ஜெயலலிதா இருந்திருந்தா இப்படி ஆகியிருக்குமா? இருக்கிற பிரச்சனைக்கு இடையே எடப்பாடிக்கு புது பிரச்சனை.. போச்சு
சென்னை: விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தலில் திமுக வெற்றி உறுதியாகி உள்ளது. விக்கிரவாண்டிக்கு இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடந்தது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48% வாக்குகள் பதிவு ஆனது. அதிமுக இடைத்தேர்தலை புறக்கணித்திருந்த நிலையில், திமுக, பாமக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அப்படி இருக்க 82.48% வாக்குகள் பதிவு ஆனது
இதில் 10128 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். பாமக வேட்பாளர் அன்புமணி 43,604 வாக்குகளை பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 7605 வாக்குகள் பெற்றுள்ளார். அங்கே அதிமுக போட்டியிடாதது திமுகவின் வெற்றிக்கு எளிமையான வாய்ப்பை கொடுத்துவிட்டது. பெரிய போட்டியே இல்லாமல் அங்கே திமுக வென்றுள்ளது.

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக முன்பு அறிவித்தது. இதை பற்றி எடப்பாடி வெளியிட்ட அறிக்கையில், பொதுவாக தேர்தல் என்ற உடனேயே, முதலாவதாகக் களத்தில் இறங்குவது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான். தேர்தலைக் கண்டு அஞ்சுகின்ற, பயப்படுகின்ற, அச்சப்படுகின்ற இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அல்ல என்பதை அனைவரும் நன்கு அறிவர்.
தமிழகத்தில் அலங்கோல ஆட்சியை நடத்தி வரும் திமுக-வினர், ஆளும் கட்சி என்ற அதிகாரத் தோரணையோடு அரசு எந்திரங்களை முழுமையாகப் பயன்படுத்தி, நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில் பல்வேறு அராஜகங்களையும், தில்லுமுல்லுகளையும் செய்து பெற்றுள்ள வெற்றி என்பது, மக்களின் ஏகோபித்த எண்ணங்களை முழுமையாக பிரதிபலிக்கும் முடிவு அல்ல என்பதை நான் ஏற்கெனவே தெரிவித்திருந்தேன்.
"அராஜகம் என்றால் திமுக... திமுக என்றால் அராஜகம்". திமுக-வினர் வன்முறை மற்றும் அராஜகங்களை நிகழ்த்துவதில் கைதேர்ந்தவர்கள். அவ்வாறாக, கடந்த காலங்களில் பல்வேறு அராஜகங்களை நிகழ்த்தியதன் காரணமாக, 18.8.2009 அன்று நடைபெற்ற இளையான்குடி, கம்பம், தொண்டாமுத்தூர், பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலையும்; 27.2.2009 அன்று நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தல் உட்பட திமுக ஆட்சியில் நடைபெற்ற இடைத் தேர்தல்களையும் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் புறக்கணித்தார்கள். திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகின்றதோ அப்போதெல்லாம் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்கதையாக நடைபெறுவதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள், என்று கூறினார்.
எடப்பாடி முடிவு: ஆனால் அவரின் இந்த முடிவே எடப்பாடிக்கு சிக்கலை ஏற்படுத்தி கொடுத்துவிட்டது. ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்க வேண்டும் என்பதில் அதிமுகவின் டாப் தலைவர்கள் உறுதியாக இருக்கிறார்களாம். அதன்படி எடப்பாடி பழனிசாமியை ஏற்கனவே இவர்கள் சந்தித்து அதிமுகவை ஒருங்கிணைப்பது குறித்து பேசினார்கள். ஆனால் எடப்பாடி அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்த காலத்தில் இருந்து வரிசையாக அக்கட்சி தோல்விகளை தழுவி வருகிறது. வரிசையாக 10 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்து உள்ளது.
அதன்படி 2017 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், அதே ஆண்டு 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2021 ஆம் ஆண்டு நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், 2020ல் நடந்த கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல் என மொத்தம் 9 தோல்விகளை எடப்பாடி தலைமையிலான அதிமுக சந்தித்தது. இன்றோடு 10வது தேர்தலில் தோல்வி அடைந்து உள்ளது.
விரும்பவில்லை: இந்த நிலையில்தான் அதிமுகவில் சிலர் எடப்பாடியின் செயலை, அவர் எடுக்கும் முடிவுகளை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
எடப்பாடிதான்.. தன்னை அதிமுகவின் முகமாக முன்னிறுத்துகிறார். தனக்கு போட்டியாக இருந்தவர்களை வெளியே அனுப்பியது அவர்தான். அப்படி இருக்க.. இப்போது தான் மட்டும் தனியாக பிரச்சாரம் செய்தேன்.. அதிமுக சார்பில் நான் மட்டுமே பிரசாரம் செய்தேன். தேமுதிக சார்பில் பிரேமலதா பிரசாரம் செய்தார் என்று சொல்வது ஏன்? ஜெயலலிதா இப்படி தனியாகவே பிரச்சாரம் செய்வார். அவர் அதிமுகவை வெற்றிபெற வைக்கவில்லையா? ஓ பி எஸ் போன்று கட்சியின் அடுத்த கட்ட தலைவர்களை வெளியே அனுப்பிய பின் எப்படி வெற்றி கிடைக்கும் என்று கட்சிக்கு உள்ளேயே நிர்வாகிகள் பேச தொடங்கி உள்ளனராம்.
அதிமுக தோல்விக்கு என்ன காரணம்: 2024 லோக்சபா தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்து உள்ளது. அதிமுகவின் தோல்விக்கு பின் வரும் காரணங்கள் உள்ளன. அதிமுக கட்சி பல விதமாக பிரிந்தது. ஓபிஎஸ் தரப்பு, டிடிவி தரப்பு தென் மண்டலங்களில் , டெல்டாவில் வாக்குகளை பிரிக்கின்றனர். இவர்களை இணைக்க வேண்டும். அதிமுகவில் வேட்பாளர் தேர்வு சொதப்பல். பல தொகுதிகளில் உள்ளூர் ஆட்களுக்கே தெரியாதவர்கள் வேட்பாளர்கள் ஆனார்கள். சில இடங்களில் வெளியூர் ஆட்கள் வேட்பாளர்கள் ஆனார்கள். கல்லை கூட ஜெயிக்க வைக்க எடப்பாடி ஒன்றும் ஜெயலலிதா இல்லையே, என்றெல்லாம் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றவாம்.
கோரிக்கை: இப்படிப்பட்ட நிலையில்தான் எடப்பாடி பழனிசாமியின் நெடுஞ்சாலை வீட்டில் அவரை 6 சீனியர் அதிமுக தலைகள் சந்தித்து உள்ளனர். ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்க வேண்டும் என்பதில் அதிமுகவின் டாப் தலைவர்கள் உறுதியாக இருக்கிறார்களாம். அதன்படி எடப்பாடி பழனிசாமியை ஏற்கனவே இவர்கள் சந்தித்து அதிமுகவை ஒருங்கிணைப்பது குறித்து பேசினார்கள். ஆனால் எடப்பாடி அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
பிரஷர் மேல் பிரஷர்: எடப்பாடி உடனே இருக்கும் நிர்வாகிகளே அவரை எதிர்க்க தொடங்கி உள்ளனர். அவரின் லெப்ட் ஹேண்ட், ரைட் ஹேண்ட் கூட அவரை எதிர்க்க தொடங்கி உள்ளனர். ஒருங்கிணைந்த அதிமுக வேண்டும் என்று டாப் லீடர்களே அவரிடம் சொல்ல தொடங்கிவிட்டனர்.
இப்போது இந்த தேர்தலில் அவர் எடுத்த முடிவும் திமுகவின் வெற்றிக்கு வித்திட்டு இருப்பது அவருக்கு கூடுதல் பிரஷரை கொடுத்துள்ளது.
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications