Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓஓ.. கமலுக்கு இத்தனை சீட்டா.. அதைவிடுங்க.. திமுகவுக்கு "புது வரவு".. கள்ளக்குறிச்சியா.. பலே கணிப்பு

கமல்ஹாசனுக்கு திமுக கூட்டணியில் எத்தனை சீட் ஒதுக்கப்படும் என்ற அலசல் நடக்கிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: கமல்ஹாசன் காங்கிரஸ் கட்சியில் கூட்டணி வைப்பது உறுதி என்ற தகவல்கள் வெளியாகி வரும்நிலையில், திமுக, காங்கிரஸ் தரப்பு குறித்த சில விஷயங்களும் கசிந்து வருகின்றன.

சில தினங்களுக்கு முன்பு ஒரு செய்தி நமக்கு பிரத்யேகமாக கிடைத்தது... ராகுல் காந்தியின் அழைப்பை ஏற்று, கமல்ஹாசன் நடத்திய ஒற்றுமை யாத்திரையில் கலந்து கொண்டார் கமல்... இந்த சம்பவம் அரசியல் ரீதியாக பரபரப்பாக பேசப்பட்டது.

இதனிடையே, யாத்திரைக்கு பிறகு ராகுலும் கமலும் தனிப்பட்ட முறையில் சந்தித்து விவாதித்தனர்... அந்த சந்திப்பில், "காங்கிரஸ் கூட்டணிக்குள் நீங்கள் வரவேண்டும்" என்று கமலிடம் ராகுல் கோரிக்கை வைத்திருக்கிறார்.

 ராகுல் அலை

ராகுல் அலை

அதை ஆமோதித்த கமல்,"திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்காதா?" என்று கேட்டதற்கு, "திமுக அலையன்சில் இருந்து விலகும் யோசனை நமக்கில்லை. ஆனால், அப்படிப்பட்ட சூழலை திமுக உருவாக்கும் என எனக்கு சந்தேகம்" என்றிருக்கிறார் ராகுல். அதற்கு கமல், "திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கும் பட்சத்தில் நான் எப்படி உங்கள் கூட்டணிக்கு வரமுடியும்? " என்று கேட்க, "திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருந்தாலும் காங்கிரஸுக்கு ஒதுக்கும் சீட்டுகளில் உங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அதற்கேற்ப திமுகவிடம் பேசுவோம்" என்று ராகுல் சொல்லி உள்ளார்.

ஆஃபர்

ஆஃபர்

அதற்கு கமல், "காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைந்தால் உங்களுடன் கைக்கோர்க்க தயார். மற்றதெனில் யோசிக்க வேண்டும்" என்று தெளிவுப்படுத்தியிருக்கிறார்... இதனையடுத்து, திமுக கூட்டணியில் நடக்கும் சில ரகசியங்கள், காங்கிரசுக்குஅதிமுக வைக்கும் ஆஃபர் என பல விஷயங்களை கமலிடம் பகிர்ந்து கொண்டாராம் ராகுல். ஆக மொத்தம் திமுக கூட்டணியில் கமல் இடம்பெறக்கூடும் என்றே தெரிகிறது.. அப்படி கூட்டணியில் இடம்பெறும் பட்சத்தில் கமலுக்கு எத்தனை சீட், எத்தனை தொகுதி ஒதுக்க வாய்ப்புள்ளது என்ற அலசல்களும் கிளம்பி உள்ளன..

சுதீஷ்

சுதீஷ்

கமல் 3 சீட்டுகளை கேட்டு வரும் நிலையில், ஒரு எம்பி சீட் மட்டுமே ஒதுக்கலாம் என்கிறார்கள்.. இதற்கு காங்கிரஸின் தலையில்தான் கை வைக்க போகிறார்களாம்.. அதாவது, கடந்த முறை மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிய 10 இடங்களை குறைத்து, அதில் ஒன்று கமலுக்கும், இன்னொன்று தேமுதிகவிற்கும் ஒதுக்க போகிறார்களாம்.. அதுமட்டுமல்ல, தென் சென்னை அல்லது ராமநாதபுரத்தில் கமல் போட்டியிட முடிவு செய்து இருப்பதாகவும், கள்ளக்குறிச்சி தொகுதியில் சுதீஷ் போட்டியிடும் வகையில், கூட்டணி பங்கீடு நடத்த ஆலோசிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

 10 சீட்டுக்களா?

10 சீட்டுக்களா?

கடந்த முறை திடுதிப்பென்று 10 சீட்டுகளை திமுக அள்ளி கொடுத்துவிட்டது.. ஆனால், இந்த முறை அந்த அளவுக்கு சீட் ஒதுக்கீடு இருக்காது, பெரும்பாலும் திமுக தரப்பிலேயே போட்டியிடக்கூடும் என்ற பேச்சு சில மாதங்களாகவே எழுந்து வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில்தான், தேமுதிக, கமலின் கூட்டணி என்ட்ரி நடந்து வருகிறது.. ஒருவேளை இவர்கள் கூட்டணிக்குள் வருகை தந்தால், காங்கிரசுக்கு சீட்டை குறைத்துவிட்டு, இவர்களுக்கு சீட் வழங்கப்படலாம் என்கிறார்கள்.

 அலை அலையாய்

அலை அலையாய்

ஆனால், காங்கிரஸ் இதற்கு ஒப்புக்கொள்ளுமா தெரியவில்லை.. காங்கிரஸ் இல்லாமல் திமுகவால் வெற்றி பெற முடியாது, கடந்த முறையைவிட, இந்த முறை அதிக தொகுதிகளை கேட்டு பெறுவோம் என்று கேஎஸ் அழகிரி இப்போதே சொல்ல ஆரம்பித்துவிட்ட நிலையில், கூட்டணி பேரம் என்னாகுமோ தெரியவில்லை.. காங்கிரஸ் பக்கம், எடப்பாடியின் ஆதரவு அலையும் மறைமுகமாக அடித்து கொண்டிருப்பதையும் திமுக கவனிக்காமல் இல்லை.. அதேசமயம், காங்கிரஸ் இல்லாமலும் தேர்தலை திமுக எதிர்கொள்ள முடியாது.. நேற்றைய தினமும்கூட, ராகுல் காந்தியை பற்றி முதல்வர் ஸ்டாலின் பேசிய பேச்சு பாஜகவின் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

 சபாஷ் ராகுல்

சபாஷ் ராகுல்

ராகுல்காந்தி தன்னுடைய கொள்கையில் உறுதியாக இருக்கிறார், நாட்டில் வேற்றுமையில் ஒற்றுமை பண்பை வலியுறுத்துகிறார், மத வேறுபாட்டை கண்டிக்கிறார்.. ஒரே மொழி என்பதை எதிர்க்கிறார்... பாஜகவை தேர்தலுக்காக மட்டுமல்லாமல், கொள்கை ரீதியாகவும் ராகுல் எதிர்க்கிறார்... இது ராகுல் காந்தியின் வலிமையை பறை சாற்றுகிறது என்று கூறி பெருமைப்படுத்தி உள்ளார்.. அந்த வகையில், பிரதமர் வேட்பாளராகவே ராகுலை, ஸ்டாலின் முன்மொழிந்து வரும்நிலையில், காங்கிரஸை தவிர்க்க முடியாது.. அதேசமயம், தமிழக காங்கிரசுக்கு 10க்கும் குறைவான சீட்டுக்களை ஒதுக்கவே வாய்ப்புள்ளதாகவும் சொல்கிறார்கள்.. என்ன நடக்க போகிறது? பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+