ஸ்டாலின் பேசும்போதே.. வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு தரப்பட்ட வசதி.. வாவ்.. அசத்துறாரே டிஆர்பி
சென்னை: சென்னையில் நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் பேசும் போது வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு கொடுக்கப்பட்ட வசதிகள் கவனம் பெற்றன.
சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு முதலீடுகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. இது 2 நாட்கள் நடக்கும் மாநாடு ஆகும்.

இந்த நிகழ்வில் பேசிய முதல்வர் ஸ்டாலின், பொதுவாக வெளிநாடுகளுக்கு செல்லும்போதுதான் நான் சூட் போடுவது வழக்கம். ஆனால் இங்கு எல்லா வெளிநாடுகளும் தமிழ்நாட்டிற்குள் வந்துவிட்ட காரணத்தால், இங்கே நான் கோட் சூட் அணிந்து வந்திருப்பது பொருத்தமாக உள்ளது. இன்று காலையிலிருந்து சென்னையில் மழை பெய்து கொண்டிருக்கிறது. நான் இங்கு வந்தவுடன், முதலீடும் மழையாக பெய்யும் என்ற நம்பிக்கை எனக்கு வந்துள்ளது.
உலகம் முழுவதும் இருந்து வந்திருக்கும் எனது அருமை சகோதர,
சகோதரிகளே! நீங்கள் அனைவரும் சமத்துவத்தைப் போற்றிய வள்ளுவரும்,
கணியன் பூங்குன்றனாரும் பிறந்த மண்ணுக்கு வந்திருக்கிறீர்கள். பல
வரலாற்றுப் பெருமைகளையும், புகழையும் கொண்ட தமிழ்நாட்டுக்கு வருகை தந்திருக்கிறீர்கள். உங்கள் அனைவரையும் நான் வரவேற்கிறேன். இந்த மாநிலத்தின் முதலமைச்சராக மட்டுமின்றி, உங்கள் சகோதரனாக வருக, வருக, வருக என நான் வரவேற்கிறேன்.
தொழில் துறையில் மேன்மையும், தனித்த தொழில்வளமும் கொண்ட
மாநிலம்தான், தமிழ்நாடு! பண்டைய காலத்தில் இருந்து கடல் கடந்தும்
வாணிபம் செய்தவர்கள்! அதனால்தான், "திரைகடல் ஓடியும் திரவியம் தேடு"
என்று தொழிலை ஊக்குவிக்கும் பழமொழி உருவானது! இந்தியாவுக்கு பல்வேறு
வகைகளில் தமிழ்நாடு, முன்மாதிரி மாநிலம்! 1920-ஆம் ஆண்டு 'தென்னிந்திய
வேலையளிப்போர் கூட்டமைப்பு' எனப்படும் தொழிலதிபர்கள் அமைப்பு
தொடங்கப்பட்டது.
இதனால்தான், தமிழ்நாடு அனைத்து வகைத் தொழில்களிலும், முன்னேறிய மாநிலமாக இன்றைக்கு இருக்கிறது. கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கின்ற மாநிலமாக இருப்பதால், இதற்கான திறமையான தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் ஏராளமாக கிடைத்தார்கள். சிறந்த தொழில் அதிபர்களும், திறமையான தொழிலாளர்களும் நிறைந்த தமிழ்நாட்டுக்கு, உலகத் தொழில் முனைவோரான நீங்கள் வந்திருக்கிறீர்கள். நாங்கள் விடுத்த அழைப்பை ஏற்று வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்பதுடன் எனது உளமார்ந்த நன்றியையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்ன சொன்னார் ? இந்த மாநாட்டிற்கு தலைமையேற்க வந்திருக்கும் மாண்புமிகு ஒன்றிய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. பியுஷ் கோயல் அவர்களை நான் நெஞ்சார வரவேற்கிறேன். மாண்புமிகு திரு. பியுஷ் கோயல் அவர்களது குடும்பம் அரசியல் குடும்பம். அப்பா, அம்மா இரண்டு பேருமே அரசியலில் கோலோச்சியவர்கள். வங்கித் துறை பணியாளராக வாழ்க்கையை தொடங்கி நிதி மற்றும் வர்த்தக துறையில் தனித்துவம் படைத்தவர் மாண்புமிகு திரு. பியுஷ் கோயல் அவர்கள். அவர் இங்கு வந்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கிறார். அவருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் திரு. டி.ஆர்.பி. ராஜா அவர்களையும் தொழில் துறை செயலாளர் திரு. அருண்ராய் அவர்களையும் - அனைத்துத் துறைகளைச் சார்ந்த அதிகாரிகளையும் அரசு உயர் அலுவலர்களையும் என அனைவரையும் பாராட்டுகிறேன்! வாழ்த்துகிறேன்!
உலக நாடுகளை உள்ளடக்கிய இந்த நிகழ்வில், அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஜப்பான், தென்கொரியா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி மற்றும் டென்மார்க் ஆகிய 9 நாடுகள் எங்களுடன் பங்குதாரர் நாடுகளாக இணைந்துள்ளன. மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் தைவான் பொருளாதார மற்றும் கலாச்சார நிறுவனங்களும் எங்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளார்கள். உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன், என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
வசதி: சென்னையில் நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் பேசும் போது வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு கொடுக்கப்பட்ட வசதிகள் கவனம் பெற்றன. அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழில் உரையாற்றியதை உடனுக்குடன் மொழிமாற்றத்துடன் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கேட்டனர்.
இதற்காக சிறப்பு ஹெட்செட் கொடுக்கப்பட்டு இருந்தது. அதன் உதவியுடன் உடனுக்குடன் முதல்வரின் பேச்சு மொழி மாற்றி ஒளிபரப்பப்பட்டது.
-
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்! -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது?












Click it and Unblock the Notifications