பான் கார்டுகளில் வருகிறது பெரிய மாற்றம்.. உடனே நோட் பண்ணுங்க.. இனி அவ்வளவு ஈஸி இல்லை!
சென்னை: விரைவில் நாடு முழுக்க பான் கார்டு வழங்குவதில் பெரிய கட்டுப்பாடு கொண்டு வர மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளதாம். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.
வருமான வரித் துறையானது நிரந்தர கணக்கு எண்ணை PAN கார்ட் என்ற பெயரில் எல்லோருக்கும் வழங்கி வருகிறது. நம்முடைய அனைத்து வங்கி, பண பரிவர்த்தனைகளை கணக்கில் எடுக்க, கண்காணிக்க, அலச இந்த பான் எண் அவசியம் ஆகும்.

இதை வங்கி கணக்குடன் கட்டாயமாக இணைக்க வேண்டும். அதே போல் ஆதார் அட்டையுடன் கட்டாயமாக இணைக்க வேண்டும் என்ற உத்தரவும் உள்ளது. இது ஒரு தனித்துவமான 10 இலக்க எண்ணெழுத்து எண்ணாகும். அனைத்து வரி செலுத்துவோருக்கும் பான் கார்டு கட்டாயம்.
பான் கார்டு முக்கியம்: நாம் வைத்து இருக்கும் அடிப்படை அட்டைகளில் ஒன்றாக பான் கார்டு அட்டையும் மாறிவிட்டது. பான் அட்டை பயன்படுத்துவதன் மூலம்தான் வங்கி தொடர்பான பல சேவைகளை நாம் பெற முடிகிறது.
நாடு முழுக்க பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முதலில் 1 வருடம் அவகாசம். பின்னர் கூடுதலாக 6 மாதம் அவகாசம். அதன்பின் கடந்த மார்ச் வரை 500 ரூபாய் அபராதத்துடன் அவகாசம், பின்னர் ஜூன் இறுதிவரை 1000 ரூபாய் அபாரதத்துடன் அவகாசம் வழங்கப்பட்டது.
லோன் எடுக்க, வருமான வரி தாக்கல் செய்வது, வங்கியில் அதிக அளவு பண பரிவர்த்தனை செய்வது போன்ற செயல்களுக்கு பான்கார்டு அவசியம். நம் வரவு செலவு அனைத்தும் இதன் மூலமே கண்காணிக்கப்படுகிறது.
இதற்காக கால அவகாசம் ஏற்கனவே பல முறை நீட்டிக்கப்பட்டுவிட்டது. பல முறை இந்த அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2023 ஜூன் 30ம் தேதியுடன் இதற்கான அவகாசம் முடிந்துவிட்டது. அதற்குள் உங்கள் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். இணைக்காதவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன.
முடக்கம்: அதன் ஒரு கட்டமாக ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத 11.5 கோடி பான் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தியாவில் 57.25கோடி பேர்ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைத்துள்ளனர்.
ஆனால் மொத்தமாக 70.24கோடி பேர் பான் கார்டு வைத்துள்ளனர். மீதம் உள்ள 11.5 கோடி பேரின் பான் கார்டுகள் இணைக்கப்படவில்லை என்பதால் இவர்களின் பான் கார்டு மொத்தமாக முடக்கப்பட்டு உள்ளது. பலமுறை கால அவகாசம் கொடுத்தும் கூட இவர்கள் விண்ணப்பங்களை மேற்கொள்ளவில்லை என்பதால் அவர்களின் கணக்கு முடக்கப்பட்டு உள்ளது.
பாதிப்புகள்: பான் அட்டை ஆதார் அட்டையை இணைக்காதவர்களுக்கு உங்கள் பான் செயலற்றதாகி விடும். அதாவது அந்த எண் டீ ஆக்டிவேட் ஆகிவிடும். அப்படி ஆகும் பட்சத்தில் நீங்கள் பணம் அனுப்புவது தொடங்கி லோன் எடுப்பது, வருமான வரி தாக்கல் செய்வது வரை எல்லாம் சிக்கலாகும். சிக்கலாகும் என்பதை விட மொத்தமாக இந்த பணிகளை செய்வது இயலாத காரியம்.
இதனால் வங்கி சேவைகள் பாதிக்கப்படுமா, வங்கி கணக்கு முடங்குமா என்று இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இது தொடர்பாக ஆர்பிஐ விரைவில் விளக்கம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மத்திய அரசு வட்டார தகவல்களின்படி இனிமேல் இந்த கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்று கூறப்படுகிறது.
புதிய கட்டுப்பாடு: இந்த நிலையில்தான் விரைவில் நாடு முழுக்க பான் கார்டு வழங்குவதில் பெரிய கட்டுப்பாடு கொண்டு வர மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளதாம். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.
அதன்படி தற்போது தனியார் நிறுவனங்கள், சிறிய சிறிய அமைப்புகள் கூட பான் கார்டு விண்ணப்பம் செய்ய வழி உள்ளன. ஆதார் போல தனியாக மையங்களாக செயல்படாமல்.. சிறிய சிறிய கடைகளில் கூட பான் கார்டு விண்ணப்பங்களை செய்யும் வசதிகள் உள்ளன.
அதை மாற்ற சாமத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன்படி இனி பான் கார்டுகளை முறையாக அனுமதி பெற்று மட்டுமே விண்ணப்பிக்க செய்ய வசதியாக விரைவில் நாடு முழுக்க பான் கார்டு வழங்குவதில் பெரிய கட்டுப்பாடு கொண்டு வர மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளதாம்.
பல தனியார் நிறுவங்களிடம் இருந்து பான் விண்ணப்பிக்கும் அனுமதியை பறிக்க முடிவு செய்துள்ளாராம். ஆதார் அட்டை போலவே .. இனி பான் அட்டைகளையும் முறையாக விண்ணப்பிக்க சென்டர்களை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாம்.












Click it and Unblock the Notifications