"மறக்க முடியல".. முரண்டு பிடித்த கஸ்தூரி.. கெஞ்சிய கண்ணன்.. கடைசியில் ஒரே போடு.. தென்காசி ஷாக்!
மனைவியை கொன்ற கணவர் கைதானார்
சென்னை: பழைய காதலனை என் மனைவியால் மறக்க முடியவில்லை எவ்வளவோ சொல்லியும் என் மனைவி முரண்டு பிடித்ததால் வேறு வழியில்லாமல் இப்படி செய்துவிட்டேன் என்று, கணவர் போலீசில் வாக்குமூலம் தந்துள்ளார்.
தென்காசி மாவட்டம் கேசவபுரம் அருகேயுள்ளது கீழப்புதூர் என்ற பகுதி.. இங்கு வசித்து வந்தவர் தான் கஸ்தூரி.. 20 வயது இளம்பெண்..
இவருக்கும் புளியங்குடியைச் சேர்ந்த 38 வயதான கண்ணன் என்பவருக்கும் 7 மாசங்களுக்கு முன்புதான் கல்யாணம் நடந்தது.. கண்ணனுக்கு இது 2வது கல்யாணம்.. முதல் மனைவி இவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டாராம்.. ஆனால், இந்த கல்யாணத்தில் கஸ்தூரிக்கு ஆரம்பத்தில் இருந்தே விருப்பம் இல்லை போல தெரிகிறது..

தகராறு
அதனால், அடிக்கடி தகராறுகள், சண்டைகள் நடந்து கொண்டே இருந்தது.. இறுதியில் வெறுப்படைந்த கஸ்தூரி அடிக்கடி கோபித்து கொண்டு கீழப்புதூரில் உள்ள தன்னுடைய பாட்டி வீட்டிற்கு போய்விடுவாராம். அப்படித்தான், 10 நாளைக்கு முன்பு, பாட்டி வீட்டிற்கு வந்துவிட்டார் கஸ்தூரி.. அவரை சமாதானம் செய்து அழைத்து வர பாட்டி வீட்டிற்கு போனார் கண்ணன்... ஆனால், கஸ்தூரி வேலைக்கு போயிருப்பதாகவும், வீட்டிற்கு திரும்பி வந்ததும், அனுப்பி வைப்பதாகவும் கஸ்தூரியின் பாட்டி சொன்னார்..

பாட்டி
இதை கேட்டதும், கொஞ்ச நேரம் அங்கேயே காத்திருந்த கண்ணன், பிறகு திடீரென பைக் எடுத்து கொண்டு கிளம்பிவிட்டார். புளியரை சாலையில், 2 லாரிகள் நின்றிருந்தன.. அந்த லாரிகளுக்கு பின்னால் பைக்குடன் ஒளிந்து கொண்டார். அந்த வழியாகத்தான் கஸ்தூரி வேலை முடிந்து நடந்து வருவார்.. எதிர்பார்த்தபடியே கஸ்தூரி வந்து கொண்டிருந்தார்.. அப்போது, பைக்கால் அவரை மோதிவிட்டு, கீழே தள்ளினார் கண்ணன்..

பைக்
இதில் நிலைகுலைந்து கீழே கஸ்தூரி விழவும், அதற்குள் பைக்கில் இருந்து ஒரு பெரிய அரிவாளை எடுத்து கஸ்தூரியை கழுத்திலேயே வெட்டிவிட்டார் கண்ணன்.. இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்... அடுத்த செகண்டே கண்ணன் பைக்கில் எஸ்கேப் ஆகிவிட்டார்.. இந்த கொலை பற்றிய தகவல் அறிந்த புளியரை போலீசார், புளியங்குடி போலீசாருக்கு தகவல் சொல்லவும், அவர்கள் விரைந்து வந்தனர்.

கஸ்தூரி
விஷயத்தை கேள்விப்பட்டதும், தன்னுடைய வீட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்த கண்ணனை, சுற்றி வளைத்து பிடித்தும் விட்டனர்.. இதையடுத்து கிடுக்கிப்பிடி விசாரணையும் நடந்தது.. அப்போது கண்ணன் சொன்னதாவது, கல்யாணத்துக்கு முன்னாடியே கஸ்தூரி, தன்னுடைய கிராமத்தை சேர்ந்த ஒரு இளைஞரைக் காதலித்துள்ளார்... அந்த இளைஞருக்கு கல்யாணமாகிவிட்டது.. ஆனாலும், அவரையே நினைத்து கொண்டிருந்தார்.. அவரால் மறக்க முடியவில்லை..

ஜெயில்
இந்த சமயத்தில்தான் என்னுடன் திருமணம் நடந்தது.. இந்த கல்யாணத்தில் அவருக்கு இஷ்டம் இல்லை என்றும் தெரிந்தது.. தன்னுடைய பழைய காதலனுடனே வாழப் போவதாகவும் சொல்லவும் அதிர்ச்சியாகி விட்டேன்.. ஏற்கனவே என் மனைவி பிரிந்து போய்விட்டதால், நீயும் என்னை விட்டு போய் விடாதேன்னு கெஞ்சினேன்.. ஆனால் கஸ்தூரி முரண்டுபிடித்தார்.. இந்த ஆத்திரத்தில்தான் கொலை செய்தேன்" என்று தெரிவித்துள்ளார். இப்போது 2 மனைவிகளும் இல்லாத நிலையில், கண்ணன் ஜெயிலில் உள்ளார்.
-
17 வயது சிறுவனுடன் காதல் திருமணம்.. 22 வயது இளம்பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்து கொடுத்த விபரீத முடிவு! -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்? -
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது -
சட்டம் ஒழுங்கில் பெரிய ஓட்டை.. நாமக்கல்லில் தலைதூக்கிய துப்பாக்கி கலாச்சாரம்! 20 சவரன் நகை அபேஸ்! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications