ஸ்டாலின் கையில் ரிப்போர்ட் கார்டு! உளவுத்துறை அளித்த பேப்பர்! காரை எடுத்த அமைச்சர்கள்! ஆட்டம் மாறுது
சென்னை: தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் தொடர்பான அறிவிப்புகள் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவையில் இன்று மாற்றம் செய்யவில்லை என்றாலும் இந்த வாரத்திற்கு உள்ளாக.. பெரும்பாலும் 21ம் தேதிக்கு முன் மாற்றங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்ல உள்ள நிலையில் அமைச்சரவையில் மாற்றங்கள் வரலாம் என்கிறார்கள். வெளிநாடு செல்வது, 2026 சட்டசபை தேர்தல், ஆட்சி அதிகாரத்தில் நிலவும் பிரச்சனைகள் உள்ளிட்ட பல விஷயங்களை மனதில் வைத்து இந்த அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. முக்கியமாக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்லும் பயணத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதாம்.

முன்பு போடப்பட்ட பயண திட்டம் அப்படியே மாற்றப்பட்டு உள்ளதாம். மேலும் முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்லும் நிலையில், விரைவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
வெளிநாடு பயணம்: தமிழக முதல்வர் ஸ்டாலின், இந்த மாதம் 22-ந்தேதி அமெரிக்காவிற்கு செல்லவிருப்பதாக தகவல் சொல்லப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கான வெளிநாட்டு தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக இந்த பயணத்தை அவர் மேற்கொள்வதாகச் சொல்லப்பட்டது.
பயண திட்டத்தில் மாற்றம்: அதே சமயம் உடல் நலன் குறித்த மருத்துவ பரிசோதனைக்காகவும் ஸ்டாலின் செல்கிறார் என்றும் தகவல் பரவியிருந்தன. ஆனால், அந்த பயணத்திட்டம் சற்று மாற்றப்பட்டிருப்பதாக தற்போது தகவல் வருகின்றன. அதாவது, ஆகஸ்ட் 15-ந்தேதி சுதந்திரத் தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து விட்டு அதன்பிறகு வெளிநாடு செல்லலாம் என ஆலோசிக்கப்படுகிறது.
அமைச்சரவை மாற்றம்: இந்த நிலையில்தான் தமிழ்நாடு அரசில் பின்வரும் மாற்றங்கள் நடக்க உள்ளன.
1. அமைச்சரவை மாற்றம் முழுமையாக நடக்க உள்ளது. உளவுத்துறை கொடுத்த பேப்பர் ஒன்றில் இதற்கான லிஸ்ட் உள்ளது.
2. அமைச்சர்களின் ரிப்போர்ட் கார்டு முதல்வர் ஸ்டாலின் மூலம் தயாரிக்கப்பட்டு உள்ளது. அவர்களின் செயல்பாடுகளுக்கு மார்க் போடப்பட்டு உள்ளது.
3. இளம் அமைச்சர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட உள்ளன.
4. மின்சாரத்துறை, வருவாய் துறை , போக்குவரத்துறை கண்டிப்பாக மாற்றங்களை சந்திக்கும்.
5. உதயநிதி ஸ்டாலின் உள்ளாட்சி துறை அமைச்சர் ஆகிறார்.
6. நிதி, தொழில்துறை மாற்றங்களை சந்திக்காது.
7. அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு மீண்டும் முக்கியமான பொறுப்பு வழங்கப்பட உள்ளது.
உதயநிதி ஸ்டாலின்: இது போக உதயநிதியை துணை முதல்வராக்க ஸ்டாலின் முடிவு செய்து விட்டார். நாளை இதற்கான அறிவிப்பு வரலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சரவை மாற்றம் + உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் பதவி உட்பட்ட அறிவிப்புகள் நாளை வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன. ஸ்டாலின் வெளிநாடு செல்வதை முன்னிட்டு ஆட்சி நிர்வாக பொறுப்புகள் அவருக்கு முழுமையாக வழங்கப்படலாம் என்கிறார்கள்.
அதை மனதில் வைத்தே சமீபத்தில் செயலாளர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. புதிய அமைச்சர்கள் ஆட்சியில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. இளம் அமைச்சர்கள் பெரும்பாலும் ஆட்சி அதிகாரத்தில் சேர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளன. முக்கியமாக 5-6 அமைச்சர்கள் மீது புகார் சென்றுள்ளது. அவர்கள் மாற்றப்படலாம என்று கூறப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம்












Click it and Unblock the Notifications