டோட்டலாக மனசு மாறிய மம்தா! ஸ்டாலினை பின்பற்ற முடிவு? தேசிய அரசியலில் பயங்கர ட்விஸ்ட்! திமிறும் திமுக
சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் முன்னெடுத்த முக்கியமான திட்டம் ஒன்றை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆதரித்து உள்ளார்.
நான் தேசிய அரசியலில்தான் இருக்கிறேன்.. தேசிய அரசியல்தான் செய்து கொண்டு இருக்கிறேன் என்று சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறி இருந்த நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாக முதல்வர் ஸ்டாலினின் தேசிய அளவிலான திட்டம் ஒன்றை அச்சு பிசகாமல் பின்பற்றி இருக்கிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
சமீபத்தில் குடிமைப்பணி பயிற்சி பெற்றவர்கள் முன்னிலையில் பேசிய ஆளுநர் ஆர். என் ரவி, சட்டசபையில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் நிலுவையில் வைத்தால் அதற்கு நாகரீகமாக ஒப்புதல் தரவில்லை என்பதே பொருள். கிடப்பில் கிடந்தால் அந்த சட்டம் இறந்துவிட்டதாகவே பொருள் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார்.

தீர்மானம்: இந்த நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகள் எதிர்த்து முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் தனித்தீர்மானம் தாக்கல் செய்து அதை நிறைவேற்றினார்.
சட்டசபை மசோதாக்களை டெல்லிக்கு அனுப்ப கால நிர்ணயம் செய்தல், ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவோடு இந்த தீர்மானம் வெற்றிபெற்றது. 144 உறுப்பினர்களிடம் ஆதரவோடு இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
சட்டசபை மசோதாக்களை டெல்லிக்கு அனுப்ப கால நிர்ணயம் செய்தல், ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து இந்த தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இதனால் உடனே வழிக்கு வந்த ஆளுநர் ரவி, ஆன்லைன் ரம்மி மசோதாவிற்கு அளித்தார். இதனால் உடனடியாக அந்த மசோதாவும் சட்டம் ஆனது.
கடிதம்: பாஜக ஆளாத மேற்கு வங்கம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் எல்லாம் ஆளுநருக்கும் - அரசுக்கும் கடும் மோதல் உள்ளது. தெலுங்கானாவில் தமிழிசை - கேசிஆர் இடையிலும், கேரளாவில் ஆரிப் கான் - பினராயி இடையிலும் என்று டெல்லி, பீகார், மேற்கு வங்கம் என்று பல்வேறு மாநிலங்களில் ஆளுநர்களுக்கும் முதல்வர்களுக்கும் இடையில் மோதல் உள்ளது.
தெலுங்கானாவில் ஆளுநருக்கு எதிராக முதல்வர் கே சந்திரசேகர ராவ் வழக்கு போடும் அளவிற்கு நிலைமை மோசமாகி உள்ளது.
இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் பாஜக ஆளாத மாநில முதல்வர்களுக்கு இதே தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கடிதம் எழுதி உள்ளார். பல்வேறு மாநில முதல்வர்கள் ஆளுநர் மீது கடுப்பில் உள்ள நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் இந்த கடிதத்தை எழுதி உள்ளார். தமிழ்நாட்டில் ஆளுநருக்கு எதிராக ஸ்டாலின் நிறைவேற்றிய தீர்மானம் உடனே வென்ற நிலையில், ஆளுநரும் ரம்மி நீக்க மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தார்.
அதேபோல் மற்ற மாநிலங்களிலும் ஆளுநரை வழிக்கு கொண்டு வர, பின்னர் தேசிய அளவில் ஆளுநரை எதிர்க்க வசதியாக இருக்கும் என்றும் முதல்வர் ஸ்டாலின் இந்த கடிதத்தை எழுதி உள்ளார்.
ஸ்டாலினின் இந்த கோரிக்கையை சமீபத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்றுக்கொண்டு இதே தீர்மானத்தை நிறைவேற்றுவதாக கூறினார்.
இதையடுத்து ஸ்டாலினின் இந்த கோரிக்கையை கேரள முதல்வர் பினராயி விஜயனும் ஏற்றுக்கொண்டு இதே தீர்மானத்தை நிறைவேற்றுவதாக கூறி உள்ளார்.

மம்தா: இதில் புதிய திருப்பமாக மம்தா பானர்ஜியும் இதே தீர்மானத்தை கொண்டு வரப்போவதாக அறிவித்து உள்ளார். ஜனநாயக விரோதமாக செயல்படும் ஆளுநர்களுக்கு பாடம் எடுக்க வேண்டும். அவர்களுக்கு எதிரான முயற்சிக்கு ஆதரவையும் பாராட்டையும் தெரிவிக்கின்றேன் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கடந்த சில காலமாக ஸ்டாலினுடன் பெரிதாக நெருக்கமின்றி காணப்பட்டார் மம்தா பானர்ஜி. முக்கியமாக ஸ்டாலினுடன் காங்கிரஸ் நெருக்கமாக இருப்பதாலும் ஸ்டாலினுடமும் கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கத்தை தவிர்த்து வருகிறார் மம்தா.
கடந்த இரண்டு முறையும் முதல்வரின் பிறந்தநாள் விழாவிற்கு மம்தா வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தேசிய அளவில் காங்கிரசை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்ற ஸ்டாலினின் பிளானுக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசி இருந்தார்.
காங்கிரசுடன் மெகா கூட்டணி அமைக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறிய நிலையில், லோக்சபா தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தனியாக போட்டியிடும். நாங்கள் காங்கிரசுடன் கூட்டணி வைக்காமல் மக்களுடன் கூட்டணி வைப்போம். காங்கிரஸ், பாஜக எல்லாம் ஒன்றுதான். அதனால் அவர்களுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று மம்தா கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இதனால் ஸ்டாலின் - மம்தா இடையே கருத்து வேறுபாடு இருக்கும் என்று கருதப்பட்ட நிலையில்தான் தற்போது மம்தா இறங்கி வந்து ஸ்டாலினின் முன்னெடுப்பை ஆதரித்துள்ளார்.
ஸ்டாலினின் இந்த கோரிக்கை தேசிய அளவில் தற்போது கவனம் பெற தொடங்கி உள்ளது.
-
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
இந்தியா மட்டுமல்ல.. ஒட்டு மொத்த தெற்கு ஆசியாவுக்கும் குரல் கொடுத்த மோடி! ஜி7 மாநாட்டில் மாஸ் பேச்சு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ்












Click it and Unblock the Notifications