"அசையுதா" அச்சாணி.. டெல்லி கிளம்பி போன புள்ளி.. "அந்த" ஒரு மணி நேரம்.. திகைத்த திமுக + பாஜக.. ஓஹோஹோ
கமல்ஹாசனுக்கு திமுக கூட்டணியிலா? காங். கூட்டணியிலா என்ற அலசல் நடக்கிறது
சென்னை: கமல்ஹாசன் காங்கிரஸ் கட்சியில் கூட்டணி ஐக்கியமாக போகிறாரா? அல்லது திமுக தலைமையிலான காங்கிரஸ் கூட்டணியில் ஐக்கியமாக போகிறாரா? அல்லது அதிமுக + காங்கிரஸ் + கூட்டணி அமைய நேர்ந்தால், அங்கே ஐக்கியமாக போகிறாரா? என்பன போன்ற கேள்விகளும், குழப்பங்களும் இன்னும் வட்டமடித்து கொண்டே இருக்கின்றன.
சில தினங்களுக்கு முன்பு ஒரு செய்தி நமக்கு பிரத்யேகமாக கிடைத்தது... ராகுல் காந்தியின் அழைப்பை ஏற்று, கமல்ஹாசன் நடத்திய ஒற்றுமை யாத்திரையில் கலந்து கொண்டார் கமல்... இந்த சம்பவம் அரசியல் ரீதியாக பரபரப்பாக பேசப்பட்டது.
இதனிடையே, யாத்திரைக்கு பிறகு ராகுலும் கமலும் தனிப்பட்ட முறையில் சந்தித்து விவாதித்தனர்... அந்த சந்திப்பில், "காங்கிரஸ் கூட்டணிக்குள் நீங்கள் வரவேண்டும்" என்று கமலிடம் ராகுல் கோரிக்கை வைத்திருக்கிறார்.

ராகுல் அலை
அதை ஆமோதித்த கமல்,"திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்காதா?" என்று கேட்டதற்கு, "திமுக அலையன்சில் இருந்து விலகும் யோசனை நமக்கில்லை. ஆனால், அப்படிப்பட்ட சூழலை திமுக உருவாக்கும் என எனக்கு சந்தேகம்" என்றிருக்கிறார் ராகுல். அதற்கு கமல், "திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கும் பட்சத்தில் நான் எப்படி உங்கள் கூட்டணிக்கு வரமுடியும்? " என்று கேட்க, "திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருந்தாலும் காங்கிரஸுக்கு ஒதுக்கும் சீட்டுகளில் உங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அதற்கேற்ப திமுகவிடம் பேசுவோம்" என்று ராகுல் சொல்லி உள்ளார்.

ஆஃபர்
அதற்கு கமல், "காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைந்தால் உங்களுடன் கைக்கோர்க்க தயார். மற்றதெனில் யோசிக்க வேண்டும்" என்று தெளிவுப்படுத்தியிருக்கிறார்... இதனையடுத்து, திமுக கூட்டணியில் நடக்கும் சில ரகசியங்கள், காங்கிரசுக்கு அதிமுக வைக்கும் ஆஃபர் என பல விஷயங்களை கமலிடம் பகிர்ந்து கொண்டாராம் ராகுல். ஆக மொத்தம் திமுக கூட்டணியில் கமல் இடம்பெறக்கூடும் என்றே தெரிகிறது.. அப்படி கூட்டணியில் இடம்பெறும் பட்சத்தில் கமலுக்கு எத்தனை சீட், எத்தனை தொகுதி ஒதுக்க வாய்ப்புள்ளது என்ற அலசல்களும் கிளம்பி உள்ளன..

சுதீஷ்
இதற்கு பிறகு இன்னொரு தகவல் கசிந்தது.. கமலுக்கு ஒரு எம்பி சீட் மட்டுமே ஒதுக்கலாம் என்கிறார்கள்.. காங்கிரசுக்கு ஒதுக்கும் சீட்களில் இருந்து குறைத்து, அந்த ஒரு சீட்டை கமலுக்கு தரலாம் என்றார்கள்.. கடந்த முறை திடுதிப்பென்று 10 சீட்களை திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்டுவிட்டநிலையில், இந்த முறை நிச்சயம் அந்த அளவுக்கு சீட் தர மாட்டார்கள் என்கிறார்கள்.. ஆனால், அழகிரியோ, 15 சீட்வரை கேட்க இப்போதே முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. எப்படியும் காங்கிரஸை திமுக மேலிடம் கைவிடாது என்ற நம்பிக்கையில் அழகிரி இந்த அளவுக்கு சீட் கேட்க முடிவு செய்துள்ளாரா? என்று தெரியவில்லை.

