கை குலுக்கிய எடப்பாடி - அமித் ஷா ! டெல்லி பயணத்தால்.. அதிகம் பாதிக்கப்பட போவது விஜய்தான்.. எப்படி?
சென்னை: எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பயணத்தால் தமிழக அரசியலில் திமுக கூட்டணியை விட தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்தான் அதிகம் பாதிக்கப்பட போகிறார் என்று கருத்துக்கள் வைக்கப்படுகின்றன.
அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் உருவாகும் சூழல் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நடத்தினார். சுமார் ஒருமணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதிமுக அலுவலகத்தை பார்வையிட டெல்லி வந்ததாக கூறிய எடப்பாடி பழனிசாமி, ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேல் ஆலோசனை நடத்தினார். முதலில் அதிமுக நிர்வாகிகளை கூட்டாக சந்தித்த அமித்ஷா, பிறகு எடப்பாடி பழனிசாமி உடன் தனியாகவும் பேசியுள்ளார்.
திமுக - பாஜக கூட்டணி மீண்டும் உருவாவதற்கான சூழ்நிலைகள் தெரிய தொடங்கி உள்ளன. இன்றைய நாள் அதற்கான தொடக்கமாக, அடித்தளமாக அமைந்துள்ளது.

கூட்டணி சேரும் அதிமுக - பாஜக
பாஜக, அதிமுக இரண்டும் மாறி மாறி கூட்டணிக்கு தூதுவிட தொடங்கி உள்ளன. திமுகதான் எதிரி; வேற எந்த கட்சியுமே எதிரி இல்லை; திமுகவுக்கு எதிரான வாக்குகள் சிதறவே கூடாது என அதிரடியாக யோசிக்க முடியாத அளவிற்கு பல்டி அடித்திருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
இன்னொரு பக்கம் அண்ணா திமுக எங்களுக்கு எதிரியே இல்லை..திமுகதான் எங்கள் ஒரே எதிரி என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கூறியிருக்கிறார். இதனால் 2026 சட்டசபை தேர்தலில் மீண்டும் அண்ணா திமுக- பாஜக கூட்டணி அமையும் என்றே கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் தமிழக வெற்றிக் கழகம் தனித்து விடப்படுகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
விஜய்க்கு பிரச்சனை
எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பயணத்தால் தமிழக அரசியலில் திமுக கூட்டணியை விட தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்தான் அதிகம் பாதிக்கப்பட போகிறார் என்று கருத்துக்கள் வைக்கப்படுகின்ற தமிழக வெற்றிக் கழகம் - அதிமுக இடையே நடந்த ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது. அதிமுகவிற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் கோரிக்கைகள் ஏற்றதாக இல்லை.. அதிமுகவிற்கு தகுந்ததாக இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் கூட்டணி பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்திலேயே முறிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
அதன்படி அதிமுக வட்டாரத்தில் கூறுகையில், தமிழக வெற்றிக்கழகம் அதிமுகவிற்கு வேலைக்கு ஆகாது. தமிழக வெற்றிக் கழக கோரிக்கைகளை அதிமுக ஏற்க முடியாது. தமிழக வெற்றிக் கழகம் சில கோரிக்கைகளை வைக்கிறது.. அதெல்லாம் அதிமுகவிற்கு தகுந்ததாக இருக்காது. 117 இடங்களை தமிழக வெற்றிக் கழகம் கேட்கிறது. பாதிக்கு பாதி இடங்கள் கேட்கிறார்கள். இரண்டரை வருடங்கள் நாங்கள் ஆட்சி.. அதன்பின் இரண்டரை வருடங்கள் நீங்கள் ஆட்சி என்று அதிமுகவிடம் தமிழக வெற்றிக் கழகம் பேசி உள்ளது என்று கூறியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில்தான் தமிழக வெற்றிக் கழகம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சர்வே எடுத்ததாக கூறப்படுகிறது. விஜய் தரப்பு எடப்பாடி தரப்பிடம் பேசுகையில், எங்களுக்கு பெரிய பலம் உள்ளது. முக்கியமாக 15 சதவிகிதத்திற்கும் மேல் வாக்கு வங்கி உள்ளதாக எங்கள் சர்வே சொல்கிறது. அதனால் 117 இடங்கள் எங்களுக்கு தேவை, என்று விஜய் தரப்பி பேசி இருக்கிறதாம். இதை எடப்பாடி ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் கூட்டணி சேரவில்லை.
தனித்து விடப்படும் விஜய்
இதனால் விஜய் தனித்து விடப்படும் நிலை ஏற்படலாம். அதிமுக - பாஜக கூட்டணி சேர்ந்தால் அந்த வாக்குகள் அப்படியே அவர்களுக்கு போகும். பாமக, தேமுதிகவும் இவர்கள் பக்கமே போக வாய்ப்புகள் உள்ளன. திமுக கூட்டணி வாக்குகள் ஒரு பக்கம் அப்படியே இருக்கும். சீமான் தனது பங்கிற்கு 8% வாக்குகளை எடுத்துக்கொள்வார். இளைஞர்கள் சிலரின் வாக்குகளை தவிர விஜய்க்கு பெரிய அளவில் வாக்குகள் போகாத நிலை ஏற்படலாம்.
அதிமுக - பாஜக கூட்டணி உருவானால் அவர்களின் கூட்டணி பலமாகும். இது அதிக வாக்குகளை எடுக்க விரும்பும் விஜய்க்கு பெரிய சிக்கலாக மாறும் வாய்ப்புகள் உள்ளன.












Click it and Unblock the Notifications