Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சல்லி சல்லியாக நொறுங்கிய "கணக்கு".. எப்படி இருந்த காங்கிரஸ்.. வெறும் 2 மாநிலங்களில் மட்டுமே ஆட்சி!

பாஜக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை உயர போகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்றைய 5 மாநலி தேர்தல் ரிசல்ட் வெளிவந்து வரும் நிலையில், பாஜக பெருவாரியான வெற்றியை பெற்று, தான் நேரடியாக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வருகிறது.. அதேசமயம், காங்கிரஸின் பலம் மாநிலங்களில் குறைந்து வருகிறது.

Recommended Video

    UP Election Result | இதுவரை நடந்ததே இல்லை.. பாஜக-வுக்கு வரலாற்று வெற்றியை பெற்று கொடுத்த யோகி ஆதித்யநாத்

    டெல்லியைத் தாண்டி தற்போது பஞ்சாப் மாநிலத்தையும் ஆம் ஆத்மி தனது வசமாக்கி தனது கட்சியை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

    உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மாநிலங்களிலும் பாஜக முன்னிலை வகிக்கிறது.. உபியின் 403 தொகுதிகளில் பாஜக 257 இடங்களிலும், சமாஜ்வாதி 122 இடங்களிலும் பகுஜன் சமாஜ் 8 இடங்களிலும், காங்கிரஸ் 5 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது..

    பாஜக

    பாஜக

    ஆட்சியை பிடிக்க 202 இடங்கள் தேவைப்படும் நிலையில், பாஜக கூடுதலான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.. இதன்மூலம் பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைப்பது உறுதியாகி உள்ளது. அதேபோல, 70 தொகுதிகள் உத்தரகாண்ட்டிலும் பாஜகவே முன்னிலை பெற்றுள்ளது.. 44 இடங்களில் பாஜகவும், 21 இடங்களில் காங்கிரசும், ஆம் ஆத்மி ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கிறது.. இங்கு ஆட்சியை பிடிக்க 36 இடங்கள் தேவைப்படும் நிலையில், பாஜக முன்னிலை வகித்து வருகிறது.. இதையடுத்து இங்கும் பாஜகவே ஆட்சியை தொடர போகிறது.

    லீடிங்

    லீடிங்

    இதேபோல, 117 தொகுதிகள் கொண்ட பஞ்சாப்பில் ஆம் ஆத்மி முன்னிலை வகித்து வருகிறது.. ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய ஒரு மணி நேரத்திலேயே லீடிங்கில் சென்றுவிட்டது ஆம் ஆத்மி.. இங்கு ஆளும் மாநில காங்கிரஸ் கட்சியை மண்ணை கவ்வ செய்துள்ளது.. ஆக, பாஜக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை உயர்கிறது, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை குறைகிறது.. அது என்னவென்று பார்ப்போம்..!

    பாஜக வளர்ச்சி

    பாஜக வளர்ச்சி

    கடந்த 2014-ல் இருந்து பாஜக தன்னுடைய கட்சியை அபாரமாக வளர்க்க ஆரம்பித்தது.. டிஜிட்டல் முறையில் தன்னுடைய அரசியலை மக்களிடம் கொண்டு சென்றது.. நவீனத்துவப்படுத்தியது.. புது புது திட்டங்களை கையில் எடுத்தது.. ஊழல் புகார்களை இல்லாமல் பார்த்து கொண்டது.. மாநிலங்களில் கட்சியை பலப்படுத்தியது.. பொறுப்பாளர்களை பலம் வாய்ந்தவர்களாக நியமித்தது. ஆனால் இதற்கெல்லாம் முழுக்க முழுக்க சோஷியல் மீடியாவையே அதிகம் நம்பியது..

    18 மாநிலங்கள்

    18 மாநிலங்கள்

    இதன்விளைவு, அருணாச்சல பிரதேசம், கோவா, குஜராத், ஹிமாச்சல் பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடித்தது.. இதைதவிர, அசாம், பிகார், ஹரியானா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, புதுச்சேரி, சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆட்சியும் நடந்து கொண்டிருக்கிறது... ஆக, ஒட்டுமொத்தமாக பார்த்தால், 18 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் பாஜக ஆட்சி நடக்கிறது...

    மணிப்பூர்

    மணிப்பூர்

    கூட்டணி ஆட்சி என்பதில் இருந்து விலகி, தனித்து போட்டியிடும் அளவுக்கு பாஜக மணிப்பூரில் வளர்ந்துள்ளது.. இப்படி ஒவ்வொரு முறை தேர்தலிலும் பாஜகவின் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகும் நிலையில், காங்கிரஸோ இதற்கு நேர் எதிராக உள்ளது... சட்டீஸ்கர், பஞ்சாப் மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் உள்ளது.. ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கூட்டணி ஆட்சியில் உள்ளது..

     முதல்வர்கள்

    முதல்வர்கள்

    இவற்றில் நேரடியாக, சட்டீஸ்கர், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் முதல்வர்களே பதவியில் உள்ளனர்.. இந்த எண்ணிக்கைதான் இன்று பறிபோயுள்ளது.. பஞ்சாப்பை ஆம் ஆத்மி தட்டிதூக்கிவிட்டது.. அதன்படி, காங்கிரஸ் அந்த கட்சியிடம் நாற்காலியை பறிகொடுத்துவிட்டது.. ஆக மொத்தம் நேரடியாக ஆள்வது 2 மாநிலங்களில்தான்.

    பாஜக

    பாஜக

    இதில் காங்கிரஸ் கூட்டணி என்று பார்த்தால், மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டையும் இணைத்து கொள்ளலாம்.. தமிழகத்தை பொறுத்தளவில் காங்கிரஸ் தயவு இல்லாவிட்டாலும், ஆட்சி நடத்த திமுகவால் முடியும். எனவே இதை முழு கூட்டணி ஆட்சி என்றும் கூறிவிட முடியாது. பீகார் சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு நிறைய இடங்கள் ஒதுக்கப்பட்டன.. ஆனாலும் பிரதான வெற்றியை பெற முடியாமல் போனது. ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி ஆட்சியை பிடிக்க முடியாமல் போனதற்கு காங்கிரஸ் சொதப்பியது காரணம் என்ற குற்றச்சாட்டும் உண்டு. புள்ளி விவரம் அப்படித்தான் கூறுகிறது.

    தமிழகம்

    தமிழகம்

    அதேசமயம், வட மாநிலங்களில் பலவற்றில் அரசியல் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் பாஜகவுக்கு தமிழகம் என்றுமே தோல்வி முகத்தை காட்டி கொண்டே இருக்கிறது. எனவே திமுகவுடன் காங்கிரஸ் இருக்கும்வரை தமிழகத்தில் தப்பித்துவிடும் என்பதையும் மறுக்க முடியாது..!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+