் நிற்க வேண்டியது இல்லை. இந்த பாலத்தில் பயண நேரம் அதிகபட்சம் 5 நிமிடம்தான். அதுவே கீழே சாலையில் சென்றால் பயண நேரம் 15 நிமிடம் ஆகும். பீக் நேரங்களில் இதை விட கூடுதலாக இருக்கும்.

தி நகர் செல்பவர்கள் கீழே சென்று விடுவதால் பாலத்தின் மேலே போக்குவரத்து நெரிசல் இருக்காது. இதனால் மக்கள் பயணம் செய்வது இன்னும் எளிமையாகும். இந்த பாலம் எப்படி இருக்கும் என்ற வீடியோ வெளியாகி உள்ளது.

 How will the new Teynampet to Saidapet road flyover for 3.5 km of distance look in Chennai?

எந்தெந்த இடங்களில் பாலம் செல்லும், கீழே போக்குவரத்து எப்படி இருக்கும், மேலே எப்படி இருக்கும் என்று இந்த வீடியோவில் விளக்கப்பட்டு உள்ளது. சென்னையில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் புதிய சுற்றுலா பகுதிகளை உருவாக்குவது, பழைய சுற்றுலா பகுதிகளை மேம்படுத்துவது என்று பல முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக சென்னையில் பல்வேறு இடங்களில் சாலைகள் விரிவாக்கம் மற்றும் பாலங்கள் கட்டும் பணிகளும் நடந்து வருகின்றன.

முதற்கட்டமாக சென்னையில் முக்கிய சாலைகள் பல்வேறு மாற்றங்களை பெற உள்ளன. அந்த வகையில்தான் இந்த பாலமும் கட்டப்பட உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+