கொளுத்திட்டாரு
ஆனால், கமல் டெல்லி சென்று ராகுலை சந்தித்தது, திமுக தரப்பில் ஒரு அதிர்வை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது.. கமலுக்கு நகர்ப்புறங்களில் இருக்கும் இரண்டரை சதவீத வாக்குவங்கியை தன்பக்கம் திருப்ப திமுக தரப்பு யோசித்து வரும் நிலையில், கமல் நேரடியாகவே ராகுலை சென்று சந்தித்துவிட்டார்... ஒருவேளை காங்கிரஸ் + அதிமுக + கமல் கூட்டணி அமையலாம் என்று யாரோ சிலர் கொளுத்திபோட, இதுவும் திமுக தரப்பில் லேசான கலக்கத்தை எழுப்பியதாம்.. காரணம், பாஜகவை தேசிய அளவில் எதிர்க்க வேண்டுமானால், அதற்கு காங்கிரசின் தயவு தேவை.

ப்ளான் A
அதனாலேயே, பிடிஐ-க்கு முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் அளித்த பேட்டியில்கூட, ராகுலின் பெருமையை பேசியிருந்தார்.. அரசியலமைப்பு சட்டத்தை காக்க வேண்டும் என்றால் அதற்கு தேசிய அளவில் கூட்டணி அமைக்க வேண்டும். அந்த கூட்டணியில் காங்கிரசும் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஏற்கனவே நாங்கள் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கிறோம். அந்த கூட்டணி வெற்றிகரமான கூட்டணி என்பது நிரூபணம் ஆகி உள்ளது என்று உறுதிப்படுத்தியிருந்தார்.

ப்ளான் B
மேலும், ராகுல்காந்தி இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை பண்பை அவர் மதிக்கிறார். மத வேறுபாட்டை எதிர்க்கிறார். ஒரு மொழியை திணிப்பதை அவர் எதிர்க்கிறார். பாஜகவை தேர்தலுக்காக மட்டும் ராகுல் காந்தி எதிர்க்கவில்லை. கொள்கை ரீதியாகவும் எதிர்க்கிறார். அதனால்தான் ராகுல் காந்தியை பாஜக எதிர்க்கிறது. ராகுல் காந்தியின் வலிமையை இது காட்டுகிறது என்றும் ஒருபடிமேலே போய் புகழ்ந்திருந்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது. முதல்வர் ஸ்டாலின், உளப்பூர்வமாகவே ராகுலை புகழ்ந்திருக்கிறார் என்றாலும்கூட, கூட்டணி கணக்கும் இதில் உள்ளது என்கிறார்கள்..

சாயும் கமல்
இதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.. ராகுல் காந்தியை தனியாக, ஒரு மணி நேரம் கமல் சந்தித்து பேசியது, வடமாநில மீடியாக்களில் மிகப்பெரிய விவாதமாகவே நடந்ததாம்.. பரபரப்பையும் இந்த சந்திப்பு இன்னமும் கிளப்பி விட்டுள்ளது.. அந்த பரபரப்பை திசை திருப்பும் விதமாகவும், திமுகதான் காங்கிரஸின் நம்பிக்கையான கூட்டணி என்பதை ராகுலுக்கு உணர்த்தவும்தான், முதல்வர் இப்படி ஒரு பேட்டியை தந்ததாகவும் சொல்கிறார்கள்.. ஒரு மணி நேரம் கமல் சந்திப்பிற்கே, இத்தனைவிதமான அலசல்கள், யூகங்கள் என்றால், இன்னும் கூட்டணியிலேயே சேர்ந்துவிட்டால்??? பார்ப்போம்..!!
-
சப்ஜெக்ட்டுக்கு உயிர் வந்துருச்சு.. திருச்சி கிழக்கில் கமலை இறக்குங்க! திடீரென குரல் கொடுக்கும் மநீம -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications