கூடுவாஞ்சேரியில் பெண்ணை துண்டாக்கி பிரியாணி அண்டாவில் மைதா மாவு, காய்கறி சேர்த்து சமைத்த கொடூரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆக்ரா ரயிலில் பெண்ணின் உடல் பாகங்கள் அடங்கிய சூட்கேஸை வைத்துவிட்டு சென்றவர்களின் கூடுவாஞ்சேரி வீட்டை சென்று பார்த்த போது பிரியாணி அண்டாவில் மனித சதைகள் இருந்ததும் அதை சமைத்திருந்ததும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த கொலை வழக்கில் தொடர்புடைய ஆண், பெண்ணை போலீஸார் தேடி வருகிறார்கள்.

சென்னையிலிருந்து உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 5ஆம் தேதி ஆக்ராவுக்கு சென்றது. அப்போது ஒரு பொதுப் பெட்டியில் கடும் துர்நாற்றத்துடன் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு சூட்கேஸ் இருந்தது.

Agra train suitcase

இதையடுத்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்து சூட்கேஸை திறந்து பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது. அதில் அழுகிய நிலையில் மனித உடல்பாகங்கள் இருந்தன.

இதையடுத்து ஆக்ரா போலீஸார், ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தினர். சடலம், சூட்கேஸ் தொடர்பான தடயங்களை வைத்து இந்த சூட்கேஸ் சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்டதை கண்டறிந்தனர்.

இதையடுத்து தமிழக போலீஸாரின் உதவியுடன் உத்தரப்பிரதேச மாநில போலீஸார் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், அதை சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

நீண்ட நேரம் தேடுதலுக்கு பிறகு, அப்போது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குள் சிவப்பு நிற சூட்கேஸுடன் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஆக்ரா செல்லும் ரயிலில் சூட்கேஸை வைத்துவிட்டு சென்னை - பூங்கா ரயில் நிலையத்தில் இருந்து கூடுவாஞ்சேரி நோக்கி சென்ற மின்சார ரயிலில் சென்றது தெரியவந்தது.

Agra train suitcase

இதையடுத்து கூடுவாஞ்சரி ரயில் நிலையம், அதன் சுற்று வட்டார பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களையும் போலீஸார் ஆய்வுக்குள்ளாக்கினர். அதில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பார்த்த அதே ஆணும் பெண்ணும் சூட்கேஸுடன் வந்தது சிசிடிவியில் பதிவாகியிருந்தது.

இதையடுத்து அந்த இருவரும் யார், அவர்கள் எங்கிருந்து வந்தார்கள். மீண்டும் எங்கு சென்றனர், சடலம் யாருடையது, சடலத்திற்கும் அந்த ஆண், பெண்ணுக்கும் என்ன சம்பந்தம் உள்ளிட்டவை குறித்தெல்லாம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் இருவரும் கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் இருந்து ஆட்டோவில் ஏறி மசூதி தெருவுக்கு சென்ற காட்சிகளும் போலீஸாருக்கு கிடைத்தன. இதையடுத்து அந்த ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரணை நடத்தியதில் அந்த இருவரையும் எந்த வீட்டின் முன்பு இறக்கி விட்டார் என்பதை கூறிவிட்டார்.

இதையடுத்து போலீஸார் அந்த வீட்டிற்கு சென்ற போது அந்த வீடு பூட்டப்பட்டிருந்தது. அக்கம் பக்கத்தினரிடம் வீடு பூட்டப்பட்டிருப்பது குறித்து விசாரித்த போது அந்த இருவரும் யாருடனும் தொடர்பில் இல்லாதது தெரியவந்தது.

இதையடுத்து பூட்டை உடைத்து உள்ளே சென்ற போலீஸார் அங்கு சோதனை மேற்கொண்டனர். வீட்டில் அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. யாரையோ கொலை செய்ததற்கான ஆதாரங்கள் அங்கு கிடைத்தன.

கொலை செய்துவிட்டு உடலை மறைக்க உடலை துண்டித்து அதில் எலும்புகளை தனியாக பிரித்து சூட்கேஸில் அடைத்து ரயில் மூலம் ஆக்ராவுக்கு அனுப்பியிருப்பது தெரியவந்தது.

மீதமிருந்த உடல் பாகங்களை அழித்து தடயங்களை மறைக்க பெரிய பாத்திரத்தில் மைதா மாவு, காய்கறிகளுடன் சேர்த்து சமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதும் தெரியவந்தது.

மேலும் அது பெண்ணின் உடல் என்றும் தெரியவந்தது. அந்த பெண்ணின் தலை பாகம் இதுவரை கிடைக்கவில்லை. பெண்ணின் தலையை போலீஸார் தேடி வருகிறார்கள்.

இதையடுத்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தியதில் அந்த வீட்டில் இரு பெண்களும் ஒரு ஆணும் தங்கியிருந்தனராம். அவர்களில் ஆணும் பெண்ணும் சேர்ந்து இன்னொரு பெண்ணை கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.

இந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண், ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த ஹயாத் நிஷா என தெரியவந்தது. அவர் தாம்பரம் அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் மகன் தாம்பரம் பகுதியில் ஏசி மெக்கானிக்காக பணியாற்றி வருகிறாராம். அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது தனது தாய் தொடர்பான விவரங்களையும் அவருக்கு யாருடன் பழக்கம் உள்ளிட்டவைகளையும் அந்த இளைஞர் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. மேலும் தாயுடன் தங்கியிருந்தவர்கள் யார் என்பதையும் அந்த இளைஞரிடம் போலீஸார் கேட்டனராம்.

இந்த நிலையில் போலீஸார் அந்த பெண்ணின் தலையை தேடி வருகிறார்கள். அது போல் தலைமறைவாக இருக்கும் அந்த ஆண், பெண் இருவரையும் போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். கூடுவாஞ்சேரியில் ஒரு பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த பெண்ணை ஏன் கொலை செய்தார்கள் என்பது குறித்து அந்த இருவரும் கிடைத்தால்தான் தெரியவரும். தலைமறைவானவர்கள் பகபதி மாஜி, மாணிக் லஸ்கர் என்பது தெரியவந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+