ஷேர் மார்க்கெட் கதற போகுது.. ஈரான் -இஸ்ரேல் போர்! பங்குச்சந்தை திறந்ததும் என்ன நடக்கும்? உஷார்
சென்னை: ஈரான் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதல்.. உலகின் மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. உலக அரசியலை மாற்றிய சம்பவங்கள் என்று சில உள்ளன. பெர்லின் சுவர் இடிப்பு.. 9/11 தாக்குதல்.. வியட்நாம் போர்.. சதாம் உசேன் மரணம் .. அரபு புரட்சி என்று உலகை.. உலக அரசியலையே மாற்றிய பல சம்பவங்கள் உள்ளன. நேற்று நடந்த ஈரான் தாக்குதல் அப்படி ஒன்றுதான்.
இஸ்ரேலில் பெரிய பலி எண்ணிக்கை இல்லை.. என்றெல்லாம் இதை குறைத்து மதிப்பிட முடியாது. ஈரானின் இந்த செயலுக்கான பின்விளைவுகள்.. எதிர்காலத்தில் பலருக்கும் தெரிய வரும். ஆங்கிலத்தில் சொல்லப்படும் ripple effect என்ற வார்த்தைக்கு விளக்கமாக இனி அலை அலையாக பதில் சம்பவங்கள் நடக்க போகின்றன. அதாவது.. இஸ்ரேல் இதற்கு பதில் தாக்குதல் நடத்தும். அதற்கு மீண்டும் ஈரான் பதில் தாக்குதல் நடத்தும்.

இதெல்லாம் அப்படியே விரிந்து விரிந்து உலகப்போரை உருவாக்கும். அமைதியான குளத்தில் விழுந்த சிறு கல் போல இது பல பதில் விளைவுகளை ஏற்படுத்த போகிறது. முக்கியமாக இந்த மோதல் மார்க்கெட்டை காலி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1. முதலில் இன்று மார்க்கெட் இல்லை. இன்று காந்தி ஜெயந்தி என்பதால் மார்க்கெட் திறக்காது. இதனால் இன்று நேரடி பாதிப்பு இருக்காது.
2. ஆனால் உலக நாடுகளில் மார்க்கெட் திறக்கும். அமெரிக்காவில் மார்க்கெட் திறக்கும். மற்ற உலக நாடுகளில் மார்க்கெட் திறக்கும்.
3. இதன் விளைவுகள் நாளை இந்தியாவில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
4. நேற்று 84,266.29 புள்ளிகளுடன் பிஎஸ்இ சென்செக்ஸ் மார்க்கெட் முடிவடைந்தது.
5. அதேபோல் 25,796 புள்ளிகளுடன் நிஃப்டி மார்க்கெட் முடிவடைந்தது. நாளை இது இரண்டும் மோசமாக சரியலாம்.
6. உலக அளவில் மார்க்கெட் சரியும். பல நாடுகளில் மார்க்கெட் ரத்த களரியாக மாறும். இதனால் மார்க்கெட் அப்படியே போரில் கலந்து கொள்ளாதநாடுகளிலும் மோசமான விளைவுகளை சந்திக்கும். வேலை வாய்ப்பு மோசமான நிலையை அடையும். ஏனென்றால் மார்க்கெட் மோசமாக சரிந்தால்.. 50 சதவிகிதத்திற்கும் கீழ் சென்றால் கண்டிப்பாக அது மந்தநிலையை உருவாக்கும். அப்படி நடந்தால் கண்டிப்பாக வேலைவாய்ப்பு சரியும்.
தாக்குதல்: ஈரான் - இஸ்ரேல் இடையே போர் முற்றி உள்ளது. இந்த போரின் ஒரு பகுதியாக நேற்று இஸ்ரேல் மீது ஈரான் கடுமையான ஏவுகணை தாக்குதல்கள் நடத்தியது. கிட்டத்தட்ட 200க்கும் அதிகமான பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேல் கடந்த சில வாரங்களாகவே ஈரான் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா மீது பல்வேறு தாக்குதல்களை நடத்தியது. கடந்த ஒரு மாதமாக ஹிஸ்புல்லா இயக்கத்தை கதி கலங்க வைத்து வருகிறது இஸ்ரேல். சமீபத்தில்தான் துப்பாக்கி படத்தில் ஒரே நேரத்தில் 12 தீவிரவாதிகளை விஜய் மற்றும் கேங்க் சுடும் காட்சி பலருக்கும் நினைவு இருக்கும். அந்த காட்சி போலவே.. ஒரே நேரத்தில்.. சொல்லி வைத்தார் போல ஹிஸ்புல்லா இயக்கத்தினர் வாக்கி டாக்கி மற்றும் பேஜர் தாக்குதலுக்கு உள்ளாகினர். இதில் 20க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அதை தொடர்ந்து ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இருக்கும் பெய்ரூட்டில் இஸ்ரேல் தொடர் ஏவுகணை தாக்குதல்களை, வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில்.. லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கடந்த வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்டார். அவரது பதுங்கு குழியை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹசன் நஸ்ரல்லா கொலை செய்யப்பட்டார். . இது போக லெபனான் உள்ளே புகுந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கெல்லாம் பதிலடியாகவே தற்போது இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால்.. ஈரானை இஸ்ரேல் கலங்கடித்து உள்ளது.
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications