"டாப் கியர்" போட்ட எடப்பாடி.. திமுகவை விடுங்க.. இன்று முதல் உறுப்பினர் சேர்க்கை.. அதிமுகவில் அதிரடி
சென்னை: ரூ.10 கட்டணம் செலுத்தி கட்சியில் உறுப்பினராகலாம் என்று தலைமைக்கழகம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக கூடாரமே பரபரப்பாக காணப்படுகிறது.. இதையடுத்து அதிமுகவில் இன்று முதல் உறுப்பினர் சேர்க்கை துவங்கி நடந்து வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு, அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிமுக தேர்தல் ஆணையர்கள் அறிவித்தனர்...
இதையடுத்து, அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார். அவருக்கு அதிமுக மூத்த நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

முதல் கையெழுத்து
அப்போது, அதிமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெறும் என்றும் அதற்கான சேர்க்கை படிவங்கள் வரும் 5-ம் தேதி முதல் வழங்கப்படும் என்றும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல் அறிவிப்பாக வெளியிட்டிருந்தார்.. அத்துடன், அதிமுக தலைமை அலுவலகத்தில் உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்திருந்தார்.. ஆனால், இதை அதிமுகவின் மூத்த தலைவரான கேசி பழனிசாமி விமர்சித்திருந்தார்.. "இந்த பதவியேற்பு அதிமுகவில் எம்ஜிஆர் சட்டவிதிகளுக்கு முரணானது. நாங்கள் எங்கள் கட்சியின் விதிகளை சொல்கிறோம். உறுப்பினர்களை சேர்க்காமலேயே தேர்தலை நடத்தி முடித்துள்ளார் எடப்பாடி.. இதை அவரே வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டுள்ளார். இதுவே அவருக்கு மைனஸ்தான்" என்று விமர்சித்திருந்தார்.

SDS - அட்வைஸ்
இந்நிலையில், கடந்த வாரம் சென்னையில் அதிமுக மாஜி அமைச்சர் எஸ்டி சோமசுந்தரம் நூற்றாண்டு விழா நடைபெற்றது.. இந்த விழாவில் விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் கலந்து கொண்டு பேசினார்.. அப்போது, "கட்சியில் எத்தனையோ முன்னோடிகள் இருந்தபோதும், அண்ணா, இளைஞர்களான என்னையும், எஸ்டி சோமசுந்தரத்தையும் வேட்பாளராக நிறுத்தினார்., அதிமுக 1967-ல் ஆட்சியை பிடிக்க காரணமே, அவர் அதிக அளவில் இளைஞர்களை வேட்பாளராக நிறுத்தியதுதான்.. அதை எடப்பாடி பழனிசாமியும் நினைவில் கொள்ள வேண்டும்" என்று அட்வைஸ் கூறியிருந்தார்.

விண்ணப்ப படிவம்
இதையடுத்துதான், கட்சியில் புதிதாக அதிக அளவில் இளைஞர்களை சேர்க்க அதிமுக மேலிடம் திட்டமிட்டுள்ளதாம்.. அதிமுகவில் கட்சியில் உறுப்பினர் சேர்க்கை இன்றைய தினம் தொடங்குகிறது. இதற்காக தனியாக விண்ணப்ப படிவம் அச்சிடப்பட்டுள்ளது. இந்த விண்ணப்ப படிவங்களை நாளை முதல் தலைமை கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் ஒரு படிவத்தின் விலை ரூ.10. ஒரு படிவத்தில் 25 உறுப்பினர்களை சேர்க்கலாம். ஒவ்வொரு உறுப்பினரும் ரூ.10 கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அட்ரஸ் எங்கே
ஏற்கனவே உறுப்பினர்களாக இருப்பவர்களும் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு உறுப்பினர் அட்டை புதுப்பித்து வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.. அதிமுகவில், புதிய உறுப்பினர்களையும் பெருமளவில் சேர்க்க முடிவு செய்துள்ளார்களாம்.. அதுமட்டுமல்ல, அந்த விண்ணப்பத்தில் பெயர், வயது, பிறந்த தேதி, படிப்பு, வேலை, முகவரி உள்ளிட்ட எல்லா விபரங்களும் கேட்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்கனவே உறுப்பினராக இருப்பவர்கள் மட்டுமல்லாமல் அந்த பகுதியில் கூடுதல் இளைஞர்களையும், இளம்பெண்களையும் கட்சிக்குள் கொண்டு வர திட்டமிட்டுள்ளார்களாம்.

பூசல் குழப்பம்
இதையொட்டி மாவட்ட செயலாளர்கள் ஒவ்வொருவருக்கும் செயற்குழு கூட்டத்தின்போது எவ்வளவு உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று டார்கெட் நிர்ணயிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.. தற்சமயம் பாஜகவுடனான பூசலும் குழப்பமும் சர்ச்சையும் தொடர்ந்து வருவதால், கூட்டணி விவகாரத்திலும் கட்சி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை பற்றியும் இந்த கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.. திமுகவிலும் 2 கோடி என இலக்கை நிர்ணயித்து உறுப்பினர் சேர்க்கை தொடங்கி உள்ள நிலையில், அதிமுகவிலும் உறுப்பினர் சேர்க்கை தற்போது துவங்கி நடந்து கொண்டிருக்கிறது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications