ரூ.4 கோடி விவகாரத்தில் ட்விஸ்ட்.. ரயில் டிக்கெட்டே நயினார் கோட்டாவில் எடுக்கப்பட்டதுதான்! போச்சு!
சென்னை: சென்னை தாம்பரத்தில் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது. பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனுக்கு மிகப்பெரிய நெருக்கடி தற்போது இந்த வழக்கில் ஏற்பட்டு உள்ளது.
இந்த வழக்கில் கைதானவர்கள், பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் பரிந்துரையின் பேரில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. அதன்படி பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனுக்கு உள்ள எம்எல்ஏ எமர்ஜென்சி கோட்டா டிக்கெட்டில் இவர்கள் ரயிலில் பயணித்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

சிபிசிஐடி போலீஸ் விசாரணையில் இந்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. வழக்கில் இதுவரை 15க்கும் மேற்பட்டோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்யப்பட்டு உள்ளது. ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் சதீஷ், நவீன், பெருமாள் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் செய்யப்பட்ட விசாரணையில் நயினார் நாகேந்திரனுக்கு உள்ள எம்எல்ஏ எமர்ஜென்சி கோட்டா டிக்கெட்டில் இவர்கள் ரயிலில் பயணித்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
மறுப்பு; முன்னதாக தாம்பரம் ரயில் நிலையத்தில் பிடிக்கப்பட்ட 4 கோடி ரூபாய்க்கும் எனக்கும் தொடர்பு இல்லை. யாராவது புகார் கொடுக்கட்டும். எனக்கு கவலை இல்லை. அந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை., என்று பாஜக நெல்லை வேட்பாளர் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் இருந்து தினமும் இரவு 8.10 மணி அளவில் நெல்லை எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் புறப்படும். இந்த ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். இந்நிலையில், இந்த ரயிலில் நெல்லைக்கு கடந்த ஏப்ரல் 6ம் தேதி பல கோடி ரூபாய் பணத்தை கொண்டு செல்ல சிலர் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
கடந்த ஏப்ரல் 6ம் தேதி லோக்சபா தேர்தலுக்கு முன்பு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தாம்பரத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் குளிர் சாதன பெட்டியில் நடத்திய அதிரடி சோதனையில் ரூபாய் 4 கோடி அளவிலான பணம் கட்டுக்கட்டாக சிக்கியுள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 6 பைகளில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4.5 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
பணத்துடன் பிடிபட்ட 3 பேரையும் தாம்பரம் காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.. லோக்சபா தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக இந்த பணம் நெல்லைக்கு கொண்டு செல்லப்பட்டதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்படிப்பட்ட நிலையில்தான் சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட பணம் நெல்லை பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்காக கொண்டு செல்லப்பட்ட பணம் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி உள்ளன. புரசைவாக்கம் தனியார் விடுதியின் மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ் உள்ளிட்ட 3 பேர் இதில் கைது செய்யப்பட்டனர். நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான புரசைவாக்கத்தில் உள்ள ப்ளூ டைமண்ட் ஹோட்டல் பணியாளர்கள் பணத்தை எடுத்துச் சென்று உள்ளனர்.
இந்த பணம் எந்தக் கட்சி சார்பாக, எந்த வேட்பாளருக்காக கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் அதிகார்பூர்வமாக இதுவரை அறிவிப்பை வெளியிடவில்லை என்றாலும் விசாரணையில் பெறப்பட்ட முதல்கட்ட தகவல்கள் மட்டுமே தற்போதைக்கு வெளியாகி உள்ளன.
ரெய்டு: தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பிடிபட்ட விவகாரம் தொடர்பாக நயினார் நாகேந்திரனின் ப்ளூ டைமண்ட் ஹோட்டலுக்கு மத்திய சென்னை தொகுதி தேர்தல் நுண் பார்வையாளர் சாகுல் ஹமீது நேரில் வந்து விசாரணை செய்தனர்.. அங்கே ரெய்டும் நடைபெற்றது.
இது போக நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர் கணேஷ் மணியின் வீட்டில் செய்யப்பட்ட ரெய்டில், ₹2 லட்சம் ரொக்கம், 100 வேஷ்டிகள், 44 நைட்டிகள் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் சிக்கியது. இது தொடர்பாகவும் வருமான வரித்துறைக்கு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.,
இந்த நிலையில் தாம்பரம் ரயில் நிலையத்தில் பிடிக்கப்பட்ட 4 கோடி ரூபாய்க்கும் எனக்கும் தொடர்பு இல்லை. யாராவது புகார் கொடுக்கட்டும். எனக்கு கவலை இல்லை. அந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை.
என் பெயரை களங்கப்படுத்த வேண்டும் என்று இப்படி சிலர் செய்கின்றனர். நான் பிரபலமாக இருப்பதால் இப்படி சிலர் செய்கின்றனர் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
முடிவுக்கு வந்தது இழுபறி! புதுச்சேரி, கேரளா, அசாமில் வேட்புமனுத் தாக்கல் ஓவர்! யாருக்கு வெற்றி? -
சிவகார்த்திகேயனுக்கு சனி பிடித்துவிட்டது.. நாஞ்சில் சம்பத் சர்ச்சை பேச்சு.. மீண்டும் சிக்கிய தவெக -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications