ஜான்பாண்டியன் வந்துட்டாரு.. "ஸ்பாட்டிலேயே" கிளப்பிய "கவுரவம்" மேட்டர்.. கோட்டை வரைக்கும் போயாச்சாமே
சென்னை: ஜான்பாண்டியன் மிக மிக முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.. இது தமிழக அரசியல் களத்தின் பார்வையை திரும்ப வைத்து வருகிறது.
தமிழக அரசுக்கு எதிரான விமர்சனங்களை காட்டமாக முன்வைக்கக் கூடியவர், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன்.. வேங்கைவயல் விவகாரம் முதல் கள்ளச்சாராய விவகாரம்வரை ஒன்றுவிடாமல் புட்டு புட்டு வைத்து விமர்சித்து வருபவர்.
ஒருமுறை செய்தியாளர்கள் சந்திப்பில் ஜான்பாண்டியன் சொல்கிறார், "இந்த வேங்கைவயல் விவகாரத்தில் யார் அந்த காரியத்தை செய்தது என்பது அரசுக்கு நன்றாக தெரியும்.. ஆனால், அவர்களை கைது செய்வதை விட்டுவிட்டு, அந்த கிராம மக்களே அந்த காரியத்தை செய்தார்கள் என்று சொல்லி, விஷயத்தை மூடி மறைக்கிறார்கள்..
என்ன கேவலம் இது: இறந்துபோன குடும்பத்துக்கு 10 லட்சம் தருகிறார்கள் என்றால், இது எவ்வளவு கேவலமான நிலை? ஒரு குடிகாரனுக்கு 10 லட்சம் என்று சொன்னால், விபத்தில் இறந்தவருக்கு இந்த அரசு என்ன செய்கிறது? அரசு அதிகாரிகள், வேலையில் இருக்கும்போது இறந்துவிட்டால், அவர்களுக்கு எத்தனை லட்ச ரூபாய்கள் தருகிறார்கள்? மதுவிலக்குக்காக வீதிகளில் இறங்கி போராடக்கூடிய நிலை எப்போது ஏற்படுகிறதோ, அப்போதுதான் இதை அரசு கவனத்தில் கொள்ளும்..
சாராய ஆலைகளை வைத்துக் கொண்டு, நிறைய கோடி ரூபாய் கொள்ளையடித்து சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக, மக்களை பணயம் வைக்கிறார்கள்.. சாராய ஆலைகளை நிரந்தரமாக மூடினாலே, முக்கால்வாசி பிரச்சனை இங்கே தீர்ந்துவிடும்.. இப்படித்தான், மதுவிலக்கை படிப்படியாக கொண்டு போக முடியும். அதேபோல, கள்ளச்சாராயத்தை விற்பதற்கு காரணமாக, சில அதிகாரிகளும் இருக்கிறார்கள். திமுகவுக்கு நெருக்கமானவர்களே அந்த ஆலைகளை வைத்திருக்கிறார்கள்..
வலுவான கூட்டணியில் உள்ளவர்கள், யாராவது இந்த கள்ளச்சாராயம் பற்றி பேசறாங்களா? வேங்கை வயல் விஷயத்தை பேசறாங்களா? பேட்டி மூலம் ஒருத்தரும் வாய் திறக்கறதே இல்லை.. தவறு செய்தால் கண்டிக்கணும்தானே? இதுக்கு பேர்தான் கூட்டணியா? சொல்ல மாட்டாங்க.. எதிர்த்து பேசிவிட்டால் சீட் தர மாட்டாங்களே என்ற பயம்தான்.. எல்லாவற்றிற்கும் அரசே தயங்கினால், நாம் யார்கிட்டதான் போய் புகார் தர்றது?" என்று வேதனையுடன் கேள்விகளை எழுப்பியிருந்தார் ஜான்பாண்டியன்.

பட்டியலினத்தவர்: இந்நிலையில், மிக முக்கிய பிரச்சனை ஒன்றை, ஜான்பாண்டியன் எழுப்பியிருக்கிறார்.. தேவேந்திரகுல வேளாளர் மக்களை பட்டியலினத்திலிருந்து நீக்கி வேளாண் மரபினராக அறிவிக்க வேண்டும் என்றும், தங்களுக்கு சலுகைகள் வேண்டாம், கெளரவம்தான் வேண்டும் என்றும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் அதிரடியாக அறிவித்திருக்கிறார்.
காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த ஜான்பாண்டியன், "தேவேந்திரகுல வேளாளர் இனத்தை பட்டியலினத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பது எங்கள் நீண்ட கால கோரிக்கை. எங்களுக்கு சலுகைகள் வேண்டாம். கெளரவம்தான் வேண்டும்.
அமித்ஷா: தமிழரை பிரதமராக்க அமித் ஷா ஆசைப்படுவதை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் வரவேற்கிறது... ஆனால், அது முடியுமா? முடியாதா என்பதெல்லாம் தேர்தல் காலத்தில் எடுக்கப்படும் நிலைப்பாடு ஆகும்... தமிழ்நாட்டில் காங்கிரஸ் இல்லை... அது திமுகவுடன் கைகோர்த்து கொண்டுள்ளது.. அந்த கட்சியில் தொண்டர்களும் இல்லை. வெறும் தலைவர்கள்தான் இருக்கிறார்கள்.. அதே நிலைப்பாட்டில்தான் பாஜகவும் உள்ளது.. ஆனாலும், அவர்கள் இன்று வளர்ந்துள்ளனர்.
திமுக அரசில் நிறைய குறைகளும், நிறைகளும் இருக்கின்றன.. மதுவை ஒழிப்போம் என்றார்களே... ஆனால் செய்யவில்லை... பாலியல் சம்பவங்கள், கொலை, கள்ளச்சாராயம் பெருகிவிட்டது... கள்ளச்சாராய விவகாரத்தில் கீழ்மட்ட அதிகாரிகளை மாற்றியுள்ளனர். ஆனால் மேல்மட்ட அதிகாரிகள் மீது இதுவரை நடவடிக்கை இல்லையே ஏன்?
ஜான்பாண்டியன்: வேங்கைவயல் சம்பவம் மூடி மறைக்கப்பட்டுள்ளது.. உண்மையான குற்றவாளி தெரிந்தும் மறைப்பது மிகவும் தவறு... அனைத்து சமுதாயத்தினரும் பங்கேற்கும் நீதி விசாரணை கமிஷனை அமைக்க வேண்டும்... அதற்கு காவல்துறையை தன்னுடைய கையில் வைத்துள்ள ஸ்டாலின் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்ற கோரிக்கைகளை ஜான்பாண்டியன் முன்வைத்துள்ளார்.. இவைகள் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளிடம் கவனத்தை பெற்றுவருகின்றன.
-
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications