வரிசையாக 6 தேர்தலில் தோல்வி! இப்போ வரை கருத்து கணிப்பும் சரியில்லையே! எடப்பாடிக்கு எகிறும் நெருக்கடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக ஜெயலலிதா மறைவிற்கு பின் வரிசையாக 6 தேர்தல்களில் தோல்வி அடைந்துள்ளது. இரட்டை தலைமைக்கு கீழ் வரிசையாக தோல்வி மேல் தோல்வியை அக்கட்சி சந்தித்த நிலையில் தற்போது ஒற்றை தலைமைக்கு கீழ் தேர்தல் நடக்க உள்ளது.

ஆனால் ஒற்றை தலைமை.. எடப்பாடி பழனிச்சாமிக்கும் பிரஷரை அதிகரிக்கும் விதமாக அவருக்கு எதிராக கருத்து கணிப்புகள் வந்துள்ளன. அதன்படி இந்தியா டுடேவின் மூட் ஆப் தி நேஷன் சர்வேவில், தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 39 இடங்களிலும் வெல்லும். கடந்த முறை 38 இடங்களில் வென்றது. இந்த முறை.. ரவீந்திரநாத் எம்பி வென்ற இடத்தையும் சேர்த்து 39 இடங்களிலும் திமுகவே வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

Huge pressure for Edappadi Palanisamy ahead of Lok Sabha 2024 elections after 6 continuous loss

அதேபோல் வாக்கு வங்கி 47 சதவிகிதம் ஆக இருக்கும். பாஜக ஒரு இடத்தில் கூட வெல்லாது. ஆனால் வாக்கு வங்கி 15 சதவிகிதம் ஆக உயரும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இதில் அதிமுக வாக்கு வங்கி கூறப்படவில்லை. மாறாக "others" என்று கூறி.. மொத்தமாக மற்ற கட்சிகளின் வாக்கு வங்கி 38 சதவிகிதம் என்று கூறப்பட்டு உள்ளது.

கணிப்பு: இன்னொரு பக்கம் டைம்ஸ் நவ் வெளியிட்ட கணிப்பில் , திமுக கூட்டணி லோக்சபா தேர்தலில் 59.7 சதவிகிதம் வாக்குகளை பெறும் என்று கணிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதேபோல் பாஜக 20.6 சதவிகிதம் வாக்குகளை பெறும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அதிமுக 16 சதவிகித கருத்து கணிப்புகளை பெறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு (மொத்த இடங்கள்- 39): லோக்சபா தொகுதி கணிப்புகள் இதோ:

- பாஜக: 1
- திமுகவின் இந்தியா கூட்டணி - 36
- அதிமுக: 2
- மற்றவை: 0

வரிசையாக 6 தேர்தல் தோல்வி: அதிமுக ஜெயலலிதா மறைவிற்கு பின் எந்த தேர்தலிலும் வெற்றிபெறவே இல்லை. வரிசையாக 6 தேர்தல்களில் தோல்வி அடைந்துள்ளது. ஓ பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி சேர்ந்து இருந்த போதே பெரிதாக வெற்றிபெறவில்லை.

இரட்டை தலைமைக்கு கீழ் வரிசையாக தோல்வி மேல் தோல்வியை அக்கட்சி சந்தித்த நிலையில் தற்போது ஒற்றை தலைமைக்கு கீழ் தேர்தல் நடக்க உள்ளது.

2021 சட்டசபை தேர்தல்

2019 லோக்சபா தேர்தல்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்

கிராமப்புற உள்ளாட்சி தேர்தல்

9 மாவட்டங்களில் உள்ளாட்சி இடைத்தேர்தல்

நகர்ப்புற உள்ளாட்சி உள்ளாட்சி தேர்தல் என்று மொத்தமாக 6 தேர்தல்களில் வரிசையாக அதிமுக தோல்வி அடைந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் தற்போது லோக்சபா தேர்தலிலும் அதிமுக தோல்வி அடையும் என்று கருத்து கணிப்புகள் கூறுகின்றன.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம்.. இதுதான் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக தனியாக எதிர்கொள்ளும் தேர்தல் ஆகும். அதோடு பாஜகவுடன் இதில் கூட்டணியில் இல்லை. பாஜக கூட்டணி உடனும் அதிமுக தோல்வி அடைந்தது.. அதே சமயம் .. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி இன்றி போட்டியிட்டது. அதிலும் அதிமுக தோல்வி அடைந்த நிலையில் 2024 லோக்சபா தேர்தல் அதிமுகவிற்கு மிக தேவையான வெற்றியை கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+