வரலாறு திரும்புது.. தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தொங்கு சட்டசபை? யாருக்கும் கிடைக்காத மெஜாரிட்டி!
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில் திமுக தொங்கு சட்டசபை அமைத்தது. இந்த நிலையில் கட்சியை ஆரம்பித்து இரண்டாவது வருடத்திலேயே விஜய் தொங்கு சட்டசபையை அமைப்பார் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
தமிழ்நாட்டில் நீண்ட காலமாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளே மாறி மாறி ஆட்சி செய்து வந்துள்ளன. ஆனால் இந்த முறை அந்த பாரம்பரிய அரசியல் கணக்குகள் முற்றிலும் மாறும் சாத்தியம் உருவாகியுள்ளது. அதற்குக் காரணமாக பார்க்கப்படுவது தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதன் தலைவர் விஜய்.

கட்சியைத் தொடங்கி மிகக் குறுகிய காலத்திலேயே தமிழக வெற்றிக் கழகம் பல தொகுதிகளில் முன்னிலை வகிப்பது, தேர்தல் முடிவுகளை கணிக்க முடியாத நிலையை உருவாக்கியுள்ளது. ஆரம்ப கட்ட நிலவரங்களில், இந்தக் கட்சி முக்கியமான சக்தியாக மட்டுமல்லாமல், ஆட்சியை அமைக்கும் கட்சியாக மாறும் வாய்ப்பும் அதிகமாக உள்ளது.
இது போன்ற சூழல் தமிழ்நாட்டில் புதிதல்ல. 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் எந்தக் கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்காமல், கருணாநிதி தலைமையில் திமுக, கூட்டணி கட்சிகளுடன் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், அப்போது ஆட்சியில் பங்கு தரப்படவில்லை. இந்நிலையில், இந்த முறையும், தேர்தல் முடிவுகள் எந்த கட்சிகள் தனிப் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், கூட்டணி கட்சிகளின் ஆதரவு மிக முக்கியம்.
தற்போதைய நிலவரப்படி, தமிழக வெற்றிக் கழகம் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. குறிப்பாக நகர்ப்புற மற்றும் இளைஞர் வாக்காளர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் இந்தக் கட்சிக்கு நல்ல ஆதரவு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அடுத்த அரசு அமைப்பதில் இந்தக் கட்சி "கிங் மேக்கர்" ஆக மாறும் சாத்தியம் அதிகம்.
அதே நேரத்தில், சில தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி நிலவுவதால், இறுதி எண்ணிக்கைகள் எவ்வாறு அமையும் என்பது இன்னும் தெளிவாகவில்லை. ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையிலும் நிலைமை மாறிக் கொண்டே இருப்பது பரபரப்பை அதிகரித்துள்ளது.
மொத்தத்தில் பார்க்கும்போது, 2026 தேர்தல் தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியத்தைத் திறக்கும் வகையில் உள்ளது. ஆனால், தற்போதைய சூழலில் இறுதி முடிவுகள் வெளியாகும் வரை அரசியல் த்ரில்லர் தொடரும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications