Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஆப்பு".. வாயிலேயே பாஜக சுட்ட வடையை.. திருப்பிபோட்ட கராத்தே.. அதெல்லாம் அந்த காலம்.. தென்சென்னை பரபர

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பாஜகவின் பிரச்சாரங்கள், மும்முரமாகி கொண்டிருக்கின்றன.. ஆனால், பிரச்சாரங்களுக்குள்ளேயே நடக்கும் சில நிகழ்வுகள், அதற்கு மேல் அனலை கிளப்பிவிட்டு வருகிறது. என்னவாம்?

இந்த முறை தமிழ்நாட்டில் குறைந்தது 5 சீட்டுக்களையாவது பெற்றுவிடுவது என்றும், வாக்கு வங்கியை குறிப்பிட்ட சதவீதம் உயர்த்திவிட வேண்டும் என்ற முனைப்புடனும், பாஜக களமிறங்கி உள்ளது. இதற்கான வியூகத்தை கடந்த 2 வருடமாகவே தமிழக பாஜக மேற்கொண்டும் வருகிறது.

Huge incident in South Chennai Constitution and what did BJP Karate thiagarajan reply to Tamilisai Soundararajan

அந்தவகையில், தமிழகத்தில் பாஜகவுக்கு செல்வாக்கான 10 இடங்கள் கண்டறியப்பட்டு, அந்த 10 தொகுதிகளிலுமே, ஒருவருடமாக களப்பணியில் ஈடுபட்டு வந்தது பாஜக.. அதில் ஒன்றுதான் தென்சென்னை.

பாஜக: இந்த தென்சென்னையில், மிகுந்த நம்பிக்கையை வைத்திருக்கிறது பாஜக.. கிட்டத்தட்ட "மினி" கோவை தெற்கு தொகுதி போலவே, தென்சென்னையும் பாஜக கருதுகிறது.. இந்த முறை தேர்தலில், அதிமுக அல்லாமல் தனித்து களமிறங்குவதால், பாஜகவுக்கு வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியும் கூடியுள்ளது.

ஆனால், ஒவ்வொரு தேர்தலிலும், பிராமண சமூகத்தின் ஓட்டுக்கள் பாஜகவுக்கு இந்த தென்சென்னையில் கைகொடுத்து வருகிறது.. கடந்த முறை தேர்தலை எடுத்துக் கொண்டால், மூத்த தலைவர் இல.கணேசன் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை இங்கு பெற்றிருந்தார்..

தென்சென்னை: அதேபோல, கடந்த 2014 எம்பி தேர்தலில், 2ம் இடம் வந்த திமுகவுக்கும், 3ம் இடம் வந்த பாஜகவுக்கும், மொத்த வாக்கு வித்தியாசமே வெறும் 40 ஆயிரம் ஓட்டுக்கள். அதனால்தான் கடந்த 2019 தேர்தலில், தமிழிசை சவுந்தராஜனே, தென்சென்னையில் போட்டியிட மிகவும் ஆர்வமாக இருந்தராம்.. அந்த ஆசை இப்போது நிறைவேறியிருக்கிறது.

தென்சென்னையில் பிரதமர் மோடி போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் ஒரு பேச்சு சில மாதங்களுக்கு முன்பு எழுந்தது.. ஆனால், தென்சென்னையில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் வேட்பாளராக அறிவிக்கப்படுவதால், அவரை எதிர்த்து பெண் வேட்பாளரையே பாஜக நிறுத்தும் என்றார்கள். அதன்படியே தமிழிசை சவுந்தரராஜனே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பிரச்சாரமும் தொகுதியில் சூடுபிடித்துள்ளது.

பாஜக கூட்டம்: இதுசம்பந்தமாகத்தான் நமக்கு ஒரு பிரத்யேகமான தகவல் கிடைத்திருக்கிறது.. அதாவது, பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுடன் செயல்வீரர்கள் கூட்டம் சமீபத்தில் திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்சன் செண்டரில் நடந்துள்ளது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய தமிழிசை சவுந்தராஜன், "தென்சென்னையில் நான் நிற்பதாக நினைக்காதீர்கள். பிரதமர் மோடி நிற்பதாக கருத வேண்டும். தென்சென்னையின் வெற்றி மோடியின் வெற்றி. அதற்காக, உழைக்க வேண்டும். டீ, காபி கூட கட்சியிடம் காசு கேட்காமல் உழைக்கிற அர்ப்பணிப்புடன் தேர்தல் பணி செய்கிற தொண்டர்கள் நீங்கள்" என்று தொண்டர்களுக்கு புகழாரம் சூட்டிக் கொண்டே போனார் தமிழிசை.

அதிருப்தி: இதைக்கேட்டதுமே கூட்டத்தில் இருந்த நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டார்கள். உதட்டை பிதுக்கி கொண்டார்கள்.. தலையை வலது + இடது பக்கமாக ஆட்டிக்கொண்டார்கள்.. அதாவது, "தமிழிசையின் பேச்சை நாங்கள் ரசிக்கவில்லை, இது தேறாது" என்கிற சமிக்ஞைகள்தான் அது.

இதன்பிறகு பாஜகவின் முக்கிய பிரமுகரான கராத்தே தியாகராஜன் பேச்சை துவங்கினார்.. "டீ, காபி குடிக்கக்கூட காசு வாங்காமல் எலெக்ஷன் வேலையை தொண்டர்கள் பார்ப்பார்கள் என்று அக்கா சொன்னாங்க... அதெல்லாம் ஒரு காலம்.. அந்த காலமெல்லாம் மலை ஏறிடுச்சி அக்கா..

பூஸ்ட் வேணும்: பூஸ்ட் (பணம்) இல்லைன்னா இப்ப எதுவுமே இங்கே நடக்காது... கை காசை செலவு செஞ்சு வேலை பாக்குற தொண்டர்கள் எந்த கட்சியிலேயும் இப்போ கிடையாது.. அதனால், பூஸ்ட் இருந்தாதான் வேலை பார்ப்பாங்கன்னு அக்கா தெரிஞ்சுக்கணும்...

தேர்தல்ல வெற்றிக்கனியை பறிக்கனும்னா மேலிடத்தில் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி, தேர்தலுக்கு தேவையான வெப்பன்ஸ் (பணம்) வாங்கிக்கொடுக்கணும். அதை அக்கா கண்டிப்பாக செய்வாங்கன்னு நினைக்கிறேன்" என்று சொல்லவும் ஒட்டுமொத்த கூட்டமும் கைத்தட்டி ஆர்ப்பரித்தது.

முணுமுணுப்பு: கூட்டம் முடிந்து நிர்வாகிகள் அனைவரும் வெளியேறும்போது, "வாயாலேயே வடையை சுட்டுட்டு போய்டலாம்னு அக்கா நெனைக்குதே.. ஆனா, சரியான ஆப்பை வெச்சிட்டாரு தியாகு" என்று முணுமுணுத்துக் கொண்டே சென்றார்களாம்.. இது எப்படி இருக்கு??

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+