சிக்குகிறது "கறுப்பு ஆடு".. இது எப்படி அங்கே போகுது.. உளவுத்துறைக்கு பறந்த மேலிடத்தின் ஆர்டர்..!!
உளவுத்துறைக்கு முக்கிய உத்தரவினை முதல்வர் தரப்பு பிறப்பித்துள்ளாராம்
சென்னை: உளவுத்துறைக்கு முக்கிய உத்தரவு ஒன்றை, முதல்வர் தரப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.. இதையடுத்து, கோட்டையில் பரபரப்பு சூழ்ந்துள்ளது.
"எப்போதுமே தனித்து போட்டியிட்டால்தான், ஒவ்வொரு கட்சியின் முழுமையான பலம் தெரியும்... அப்போதுதான், அடுத்தடுத்த தேர்தல்களில் நம்மை பலப்படுத்தி கொள்ள, தேர்தல் வியூகங்களை அமைத்து கொள்ள முடியும்" என்று டெல்லி தலைவர்கள் தமிழக பாஜகவுக்கு தொடர்ந்து அறிவுறுத்தல்களை தந்து வருகிறார்கள்..
அதுமட்டுமல்ல, "பாஜவுக்கு திமுகதான் நம்பர் ஒன் எதிரி.. அதனால் தமிழக அரசை எதிர்த்து தொடர் போராட்டங்கள் நடத்த வேண்டும்.. இதற்கு பாஜக தலைமை முழு ஆதரவு தரும்.. என்ன செய்வீங்களோ தெரியாது, வரப்போகும் எம்பி தேர்தலில் தமிழகத்தில் குறைந்தது 5 தொகுதிகளிலாவது பாஜக வெற்றி பெற வேண்டும் என்று அமித்ஷா உட்பட முக்கிய தலைவர்களும் அட்வைஸ் செய்து கொண்டே உள்ளதாக செய்திகள் கசிந்தன.

10 தாமரைகள்
அதனாலேயே திமுகவுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு, தமிழக பாஜகவும் தன்னை சமீபகாலமாகவே தயார்படுத்தி வருகிறது.. அதற்கேற்றபடி, தாங்கள்தான் எதிர்க்கட்சி என்ற மாயையை, கட்டவிழ்த்து விட்டு வருவதில் பாஜக ஓரளவு வெற்றியை பெற்றுள்ளதாகவும் சொல்கிறார்கள்.. மாற்று கட்சியில் உள்ள அதிருப்தியாளர்களுக்கு வலையை வீசியதில், சில முக்கிய புள்ளிகளும் சிக்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. இதனிடையே, குறைந்தபட்சம் 10 இடங்களிலாவது எம்பி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று அமித்ஷா கண்டிப்புடன் சொன்னதாக தகவல்கள் வந்த நிலையில், அதற்கான முனைப்பும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கோட்டை
இந்த முறை எம்பி தேர்தலில் ஓரளவு தாமரைகளை பெற வேண்டுமானால், திமுக அரசு மீதான நம்பகத்தன்மையை சிதைக்க வேண்டும் என்பதைதான் முக்கிய அஸ்திரமாக பாஜக, செயல்படுத்தி வருகிறதாம்.. அதேசமயம், திமுக அரசு குறித்த பல்வேறு முக்கிய தகவல்களும் அண்ணாமலைக்கு எப்படி போகின்றன என்ற குழப்பமும் நீடித்தபடியே வருகிறது.. திமுக அமைச்சர்கள் மீது அண்ணாமலை தந்த புகார்கள் முதல், தீபாவளி பண்டிகையையொட்டி, டாஸ்மாக்கில் கிடைத்த விற்பனை தொகை வரை, எதிர்க்கட்சி கூடாரத்துக்கு எப்படி கிடைக்கிறது? என்பதுதான் கோட்டையின் கொந்தளிப்பை அதிகப்படுத்தி வருகிறதாம்..

தப்பு மெசேஜ்
தீபாவளிக்கு முந்தைய 2 தினங்கள் சேர்த்து 725 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆனதாக பரப்பிவிடப்பட்டது, தவறான தகவலே என்றாலும்கூட, இதை கசிய விட்டது யார்? என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு டோஸ் விழுந்ததாம்.. அரசு தரப்பில் இருந்து, சில முக்கிய தகவல்கள் குறித்து, அண்ணாமலை தரப்புக்கு லிஸ்ட் எப்படி போகிறது? யார் அந்த கருப்புஆடு? என்பதை கண்டறியும்படி முதல்வர் தரப்பிலிருந்து உளவுத்துறைக்கு உத்தரவு போனதாகவும் தகவல்கள் வலம்வந்தன..

கருப்பு ஆடு
ஆனால், அந்த கருப்பு ஆடுகள் யாரென்று இதுவரை கண்டறியப்படவில்லை என்றே தெரிகிறது.. அரசு முன்னெடுக்கும் திட்டங்கள், பணிகள் குறித்தும் பாஜகவுக்கு மெசெஜ் பாஸ் செய்வது யார்? அரசு சார்ந்த விஷயங்கள் வெளியே லீக் ஆவது, ஆளும்தரப்புக்கு மைனஸாகவே பார்க்கப்படுவதுடன், இதனால் பெரும் பிரச்சினைகள் எழவும் வாய்ப்பாகிவிடும் என்பதால், கடும் எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.. தவறான புள்ளிவிவரங்கள், தகவல்களை தந்து, அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் அதிகாரிகள் யார் என்பதை கண்டறியும்படியும், உளவுத் துறைக்கு உத்தரவு பறந்துள்ளதாம்.. இதையடுத்து, களத்தில் மும்முரமாக உளவுத்துறை இறங்கி உள்ள நிலையில், கிலியும் கலக்கமும் சம்பந்தப்பட்ட கருப்பு ஆடுகளுக்கு தொற்றிக் கொண்டுள்ளதாம்..!!
-
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
தலைமைச் செயலகத்தை தவெக கட்சி அலுவலகமாக மாற்றுவதா? திமுக எம்பி வில்சன் கண்டனம் -
கைய குடுங்க பங்கு.. விஜய்ய முடிச்சு விடனும்! திரைமறைவில் கைகோர்த்த திமுக -அதிமுக! உடைந்த கூட்டணிகள்! -
ஸ்டாலின் மாஸ்டர் பிளான்.. திமுகவை டோட்டலாக ரீவேம்ப் செய்கிறாரா? கூட்டணி கட்சிகளுக்கு பெரிய ஆப்புதானா -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
ஃபேக் நியூஸ்.. தூக்கம் தொலைத்த திமுக நிர்வாகிகள்.. களம் இறங்கிய திமுக தலைமை.. வில்சன் எம்பி அதிரடி -
வாட் ப்ரோ.. இட்ஸ் வெரி ராங் ப்ரோ! திராவிட மாடல் 2.0 ஆட்சி தான் தவெக! அடித்து துவைத்த அர்ஜுன் சம்பத் -
கோவை சிறுமி விவகாரத்தை.. திமுகவுடன் தொடர்புபடுத்துவதா? ஆர்.எஸ்.பாரதி கண்டனம் -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
குடிசைகள் இல்லாத நகரமாக மாறும் மும்பை.. 2030 தான் டார்கெட்! ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு












Click it and Unblock the Notifications