சின்னத்திரை நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தர் சந்திரசேகர் அதிரடி கைது! பின்னணியில் ஷாக் காரணம்
சென்னை: சின்னத்திரை நடிகை மகாலட்சுமியின் கணவரும், திரைப்பட தயாரிப்பாளருமான ரவீந்தர் சந்திரசேகரை போலீசார் திடீரென கைது செய்துள்ளனர்.
சின்னத்திரை நடிகை மகாலட்சுமி. இவரது கணவர் ரவீந்தர் சந்திரசேகர். இவர் திரைப்பட தயாரிப்பாளராக உள்ளார். லிப்ரா புரோடக்சன்ஸ் எனும் பெயரில் படம் தயாரித்து வருகிறார். ரவீந்தர் சந்திரசேகர், மகாலட்சுமியை திருமணம் செய்ததில் இருந்து மிகவும் பிரபலமானார்.

மேலும் அடிக்கடி ரவீந்தர் சந்திரசேகர் சர்ச்சைகளிலும் சிக்கி வந்தார். இந்நிலையில் தான் தற்போது ரவீந்தர் சந்திரசேகரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது திடக்கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் தருவதாக கூறி போலி ஆவணங்களை தயாரித்து ரூ.16 கோடி வரை அவர் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த பாலாஜி என்பவர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதாவது திடக்கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் இருப்பதாக பாலாஜியிடம், ரவீந்தர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். மேலும் முதலீடு செய்தால் பங்குதாரராக சேர்த்து கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். இதை நம்பிய பாலாஜி ரூ.16 கோடியை ரவீந்தர் சந்திரசேகரிடம் வழங்கி உள்ளார். இதையடுத்து ரவீந்தர் சந்திரசேகர் அவரை ஏமாற்றியுள்ளார்.
இதனால் பாலாஜி சார்பில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார் தற்போது ரவீந்தர் சந்திரசேகரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் தான் ரவீந்தர் சந்திரசேகர் தனது மனைவி மகாலட்சுமியுடன் சேர்ந்து முதலாமாண்டு திருமண நாளை கொண்டாடினார். இத்தகைய சூழலில் அடுத்த சில நாட்களில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications