சோலார் கரண்ட்டில் ட்விஸ்ட்.. 110 விண்ணப்பம் குவிந்தாலும், சூரிய மின்சார திட்டத்தில் வந்த 2 சிக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் சூரிய மின்சார உற்பத்தியை அதிகரிக்க அரசு புதிய முயற்சியை எடுத்துள்ளது. இதற்காக தொடங்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்ப முறைக்கு வெறும் 2 வாரங்களிலேயே 110 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதன் மூலம் 3,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த திட்டங்களை செயல்படுத்துவதில் சில முக்கிய சிக்கல்கள் உள்ளன. அவை என்ன தெரியுமா?

நம்முடைய தமிழகத்தில் மின்சார தேவையை சமாளிக்க சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பதை அரசு ஊக்குவித்து வருகிறது. வீடுகள், நிறுவனங்கள் மற்றும் காலி இடங்களில் சூரிய ஒளித் தகடுகளை அமைத்து மின்சாரம் தயாரிக்கலாம்.

Solar Power

தமிழக அரசு அதிரடி

இதற்காகவே மேற்கூரை சூரிய மின்சாரத் திட்டங்களுக்கும் அரசு வழிவகை செய்துள்ளது. இப்படி தயாரிக்கப்படும் மின்சாரத்தை பயன்படுத்துவதன் மூலம் வழக்கமான மின்சாரத்தின் தேவையைக் குறைக்க முடியும்...

அதுமட்டுமல்ல, இந்த திட்டங்களை மேலும் அதிகரிக்கும் வகையில் தமிழக அரசு புதிய இணையவழி விண்ணப்ப முறையையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி தொடங்கிய இரண்டு வாரங்களிலேயே 110 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதன் மூலம் 3,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த இலக்கை எட்டுவதில் சில சவால்களும் உள்ளன.

வீடுகள், நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பதை ஊக்குவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக, கட்டடங்களின் மேற்கூரைகளில் சூரிய ஒளித் தகடுகளை அமைத்து மின்சாரம் தயாரிக்கும் திட்டங்களும் இதில் அடங்கும்.

சூரிய ஒளி மூலம் மின்சாரம்

இதற்காக தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் சார்பில் இணையவழி ஒற்றைச்சாளர விண்ணப்ப முறை கடந்த 3ம் தேதி தொடங்கப்பட்டது. இதன் மூலம் சூரிய மின்சாரத் திட்டங்கள் மற்றும் மேற்கூரை சூரிய மின்சாரத் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த வசதி தொடங்கிய இரண்டு வாரங்களுக்குள் சுமார் 110 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இந்த விண்ணப்பங்கள் மூலம் மொத்தம் 3,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

குவியும் விண்ணப்பங்கள்

கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2026ம் ஆண்டு ஏப்ரல் வரை தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சூரிய மின்சார உற்பத்தித் திறன் 1,887.65 மெகாவாட் மட்டுமே. ஆனால், இப்போது இரண்டு வாரங்களிலேயே இதைவிட அதிக மின்சாரம் தயாரிக்கும் திறன் கொண்ட திட்டங்களுக்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன.

இந்த விண்ணப்பங்களை அதிகாரிகள் ஆய்வு செய்ய போகிறார்களாம். இதற்காக சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கோவை ஆகிய 5 மண்டலங்களில் அதிகாரிகள் கள ஆய்வு நடத்த உள்ளனர். திட்டங்கள் அமைக்கப்படும் இடங்களில் நேரடியாக ஆய்வு செய்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

சிக்கல்கள் என்னென்ன

ஆனாலும், புதிய திட்டங்களை செயல்படுத்துவதில் ஒரு பெரிய சிக்கல் உள்ளது. சூரிய ஒளி மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தை வீடுகளுக்கும் மற்ற இடங்களுக்கும் கொண்டு செல்ல துணை மின் நிலையங்களும் மின்பாதைகளும் தேவை. இவற்றை புதிதாக அமைப்பதில் இப்போது சிக்கல் நீடிக்கிறது.

ஏனென்றால் மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகள் அமைக்க விவசாயிகளும் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.. குறிப்பாக, மேற்கு மாவட்டங்கள் மற்றும் காவிரி டெல்டா பகுதிகளில் இந்த எதிர்ப்பு அதிகமாக உள்ளது. இதன்காரணமாக புதிய சூரிய மின்சாரத் திட்டங்களை விரைவாக செயல்படுத்த முடியாத நிலைமை ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது..

அதனால் தேவையான மின்கட்டமைப்பு வசதிகளை அரசு விரிவுபடுத்த வேண்டும் என்றும், அதேபோல், மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகள் அமைப்பதால் ஏற்படும் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்துள்ளன. இந்த 2 பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்தால் மட்டுமே புதிதாக விண்ணப்பிக்கப்பட்டுள்ள 3,000 மெகாவாட் சூரிய மின்சாரத் திட்டங்களை விரைவாக செயல்படுத்த முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+