Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வைகோவை விடுங்க.. கமல்ஹாசனின் "தாயம் ஒண்ணு" பாருங்க..ஜெர்க் ஆகுதா திமுக கூட்டணி? படக்னு பார்த்த பாஜக

Subscribe to Oneindia Tamil

சென்னை: மநீம தலைவர் கமல்ஹாசன் யாருடன் கூட்டணி வைக்க போகிறார்? எந்த தொகுதியில் களமிறங்க போகிறார்? என்ற ஆர்வம் எழுந்து வருகிறது.

எம்பி தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன... அதேநேரம் ஒவ்வொரு கட்சியின் பிரபலங்களும் தங்களுக்கு சாதகமான தொகுதிகளை குறிவைத்து வேலை செய்யத்தொடங்கி விட்டார்கள்... இதில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் களப்பணியும் அதிகரிக்க துவங்கிவிட்டது.

Huge Strategy by MNM Kamalhasan and Is Kamal going to form alliance with DMK

திமுக: எப்படியும் இந்த முறை திமுக கூட்டணியுடன் இணைந்தே மய்யம் தேர்தலை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இதற்கு காங்கிரசும் பெருத்த துணையாக இருக்கும் என்று கணக்கு போடப்பட்ட நிலையில், இதெல்லாம் தற்போது டமார் என நொறுங்கிவிடும் போல தெரிகிறது.

பெங்களூருவில் அன்று எதிர்க்கட்சிகள் நடத்திய கூட்டத்திற்கு, அழைப்பு விடுக்கப்படவில்லை என்றதுமே கமல் அப்செட் ஆகிவிட்டாராம். அதனால்தான், கோவை, மதுரை, தென் சென்னை ஆகிய 3 லோக்சபா தொகுதிகளை, எந்த கூட்டணி தருகிறதோ, அதனுடன் கூட்டணி அமைக்கும் முடிவுக்கு கமல் வந்துள்ளதாக, அன்றே செய்திகள் பரபரபத்தன. ஒருவேளை அதிமுக - பாஜக கூட்டணியில், தாங்கள் கேட்கும் தொகுதிகளை கொடுத்தால், அங்கே சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.

12 தொகுதிகள்: இதனிடையே, சில தொகுதிகளை அடையாளம் கண்டு, அதில் கமல்ஹாசனை களம் இறக்கிவிட வேண்டும் என்று மநீம நிர்வாகிகளும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்காகவே, 12 எம்பி தொகுதிகளை மக்கள் நீதி மய்யம் கட்சியினர் அடையாளம் கண்டு வைத்துவிட்டார்களாம். குறிப்பாக, தென் சென்னை, கோவை ஆகிய 3 தொகுதிகள் முதல் இடத்தில் இருக்கின்றன.. அதனால்தான், இந்த இடங்களை எந்த கூட்டணி தரப்போகிறதோ, அங்கே கூட்டணி என்ற முடிவில் மநீம உள்ளதாக தெரிகிறது.

இந்த 3 தொகுதிகளை தவிர, மத்திய சென்னை, வட சென்னை, பொள்ளாச்சி, ஸ்ரீபெரும்புதூர், திருப்பூர், பொள்ளாச்சி உள்ளிட்ட தொகுதிகளிலும் மய்ய உறுப்பினர்களின் கவனம் விழுந்துள்ளது. அதனால், 12 தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் கமலை களமிறக்க இறக்கிவிடவும் முனைப்பு காட்டுவதாக தகவல்கள் பரபரத்தன.

தென்சென்னை: எனினும், தென் சென்னை தொகுதியில், கமல் களமிறங்கலாம் என்றும் செய்திகள் கசிகின்றன.. காரணம், கடந்த லோக்சபா தேர்தலில் மய்யம் சார்பில், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ரங்கராஜன், 1.20 லட்சம் ஓட்டுக்களை இதே தென்சென்னையில்தான் பெற்றிருந்தார். அதேபோல சட்டசபை தேர்தலிலும், கணிசமான ஓட்டுக்களை இங்கு மய்யம் பெற்றுள்ளது.. அதனால்தான், தென்சென்னை தொகுதியை குறிவைத்து, கமலின் தேர்தல் வேலை நடப்பதாக கூறப்பட்டது.

வேளச்சேரி: இந்த தென்சென்னை தொகுதியை பொறுத்தவரை, பெரும்பாலும் திமுக, காங்கிரஸ் வசமே அதிக முறை இருந்துள்ளது.. வேளச்சேரி, தியாகராய நகர், மயிலாப்பூர் பகுதிகளில் பிராமணர்கள் அதிகளவில் வசிக்கின்றனர்.. இது தவிர, முதலியார், மீனவர்கள், தலித்துகள் எனப் பலதரப்பட்ட மக்களையும் உள்ளடக்கியது தென் சென்னை தொகுதி.. அதேபோல், அரசு ஊழியர்கள், ஐடி ஊழியர்கள் என்று படித்தவர்கள் எண்ணிக்கையும் இந்த தொகுதியில்தான் அதிகம் உள்ளனர்..

அதனால், வாக்குகள் மொத்தமும் ஒரே இடத்தில் குவியும் என்று எதிர்பார்க்க முடியாது.. அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு சமமான வாக்கு வங்கி இந்தத் தொகுதியில் உள்ளதையும் மறுக்க முடியாது. திமுக கூட்டணி என்றால், கமல் இங்கு போட்டியிட வசதியாக இருக்கும். ஒருவேளை கூட்டணி தவறும்பட்சத்தில், மீண்டும் இந்த முறை கோவையிலேயே போட்டியிட வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள். அப்படியும் இல்லையென்றால், மதுரையில் போட்டியிடலாம் என்கிறார்கள்.

திமுக கூட்டணியா?: ஆனால், எதுவும் இன்னும் உறுதியாகவில்லை.. திமுக கூட்டணியை பொறுத்தவரை, தற்போதுள்ள கூட்டணியே தொடரும் என்கிறார்கள்.. புதிதாக ஒன்றிரண்டு கட்சிகள் இணையலாமே தவிர, பழைய கூட்டணியில் மாற்றம் இல்லை என்றே கணிக்கப்படுகிறது. அதேசமயம், கமலுடன் இதுவரை எந்தவிதமான பேச்சுவார்த்தையையும், திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் துவங்கவில்லை..

வைகோ: ஒருவேளை கமலுடன் கூட்டணி வைக்க நேர்ந்தால், 2 சீட்களை ஒதுக்கவும் ஒரு யோசனை உள்ளதாம்.. அதாவது கடந்த தேர்தலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கும் இதே பார்முலாவைதான் திமுக கையில் எடுத்தது.. 1 +1 என்ற ரீதியில், சீட்டுகளை ஒதுக்கி, தமிழழும் முழுவதும் வைகோவை பிரச்சாரத்துக்கும் அனுப்பியிருந்தது..

அந்த வகையில், கமலையும், ராஜ்யசபாவுக்கு அனுப்பி, பிரச்சாரத்துக்கும் அனுப்ப திமுக பிளான் போட வாய்ப்பிருப்பதாக கூறுகிறார்கள். இதுகுறித்தும் உறுதியான தகவல் எதுவும் தெரியவில்லை.

இந்நிலையில்தான், தேர்தல் தொடர்பாக கட்சியினருடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்த தற்போது திட்டமிடப்பட்டுள்ளதாம். வெளிநாடு பயணத்தை முடித்துவிட்டு, நாளைதான் மநீம தலைவர் கமல்ஹாசன், தாயகம் திரும்புகிறார். அவர் வந்ததுமே, தேர்தல் தொடர்பாக கட்சியினருடன் ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டிருக்கிறாராம்.

யாருடன் கூட்டணி: அப்போது, நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடலாமா? அல்லது இந்தியா கூட்டணியில் இடம் பெறலாமா? என்பது குறித்து இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது. அதுமட்டுமல்ல, நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க கமல்ஹாசனுக்கு மாநில செயற்குழு அதிகாரம் வழங்கியுள்ள நிலையில், கமலின் முடிவே, இறுதியானதாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது... பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+