திமிங்கலம் போல திமிறி எழும் மறைமலைநகர்! 3 வருட இருண்ட காலத்திற்கு பின்! FORD வருகையால் புது எழுச்சி
சென்னை: சென்னை மறைமலைநகரில் உள்ள போர்ட் மீண்டும் உற்பத்தியை மேற்கொள்ள உள்ளது. சென்னையில் இருந்து இவி வாகனங்களை உற்பத்தி செய்ய உள்ளனர். அதை வெளிநாட்டு மார்க்கெட்டில் விற்க உள்ளனர்.
சென்னைக்கு போர்ட் திரும்பி வந்தாலும் இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்வது கடினம். அவர்கள் இந்திய மார்கெட்டிற்கு வர வாய்ப்பு இல்லை. மாறாக சென்னையில் உற்பத்தி செய்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வார்கள். 350 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஃபோர்டு நிறுவனத்தின் சென்னை யூனிட், ஆண்டுக்கு 200,000 வாகனங்கள் மற்றும் 340,000 இன்ஜின்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.

கிட்டத்தட்ட கடந்த 3 வருடம் இருந்த காலத்திற்கு பின் சென்னைக்கு போர்ட் திரும்பி வந்துள்ளது. தமிழ்நாடு தொழிற்துறையின் தீவிரமான முயற்சியால்.. தொடர் பேச்சுவார்த்தையால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவிற்கு மேற்கொண்ட பயணத்தில் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு உள்ளது.
டபுள் ஜாக்பாட்: போர்டு நிறுவனம் இந்தியாவில் Mustang Mach-E வாகனத்தின் டிரேட் மார்க்கை பதிவு செய்துள்ளது. இது இந்திய சந்தையில் போர்ட் மீண்டும் நுழைவதை உறுதி செய்துள்ளது. அடுத்த தலைமுறை எண்டெவர் கார்கள் இதன் மூலம் போர்ட் மூலம் தமிழ்நாட்டில் உள்ள சென்னை ஆலையில் உற்பத்தி செய்யப்படும்.
Ford நிறுவனம் முதலீடுகள்; அமெரிக்காவை சேர்ந்த Ford நிறுவனம் சென்னையில் இருந்து வெளியேறிய பின்பும் கூட சென்னையில் முதலீடுகள் சுணங்காமல் அதிகரித்துள்ளன. ஆனாலும் Ford நிறுவனம் சென்னையை விட்டு சென்றது சென்னைக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.
தொழிற்சாலை மூடல்: தமிழ்நாட்டில் போர்ட் தொழிற்சாலை மூடப்பட்ட போது அந்த தொழிற்சாலையை டாடா நிறுவனம் வாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில்தான் சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் வீட்டில், டாடா குழுமத்தின் தலைவர் . என்.சந்திரசேகரன் முதல்வரை சந்தித்து பேசினார். ஆனால் போர்ட் திரும்பி வரும் அறிகுறி அப்போதே வழங்கப்பட்டதால் டாடா தனியாக முதலீடு செய்தது. தற்போது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போல.. போர்ட் நிறுவனமும் திரும்பி உள்ளது. பெரும்பாலும் Mustang Mach-E வாகனத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திமிங்கலம் போல திமிறி எழும் மறைமலைநகர்: சென்னையில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மறைமலைநகரில் உள்ள ஹென்றி ஃபோர்டு சாலை தற்போது மீண்டும் திமிறி எழுந்துள்ளது. 2022ல் ஃபோர்டு இந்தியா ஆலை செயல்படுவதை நிறுத்தியதில் இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக அமைதியாகவே இருந்தது அந்த பகுதி.
தற்போது போர்ட் வருகை காரணமாக அங்கே புத்துணர்ச்சி ஏற்பட்டு உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மறைமலை நகர் மாறியுள்ளது.
ஒரு காலத்தில் சென்னையின் புறநகரில் குறைவாக வளர்ச்சியடைந்த பகுதி, இப்போது எட்டு வழிச் சாலைகள், ஹோட்டல்கள் மற்றும் கஃபேக்கள் ஆகியவற்றைக் கொண்டு பெரிய அளவில் மறைமலைநகர் முன்னேறி உள்ளது. முன்பு ஒரு சில தேநீர்க் கடைகள் மட்டுமே இங்கே இருந்தன. பாண்டலூன்ஸ் மற்றும் ட்ரெண்ட்ஸ் போன்ற பெரிய வணிகச் சங்கிலிகளும், கேஎஃப்சி, பர்கர் கிங் மற்றும் மெக்டொனால்ட்ஸ் போன்ற துரித உணவுச் கடைகள் இங்கே அதிக அளவில் வந்துள்ளன.
இப்படிப்பட்ட நிலையில் இங்கே போர்ட் வருவது சென்னையை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும். அதோடு சென்னை விரிவடைய முக்கிய காரணமாக அமையும்.












Click it and Unblock the Notifications