கைதிகளின் பற்களை கொடூரமாக பிடுங்கிய போலீஸ் அதிகாரி பல்வீர் சிங்.. மனித உரிமைகள் ஆணையம் வழக்குப்பதிவு
சென்னை : அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியாக பணியாற்றிய பல்வீர் சிங், விசாரணை கைதிகளின் பற்களை ஜல்லி கற்களால் அடித்துப் பிடுங்கி சித்ரவதை செய்ததாக எழுந்த புகாரில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.
விசாரணை கைதிகளை மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பல்பீர் சிங், கொடூரமாக தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. சுமார் 10 பேரின் பற்களை கல்லால் அடித்தும், இடுக்கியை பயன்படுத்தியும் பிடுங்கியதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் குறித்து 6 வாரத்தில் விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்ய மனித உரிமைகள் ஆணைய ஐ.ஜிக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் பல்வீர் சிங். 2020 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான பல்வீர் சிங் அம்பாசமுத்திரத்தில் கடந்தாண்டு ஆகஸ்ட் முதல் ஏ.எஸ்.பியாக பணியாற்றி வந்தா. இவர் அங்கு பொறுப்பேற்ற பிறகு அம்பாசமுத்திரம் பகுதியில் சிறிய குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்களை விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவர்களது பற்களை கல்லால் அடித்தும், இடுக்கியை பயன்படுத்தியும் பிடுங்கித் துன்புறுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

கொடூர தண்டனை
சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்ட பத்துக்கும் மேற்பட்டோருக்கு ஏஎஸ்பி பல்வீர் சிங் இவ்வாறு பற்களை கல்லால் தட்டி உடைத்தும், வாயில் ஜல்லிக்கற்களை வைத்திருக்கச் சொல்லி, முகத்தில் அடித்து பற்களை உடைத்தும் மிகக் கொடூரமான முறையில் தண்டனை அளித்ததாவும், மேலும் சிலருக்கு அவர்களது அந்தரங்க உறுப்பைப் பிடித்து நசுக்கியும், பூட்ஸ் காலால் நெஞ்சில் மிதித்தும் கடுமையாகத் துன்புறுத்தியதாகவும், ஏஎஸ்பி பல்வீர் சிங்கின் கொடுமைகளால் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் கூறப்படுகிறது.

வெளிவந்த பயங்கரம்
கடந்த சில நாட்களுக்குமுன் ஜமீன் சிங்கம்பட்டியை சேர்ந்த சூர்யா என்பவரை, அப்பகுதியில் கண்காணிப்பு கேமராவை உடைத்து பிரச்சனை செய்ததாக போலீசார் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அவரது பற்களை ஏஎஸ்பி பல்வீர் சிங் பிடுங்கி எடுத்தாக புகார் எழுந்தது. தன்னைப்போலவே, ஏஎஸ்பி பல்வீர் சிங் பலரின் பற்களை பிடுங்கிவிட்டதாக சூர்யா குற்றம்சாட்டிய நிலையில், வேறு சில இளைஞர்களும் இது தொடர்பாக புகார் தெரிவித்தனர். இது தொடர்பான தகவல் சமூக வலைதளங்களிலும் பரவியது.

தீவிர அழுத்தம்
பற்களை பிடுங்கி தண்டனை அளிக்கும் ஏஎஸ்பி பல்வீர் சிங், கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளர் ராஜகுமாரி, சிறப்பு உதவி ஆய்வாளர் ராமலிங்கம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து இந்த சர்ச்சை தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலத்துக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

மனித உரிமை ஆணையம்
இதற்கிடையே, ஏஎஸ்பி பல்வீர் சிங்கை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி காவல் துறை தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்தப் புகார் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணை பிரிவு ஐஜி, 6 வாரத்திற்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆணைய தலைவர் பாஸ்கரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications